காளான்
அம்மச்சி:- அடே பேராண்டி இங்கே வா...இந்தா முப்பது ரூபாய் , காய்க்கறி கடைக்கு போய் ஒரு மூனு பாக்கிட்டு மசுரும் வாங்கிட்டு வா...
பேராண்டி :- அது காய்கறி கடையில விக்கிறது இல்லை அம்மச்சி அது சவரக்கடையில கெடைக்கும் அதுக்கு காசு தேவை இல்லை அம்மணி இரு இதோ வந்துட்டேன்... (ஓட்டம் பிடித்தான்)
அம்மச்சி:- டேய்...டேய்...டேய். இங்கே வாடா மசுரும்னா காளான்டா ...சமையல் பண்ற காளான் அது சவரக்கடையில கெடைக்காது காய்க்கறி கடையில் தான் கெடைக்கும் போய் வாங்கியா
பேராண்டி:- ஐயோ அம்மச்சி அது குப்பையிலே மொளைச்சி கெடக்கு அம்மணி அதுக்கெதுக்கு காசு நான் போய் பறித்து வாரேன் இரு
அம்மணி:- ஐயோ... இவனுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே எப்பா நீ போடா நானே போய் வாங்கிக்கிறேன்
பேராண்டி:- ............!!!!
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்