சாராயமும் சவுக்கும்

பெண் பிள்ளைகள் மட்டுமே பெற்ற தாய்க்கு தான் இவ்வலி புரியும்.

வறுமையிடம் கொத்தடிமையாய் வாழ்ந்த குடும்பம்.அந்த குடும்பத்தில் வளர்ந்தவள் பெயர் சீதா.அழகிய மேனியும்,அழுக்கான ஆடையும் அணிந்து,தன் கிராமத்தில் இருந்து,பக்கத்து நகர்க்கு வேலைக்கு நகர்ந்தாள்.தினமும் அழுக்கு சட்டை பாவடையும்,தூக்குசட்டியோடு வந்து வந்து சென்றாள்.அவள் வேலை பார்க்கும் இடமோ சவுக்கு திரிக்கும் ஆலை.

அதே ஊரில் கருநிறத்தில்,கழுத்தில்கயிற்றுடன்,கொடூரப்பார்வையும், சுண்டி இழுக்கும் உடலுடன்,அடங்கா காளையாய் மருது வலம் வந்தான்.கள்ள சாராயம் காய்ச்சி,விற்பதே தொழில்.காவல் துறையிடம் அவன் சரண் அடைவதும்,காவல்துறை அவனிடம் சரண் அடைவதும் வாடிக்கையான ஒன்று.அடிதடி, தகராறு என சினிமாவில் காட்டும் வில்லனை போல் இருப்பான்.தினமும் குடி,கறி என கூத்தாடும் மருது.

சீதா சவுக்கு வேலை முடித்து வரும் போது,மருதுவை காவல்துறை அடித்து இழுத்து சென்றது.அதனை கண்ட சீதா,மிரண்டு பார்த்து கொண்டிருந்தாள்.உடன் வந்தவர்கள் சீதா என நகர்த்தினார்கள்.காலம் கடந்தது,மருது வெளியில் வந்து,தன்னை புகார் செய்தவனை துரத்தி துரத்தி அடித்துக்கொண்டிருந்தான்.அக்கம் பக்கத்தினர்,மழைக்கு ஒதுங்கிய மந்தை ஆடுகளாய்,ஒன்றன் பின் ஒன்றாய் குளிர் காய்ந்தனர்.

ஒரு நாள்,சீதா தனியாக வருவதை அறிந்து,அவளை மறித்தான், பயந்த மான், பாயுகின்ற அம்புவிடம் மாட்டியது போல்,அவள் நெஞ்சம் ஆனது.உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்.என்ன சரியா? என கேட்க,மரத்தில் இருந்த பூ,நழுவுகிற மௌனம் சீதா மனதில்,ஒன்றும் கூற முடியாமல்,குணிந்து திகைத்து நின்றாள்.மருதுவின் தாயார் எ..ழே... மருது... என சத்தத்தில் ஓங்க,மருதுவின் பின்னால் நின்ற காவல் துறை அதிகாரி,எட்டி உதைத்தார்.தடுமாறிய மருது,சீதாவை தள்ளியபடி,தரையில் விழுந்தான்.

சீதாவிற்கு பின் தலையில் பலத்த காயத்துடன்,அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.மருதுவை காவல் துறை கைது செய்து,புகார் கொடுத்தவனையே அடிக்கிறியா,என்று கூறி நான்கு முடிந்து,அடுத்த பிரம்பில் வெளுத்து வாங்கினர்.மருதுவின் உடல் மட்டுமே காவல் நிலையத்தில்,உயிர் சீதாவிற்கு காவலாய் சென்றது.சீதாவை காண அவளது பெற்றோர்கள்,கதறி கொண்டு அழுதபடி வந்தனர்.சிகிச்சை முடிந்து கண் திறந்தவளிடம்,சீதா என்னம்மா ஆச்சு,என சீதா அம்மா கதற,சத்தம் போடாதீங்கன்னு பணிப்பெண் அதற்ற அமைதியாகினர்.

