நீ கவிதை
மேத்தாவின் கவிதைபோல்
எளிமையாய் சிரித்திட்டாய்-
வைர்முத்து விஞ்ஞானம் என்னுள்ளே துளிர்க்கிறது-
கண்ணதாசன் வரிகள் போல் கருத்தாய் நீ பதிந்திட்டாய்-
கவிக்கோவின் பத்திபோல் கண்களுக்குள் மின்மினிட்டாய்-
கல்கி வார்த்தை போல்
கனவுக்குள் நிறைந்திட்டாய்-
கம்பனைப்போல் என்னை
இன்பமாய் திருடிட்டாய்-
சுஜாதாவின் சிந்தனைதான் உன
கூந்தலா?-அதற்குமேல் ஐன்ஸ்டீனும் குழம்பிநின்றதொரு தொடர்போ???
பாரதியின் புதுமைப்பெண் -உன்
கண்களோ ???-
பாவேந்தன் பாடியபெண் -உன்
விம்பமோ???
உமறுப்புலவன் கற்பனையோ?-
வள்ளுவன் தன் சொல்லழகோ??-
என்ன சொல்லி நான் விளிப்பேன்!!!
என்றாலும் நீ
கண்பார்த்து புன்னகை செய்-
கண்டமைந்தை வென்றிடுவேன்-
ஐந்து வரி நீ பேசு!-அமுதகவி
அஸ்மினை நான் வென்றிடுவேன்-
#சவாளையூர் முஜாஹித் அஹமத்