ஏற்ற தாழ்வு
ஏற்ற தாழ்வு !
கட்டிடங்கள் உயர்ந்தன
மரங்கள் குறைந்தன !
தண்ணீர் விலை உயர்ந்த
நிலத்தடி நீர் குறைந்தன !
வாகனங்கள் உயர்ந்தன
தூய்மையான காற்று குறைந்தன !
கல்லூரிகள்
கல்வி தரம் குறைந்தன !
செல்பேசிகள் அதிகரித்தன
முகம் மலர்ந்தது கலந்து பேசி மகிழ்தல் குறைந்தன !
அறிவியல் நுட்பங்கள் அதிகரித்தன
இயற்கை வளங்கள் குறைந்தன !
மதங்களில் மட்டுமே இருந்த ஏற்ற தாழ்வு....
இப்போழுது இயற்கையிலும் !!!!