மருதுவின் அம்மா,யோவ் வக்கிலு,அங்க என்னா புடுங்கிட்டு இருக்க,ஜாமீன் கடுதாசிய குடுயா.வெளிய வந்த மருது.அம்மா நீ கடைக்கு போ,நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வந்தர்ரேன்,என்று கூறினான்.சீதாவை பார்த்து,எப்டி இருக்க என்று விசாரித்தான்.சீதா மௌனமாக,தலையை தந்தையை பார்த்து சாய்க்க.நீங்க யாருங்க தம்பி,என கேட்க.மருது நீ யாருய்ய,என மிரட்டும் பார்வையோடு கேட்டான்.தயங்கியபடியே,நான் சீதா அப்பா என்றார்.அப்டியா நான் அவ புருஷன் என கூறி நகர்ந்தான்.சீதாவும்,அவள் குடும்பமும்,பேரதிர்ச்சியில் உறைந்தனர்.

மருத்துவரின் அறிவுரை முடிந்து,வீட்டிற்கு அனைவரும் வந்தனர்.மாலை நேரத்தில்,சீதா உறங்கி கொண்டிருந்தாள்.கதவை படார் என்று திறக்க,மருது உள்ளே நுழைந்தான்.அச்சத்தில் சீதா எழுந்து,அப்பா பின்னே நின்று கொண்டாள்.தம்பி எங்கள விற்றுங்க,என கண்ணீருடன் கதறினார்.மருதுவின் தாய்,தந்தை உள் நுழைந்து,தாம்பூலம் தட்டு உடன் நின்றனர்.மிரட்டியே சீதாவை நிச்சயிக்கப்பட்டு,திருமணம் முடிந்தது.

மருது விடாமல்,மீண்டும் உண்மையாலுமே புடிச்சு தான் கல்யாணம் பண்ணியா என்றான்.ஆமா என்றாள்.உங்கள பாத்தா பயமா இருக்கு என்றாள்.சரி,எனக்கு ஒரே ஒரு ஆசை என்று,சீதாவின் கையை புடிச்சுக்கிட்டு,எனக்கு ஒரு ஆம்பள பிள்ளை மட்டும்,பெத்துக்கொடு போதும்.உடனே ஒன்னு இல்ல,பத்து பெத்து தரேன்.அடி ஊமைச்சி இந்தளவுக்கு பேசுவியா...சரி வா,அதுக்குள்ளயே அவசரமா?பொறுங்க...இனி என்னால்ல பொறுக்க முடியாது,என அணைத்துக் கொண்டான் விளக்கை.

சிறிது மாதங்களில்,வளைகாப்பு முடிந்த சீதாவை,பொறந்த வீட்டிற்கு அழைத்து சென்றனர்.சில நாட்களில்,மருதுவை காவல்துறை,கைது செய்தது.மீண்டு வெளி வந்த மருது,சீதாவ ஆஸ்பத்திரில்ல சேர்த்துருக்காங்க,என கூறினார்கள்.மருத்துவமனைக்கு விரைந்தனர் அனைவரும். நிறை மாத கர்ப்பத்துடன்,சீதாவை மருத்துவமனையில் சேர்க்க,.அவரவர் மனதில் ஆண்,பெண் என மனக்கணக்கு போட்டிருந்தனர்.

உள்ளே இருந்து,மருத்துவர் வெளியே வந்தார்.சிரித்த முகத்துடன் மருது,பயம் கலந்த மகிழ்ச்சியில்,டாக்டர் என கூற,ஒன்னும் பிரச்சினையில்லை.
உங்களுக்கு பொம்பளப் பிள்ளை,வாழ்த்துக்கள் என டாக்டர் கூறியவுடன்,ஆணியில் புரளும் இதயம் போன்று ஆனது,மருதுவின் மனம்.மருதுவின் பெற்றோர்கள் இடிந்து போயினர்.சாராயம் விற்று சம்பாதித்த,இவ்வளவு சொத்திற்கு வாரிசு இல்லையே,என குமுறல்களுடன் வீட்டிற்கு சென்றனர்.பாவம் அந்த குழந்தையின்,முகத்தைக்கூட காணாமல் நகர்ந்தது வேதனைக்குரியது.சீதாவின் பெற்றோர்கள்,அள்ளி அணைத்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.சீதா கண் விழித்து,அம்மா எங்கம்மா அவரு,தாய் அமைதியாக நின்றாள்.இந்தா இப்ப தான்,அவசர வேலையா போனாரு என்று அவள் அப்பா கூறினார்.

