சரிதான் ஆனால் சரியில்லை

சரிதான் ஆனா சரியில்லை

முன் விரோதமானது அடி தடின்னு கையில ஆயுதத்தை எடுத்து குண்டன் என்று பேராயிடுது, அவனை பார்த்து பயப்படுறாங்களே ஒழிய, யாரும் மதிக்கிறது இல்லை அதனால் இந்த எதிரி கொஞ்சம் தயவு தாட்சண்யமின்றி ஒரு முறையை கையாண்டான்

தன்னோட எதிரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என வளர்க்கும் மகளின் அழகை குலைத்துவிட்டால் அவளை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க அவளை பெற்றோர் பார்க்கிறப்போ வெல்லாம் சிந்தனைகளில், மானம், மரியாதை, கௌரவத்தில் வலி உண்டாகி நிலைகுலைந்து போவார் என்று

அவர்களை நான் பழிதீர்க்க வழிவகுத்தவனை, நானும் பழிக்குப் பழி வாங்கியதாக என் மனம் அமைதியாக இருக்கும் அவனின் அன்பு மகளை துருப்புக்காயாக நகர்த்துவோம் என்று மனதில் கொண்டு அடியாட்கள் மூலம் அவளை அடையாளம் காட்டி அடிக்க உதைக்கவெல்லாம் வேண்டாம்;

அவளை கடத்தி பலாத்காரம் செய்யச்சொல்லி எடக்கு மொடக்கா
செய்துவிட்டு அடியாட்கள் தானும் மாட்டிக்கொண்டு நம்மையும் மாட்டிவிடாமலிருக்க பார்த்து கொள்வதே; புத்திச்சாலிதனம் என்று

இதற்கு திராவகம் தான் ஒரேவழி யாரும் பார்க்காதபடி திராவகத்தை அவள் மேல் ஊற்றி அவள் அழகை சிதைத்து விட்டால் எதிரியின் ஆட்டம் நம்மிடம் மேற்கொண்டு மோதலாமா வேண்டாமா என்று யோசிக்க தொடங்கிவிடுவான் அதோடு அடங்கி விடும், அவளை பார்க்கிற போதெல்லாம் அவன் பதறுனும் பார்த்து கதறனும் வேணாம்பா இதோட நம்ம பகையை முடிச்சிகலாம் என்று என் காலில் விழுந்து மன்னிப்புக் கேக்கணும் என்றெண்ணினான் ஆட்களை உசுப்பி விட்டான்

நடந்தது என்ன கல்லூரி முடிந்து அவள் அவளின் பாலிய சிநேகிதனோடு பேசிக்கொண்டு வெளியில் வரும் வேளையில் "" என்ன எல்லாரும் அறிவாளின்னு ரொம்பத்தான் புகழுறாங்க உன்னை "" என்றாள்

க்ளாஸ்ல சார் ஒரு பழமொழி சொன்னார் ஆறு கெட நாணல் விடு ஊரு கெட நூல் விடுன்னார் இதுக்கு அர்த்தம் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க என்றார் ஒருத்தி எழுந்து எதையோ சொன்னா அவ சொன்னது சரியா தவறான்னார் நான் எழுந்து தவறுன்னேன் விளக்கம் கேட்டார் ஆற்றங்கரையில் உள்ள மரம் செடி கொடி நாணல் உட்பட அவைகளின் வேர்கள் ஆற்றங்கரையில் உள்ள மண்ணை கரையவிடாமல் காக்கிறது , அடுத்தது நூல் என்பது துணி தைக்கும் நூல் அல்ல காற்றாடியைக்கட்டி பறக்கவிடும் நூல் அல்ல நூல் என்றால் புத்தகங்கள் அதுகளை படிக்காத ஊர் கெடும் என்று அர்த்தம் என்றேன் நான் சொன்னது சர்க்கு சரியென தோன்றி இருக்கு அதனால உங்களை கைதட்டச் சொன்னார் நீங்களும் தட்டினீங்க அவ்வளவ்வுதான் இது அறிவாளி சொன்னது என்னவோ தெரியாது ற கிராமத்திலேயே யாரை கேட்டாலும் சொல்வார்கள் ஏன் உனக்கு பொறாமையா இருக்கா, அப்படி இருந்தா உன் கூந்தலில் ஒரு இழையை எடுத்து சுருக்கு போட்டு கழுத்தில் மாட்டி தொங்க வேண்டியது தானே, எங்க அம்மா சத்தியமாக என்னை இப்படியெல்லாம் புகழச்சொல்லி நான் யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சமாக கொடுக்கல ஒரு டீக்கூட வாக்கி கொடுத்ததில்லை ""

