ராஜா
ராஜா....
வைர கிரீடத்தை தலையில் சுமந்து
முத்து மாலை அனிந்து
பவள மோதிரம் விரல்களில் மின்ன
தங்க ஆபரணங்கள் ஆடையாய் அனிந்து வண்ணம்
தங்க சாலையில் கம்பீரமாக நடக்கிறேன்.
வழி நெடுகிலிலும் இரு பக்கமும் சேவகர்கள் பொற் காசுகளை என் மீது அள்ளி வீசி வரவேற்க
எதிரே வந்த அழகான மங்கையர் கூட்டம் என் கையில் இருக்கும் தங்க மாலை யார் கழுத்தில் விழும் என காத்திருக்க....
சுளீர் என முகத்தில் வெய்யில் அடிக்க
சட்டென கண் விழித்தேன் .. அவ்வளவும் கனவா...
தரித்திரம் திங்கட்கிழமை அதுவுமா... எப்படி தூங்கராம்பாரு.. அம்மா புலம்ப....
- பாலு