இலவசம்

மந்திரி :- மன்னா நம் மக்களுள் பஞ்சம், பசி, பட்டினி தலை விரித்து ஆடுகிறது இதனை மற்ற நாட்டு மன்னர்கள் கேட்டால் நம் நாட்டையும் நாட்டு மன்னர் உங்களையும் ஏளனமாக பார்ப்பார்கள் சிரிப்பார்கள் பேசுவார்கள் மன்னா

மன்னன்:- அப்படியா...அப்படியென்றால் வீட்டுக்கொரு சீப்பு... இல்லையில்லை ஆளுக்கொரு சீப்பு அதுவும் இலவசமாக தர உடனே ஏற்பாடு செய் அண்டை நாட்டின் மன்னர்கள் காதுக்கு எட்டுவதற்கு முன் ஏற்பாடு செய்து விடு சீக்கிரமாக சீவிக்கொள்ளட்டும், அப்படியே உங்கள் தலையும் பனம்பழத்தை சீப்பிப்போட்ட பனங்கொட்டை போலத்தான் தெரிகிறது நீங்களும் சீப்பில் ஒன்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் மக்கள் முக்கியம் அவர்கள் இல்லையேல் நாத்தமா நாறிவிடும்

மந்திரி:- எது கூவம் நதியா மன்னா

மன்னன்:- உனக்கெல்லாம் மந்திரி பதவி யார் எந்த மடையன் கொடுத்தது...நம் பொழப்பை சொன்னேன் நாறிவிடும் என்று

மந்திரி:- ................!!!!

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 9:13 pm)
Tanglish : elavasam
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே