காதலின் அரசியல்

காதலின் அரசியல்

கலைஞர் கண்டெடுத்த கண்ணகி சிலை நீ...
நிமிர்ந்த வள்ளுவன் சிலையின் பாதம் கூசும் கடல் அலை நான்...
செழுமை தரும் இயற்கை என் காதல்...
அதனை அழிக்கும் எட்டு வழி சாலை உன் காதல்...
ஐப்பசி மழையாய் உன் மீது நான் பொழிந்த காதல்
வீணாகிறது அணை இல்லா ஆறாய்...
என் காதலை உன்னுள் சேர்த்து வைக்க
ஆகிறேன்… கலி காலத்திலும் ஒரு கரி கரிகாலனாய்...
என்னை முழுவதுமாக ஊழல் செய்தவளே...
என்னிடம் இருந்து தப்பி ஓட நினைப்பவளே...
காதலில் சிக்கி கொண்ட நான் மட்டும்
கடனில் இருந்து தப்ப முடியாத விவசாயி ஆனேன்...
எனை பார்த்தும் பார்க்காதது போல
சாலையை பெருக்கும் அமைச்சராய் நடிக்கிறாய்…
உனது அரசியல் தந்திரத்தை காட்டி கொடுத்தது
உன் ஓரக் பார்வை...

காவிரி நீராய் இழுபறி செய்யாதே
விதைக்க காத்திருக்கும் விவசாயியாய்
கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறேன்...
உன் ஒரு வார்த்தைக்காக...

குழாய் அடி சண்டையென என் மனதில்
ஆரவாரம் செய்து கொண்டிருப்பவளே…
கீழே விழுந்த குடமாய்
மனம் நொருங்குகின்றது...
உன் ஓர இதழ் புன்னகையில்...

திருடனுக்கே மாத்தி மாத்தி ஓட்டு போடுவதாய்…
உனை குறை கூறிக்கொண்டே
உனை மட்டுமே பின் தொடர்கிறது என் உலகம்...

எனை மறந்த தேர்தல் வாக்குறுதி நீ
தேர்தல் நேர ரொக்கம் நீ
இலவச பொருட்களும் நீ
கோடைகால மின் வெட்டு நீ
மழைகால வடியாத வடிகால் நீ
வாரிசு அரசியலும் நீ
தாமதமாக கிடைக்கும் நீதி நீ
கட்டப்படாத பாலம் நீ
தினம் தினம் ஏமாந்து போகும் சாதாரண குடி மகன் நானடி...


படைப்பு: செ.அந்தோணி லாரன்ஸ்
அலைபேசி: 7401319412
இடம்: திருவொற்றியூர், சென்னை - 19

எழுதியவர் : கவிதை Tamizhan (22-Jul-19, 11:59 am)
சேர்த்தது : 7
Tanglish : kathalin arasiyal
பார்வை : 117

மேலே