ஆகலாம் கலாமாய் ஆகலாம்

சிறு வனிகம் செய்தாலும்
பெரும் மனிதன் ஆகலாம்
பெருமையோடு புகழும் தேடலாம்
அறிவை பெருக்கி அன்பை வளர்த்தால்
நாமும் கலாம் ஆகலாம்.....
பொறியியல் ஒரு தீப் பொறி போல்
பொருத்தமான நேரத்தில்
பொருத்த வேண்டிய இடத்தில்
தொருத்தினால் நாமும் கலாமின்
அறிவுப்பாதையிலே நடை போடலாம்..
கறுத்த மேகத்தின் கருத்துக்களை அறிய
கறுத்த முடிக்குள் மறைந்திருக்கும்
சிறு மூளையை செலவழித்தால்
நாமும் விண்கலம் ஏற்றலாம்...
அஞ்ஞானத்தில் இருந்து விலகி
விஞ்ஞானத்தை ஆராய்ந்தால்
நாமும் கொஞ்சம் கலாம் அறிவைக்
காணலாம்.
இன மத பொறாமையைப் போக்கி
மனிதம் என்ற ஒன்றை நினைவில் நிறுத்தி
மக்களோடு மக்களாக கை கோர்த்தால்
நாமும் சிறு இதயங்களில் நிலையாகலாம்..
மறு பிறவி என்று ஒன்று இல்லை
இப் பிறவியிலே நட்பிறவியாக
நாமும் வாழ முயன்றால் நாளை
கலாம் பெயருடன் நம் பெயரும்
இணைக்கலாம்..
நாம் கற்றவையை
பிறருக்கும் கற்றுக் கொடுக்கும்
மனதுடன் இருந்து நாம் மட்டும் பேரோடும்
புகழோடும் உலகில் வலம் வரவேண்டும்
என்ற ஈனப்புத்தியை விரட்டி விட்டு
ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி
ஏழைகளை அரவணைத்து அவர்களையும்
உலகில் தலை நிமிரச் செய்தால் நாமும்
கலாம் ஆகலாம் .....
புகழின் உச்சியில் ஏறினாலும்
நான் மண்ணில் நடமாடும் மனிதன்
என்பதை மறவாது மனிதநேயத்தோடு
வாழ்ந்தால் பார்ப்போர் போற்ற
பெரியோர் வாழ்த்த சிறியோர்
மதிக்க முன் இருக்கை நம்மை அழைக்க
மேடையிலே வரவு கிடைக்க நாமும்
கலாம் போல் வாழலாம்.....