சீதா மற்றும் பெற்றோர்கள்,கொள்ளை மகிழ்ச்சியில் பறந்தனர்.சிகிச்சை முடிந்து,வீட்டிற்கு சென்றனர்.ஒரு மாத காலமாகியும்,மருதுவின் குடும்பத்தினர் செவி சாய்க்கவில்லை.மருதுவின் வீட்டிற்கு குழந்தையுடன்,சீதா மற்றும் அவள் பெற்றோர்கள் சென்றனர்.

இரவானது மருது மது போதையில் தள்ளாடி,வீட்டிற்கு வந்தான்.சீதாவை பார்த்ததும்,கண்டுகொள்ளாமல் நகர்ந்தான்.என்ன புள்ள பெத்து வச்சிருக்க,பொட்டக் கழுதைய,அருந்தநாறு சிறுக்கி என மருதுவின் தாய் வசைபாட.குழந்தை உட்பட,சீதா குடும்பமே கண்ணீரில்,கரைந்து கொண்டு இருந்தது.
மருது போதையில்,திரும்பி வந்து,அவன் போதைக்கு அவன் அசிங்கமாக பேசினான்.சீதாவின் பெற்றோர்களை வெளியே அனுப்பி,சீதாவை உறவுக்கு அழைத்து துன்புறுத்தினான்.கைக்குழந்தை கதற,சீதா பதற அறையே தள்ளாடியது.விடிந்தவுடன் மருது வெளியே வந்தான்.இரவு சண்டையில்,அரைத் தூக்கத்தில் எழுந்து,உள்ளே சென்றனர் சீதா பெற்றோர்கள்.அரை குறை ஆடையில்,மயக்கத்தில் கிடந்தாள் சீதா.

அழுதபடியே,ஆடைகளை சரி செய்தாள்,அவள் அம்மா.கதறி அழுது புலம்பினார்,அவள் அப்பா.மருதுவிடம் மாப்ள,நாங்க வீட்டுக்கு போறோம்ன்னு,சீதா அப்பா தயக்கத்துடன் கேட்க,வாய் கொப்பளித்துக் கொண்டிருந்தவன்,பீய்ச்சி அவர் மேலே பொழிந்தான்.சரி போங்க என்றான்.மூவரும் குழந்தையுடன் நகர்ந்தனர்.நீ எங்கடி போற,உன் புருசன் வீடு அங்கயா இருக்கு,என மருது கேட்க,கதறி அழுதாள் சீதா.உள்ள போடி துப்புக்கெட்ட மவளே,என அசிங்கமாக வசைபாடினான்.நீ உள்ள போம்மா,என சீதா அப்பா கூற,உள்ளே கண்ணீருடன் சென்றாள்.

வாழ்க்கை நகர்ந்தது.பிள்ளையை காப்பாற்றுவதா,தன்னை காப்பதா என மனதிற்குள் பயம்.கண்ணீருடன்,கருவை தடவி கொடுத்தாள்.எல்லாம் சில காலம் என ஓடியது.

மீண்டும்,நிறை மாதமாக சீதாவை,மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதே மருத்துவமனை..
அதே அறை...
அதே மருத்துவர்...
அதே பதில்..
ஆனால்,சீதா வாழ்க்கை ?????

தமிழுடன்
கதா...

எழுதியவர் : கதா (2-Aug-19, 1:44 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 177

மேலே