தண்ணீர் தண்ணீர் கட்டுரை

தண்ணீர் தண்ணீர்
வெறுமையின் ஓலங்கள் நீரத் தொட்டிகளில்
விரக்தியில் மனிதன் . வீம்புக்கு விலைபேசும் ஆட்சிகள்
மனிதாபிமானம் காற்றில் பறக்கின்றது
மனிதனோ வெறுப்பில், கடுப்பில்
ஏன் இப்படியொரு சோதனை /
இறைவன் சோதிக்கத் தொடங்கினால்....
.
எதைநோக்கி எப்படி மனிதன் வாழ்வது
ஏழை எளிய மக்கள் நீருக்காக
குடங்களுடன் தெரு தெருவாய்
வரிகளில் வெயிலில் வியர்க்க வியர்க்க
தண்ணீர் லாரிகளின் பின்னே
கொஞ்சம் வரியில் நிற்பவர் முன்னால் சென்றால்
மிகப் பெரிய கலவரமே வெடித்துவிடும் ,
குழாய்க்கிணறுகளில் நீர் எடுக்கும் கூட்டங்கள் ஒருபுறம் ,
குடிநீர் இன்றி தவிக்கும் குடி மக்களின் அவல நிலை மறுபுறம் ,
எந்த சலனமும் இன்றி சுமுகமான வாழ்கை இன்னொரு புறம் .

இயற்கையில் இயங்கும் மனித வாழ்வில்
இத்தனை தடங்கல் ஏனோ/ காயங்கள் ஏனோ /
மனசு வலிக்குதய்யா, மனிதன் மயங்குகிறான் ,
மரணத்தின் விளிம்பில் மனிதனின் வாழ்கை
புரிகிறது அலைபோல் மனிதன் அலைக்கழிக்கப் படுகின்றான்
இவை யாவும் அகிலத்தின் அழிவை நோக்கியே

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Jul-19, 12:15 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 2379

சிறந்த கட்டுரைகள்

மேலே