மழையில் சில மகிழ்ச்சிகள்
தென்றலில் ஆடுது தேன்மலர் பூங்கிண்ணம்
வண்டுகளின் தேனிசைரா கம் .
முகில்களின் ஆட்டத்தில் மின்னலின் கீற்று
மழையிலாடும் பூந்தென்னங் கீற்று
மழைநீர்சொட் டுக்கள் இலைகளில் பூக்களில்
நெஞ்சில் கவிதையோ டை
குருவி குழிமழை நீரினில்நீ ராடி
சிலிர்த்துப் பறந்ததுவா னில்
நண்டு நகர்ந்து நகர்ந்து தனதுவளை
தேடுது வான்மழைச்சேற் றில்