மனம் மாறிவா மழையே

பொழியாத ஊர்களுக்கு பிழைகளைய வழிச்சொல்லு
போதுமென்று கூறுமூரில் பொழிந்து வழிவதேனோ
உழுதுப் பிழைப்போர் அழுது வாழுகின்றனர்
உதிக்கும் கதிரோ கொதிக்கும் நிலையிலே

பழமையைப் போற்றியே பழகி வாழ்ந்துவிட்டோம்
பருவத்தில் பொழியும் பழமை மறந்ததேனோ
பொழியாததால் செழிக்கின்றர் உன்னை விற்று
புயலால் மட்டுமே புறப்பட்டு வருவாயோ

நல்லவர் ஒருவர் இருந்தால் பொழிவாயாமே
நாட்டில் இல்லையோ ஒருவர்கூட நல்லோர்
நீயில்லாமல் எதுவும் நல்லாவே இல்லை
வெள்ளக்காடாய் மாற்றி வெல்லம் கொடுத்திடுக.

மாதந்தோறும் மும்முறை பொழிந்து சிறந்தாயே
மாற்றங்கொண்டு மாறிச்சென்று மறைந்தது ஏனோ
மக்களைப் போன்றே மாறிவிடதே மகத்துவமே
மாவாய் மாறிவிடும் மாபெரும் உலகம்.
- - - - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Aug-19, 9:53 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 127

மேலே