இதய எழில் ராணி

குங்குமத்தில் குளித்த மேனி
குயில் ராகம் குரல் ஓசை
மழை மேகம் கார் கூந்தல்
மலர் ரோஜா செவ்விதழ்கள்
பஞ்சு மலர் அவள் கால்கள்
பிஞ்சு வெண்டைக் கைவிரல்கள்
வளர் பிறையில் செய்த நுதல்
முழு மதியில் இழைத்த முகம்
கொத்து மல்லிப் பூ வாடை
உடல் பூத்த மலர் மேடை
கங்கை நதி பெருகுதல் போல்
காணக் காண அழகு கூடும்
பெண்ணவளே உன் நினைப்பு
கொம்புத்தேன் சுவையாய் வந்து
கொத்தாய் நெஞ்சில் ஊறுதடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Jul-19, 1:16 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ithaya ezil raani
பார்வை : 165

மேலே