அவள்
எட்டு ஆண்டுகள் கழித்து
எதேச்சையாக அவளுக்கு மிக அருகில்
எதிர்படுகையில் என்னால்
அவள் கண்களை பார்த்து அவளிடம்
நான்கு வார்த்தைகள் பேசிவிட முடியுமெனில்
என்னால் சுழலும் இந்த உலகை
ஒரு நிமிடம் நிறுத்த முடியும்.
எனக்கு என்னவோ
சுழலும் உலகம்
நிற்காமல் சுழலவே
ஆசை