சிரித்துக் கொண்டே "" சரி இப்போ நான் சொல்லப்போறதில இருந்து அதில் குறிப்பிடப்படும் நபர் எத்தனையாவதாக பிறந்தவராக இருக்கும் என்று நீ பதில் சொல்றே ""

"" ஓக்கே ""

"" நல்லா கவணமாக கேளு ஒரு குழந்தை குடிச்சிட்டு மிச்சம் வச்ச எச்ச பாலை குடிச்சதில்லை, அக்குழந்தை குடிச்சிட்டு வச்ச மிச்சமுள்ள எச்சப் பாலை குடிக்க வேறு குழந்தை இல்லை அப்படின்னா அக்குழந்தை எத்தனையாவதாக பிறந்ததாக இருக்கனும் சொல்லு பார்க்கலாம் ""

"" ஃபிரியாவா ""

"" ஓக்கே கரைக்ட்டா சொல்லிட்டா நான் ட்ரீட்டு கொடுக்கிறேன் சொல்ல முடியலன்னா நீ ட்ரீட்டு கொடு ""

"" ட்ரீட்டுக்காக பதில் சொல்ல என்னை என்ன சோத்துமாடுன்னு நெனைச்சியா முன்பும் யாரும் பிறக்கவில்லை, பின்பும் யாரும் பிறக்க வில்லை தட்மீன்ஸ் ஒன்லி ஒன் அது நீயே தான் ""

"" ஷிட்.......""

"" இப்போ தெரியுதா என்னை எல்லாரும் ஏன் சொன்னாங்கன்னு சொத்த சொத்தையா யோசிச்சா இப்படி தான் ""

அந்த அடியாட்கள் விரலை நீட்டி"" அதோ ரோசாப்பூ நிர சுடிதார் உடுத்தி வருகிறாளே அவள்தான் "" அவள் முகத்தில் ஊற்றி விடச்சொல்லி காட்டிக்கொண்டிருப்பதை அவளது சிநேகிதன் நோட்டமிட்டுவிட்டான்

நம் சிநேகிதிக்கு ஏதோ ஆபத்து என்று சந்தேகப்பட்டு கல்லூரி மதில் கதவுக்கு வெளியில் போகவிடாமல் அவளுக்கு சொன்னால் பயந்துவிடுவாளோ என்று சொல்லாமல் அவளை வெளியே போகவிடாமல் தடுத்தான் தடுக்கும் போது அவனின் கை தொடக்கூடாத இடத்தை அவனையறியாமல் பட்டுவிட்டது

அந்த தடுப்பினை அவள் தவறாக புரிந்து கொண்டு அவள் தனது விரும்பியை நம்மிடம் ஏதோ தவறான எண்ணத்தில் நடக்க இருப்பதாக நினைத்து விருப்பியை படு கேவலமான வார்த்தை களால் பேசினாள் மனது புண்படும்படி மோசமாக கடிந்து கொண்டாள்

நீ நினைப்பது போல் பிறர் தவறு செய்வதை கண்ணால் பார்த்ததும் இல்லை, பிறர் சொல்ல காதால் கேட்டதும் இல்லை, அதை வைத்து உன்னிடம் தவறாக நடக்க நினைத்ததும் இல்லை, அதைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தால் தானே நான் உன்னிடம் தவறாக நடப்பதற்கு, அது உனக்கு தெரிந்து இருக்கிறது

அப்படியானால் நான் தவறு செஞ்சவளா அப்படி தானே சொல்லவர

தவறு செய்வதும் செய்யாமல் இருப்பதும் உன் இஷ்டம் அதை சுட்டி காட்ட எனக்கு எந்த உரிமையும் கிடையாது நீ சொல்லும் தவறைப்பற்றி எனக்குத்தெரியாது வீணாக என்னை கடிகிறாய் இது நல்லதல்ல மறுபடியும் சொல்றேன் என் மனசாட்சிக்கு விரோதமா வேண்டுமென்று எந்த தவறையும் செய்யவில்லை நம்பிக்கை இருந்தால் நம்பு இல்லையா விடு ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்றான்

அவனை விட்டு விலகி அவனை பின்னால் விட்டுவிட்டு அவள் முன்னால் நடந்து செல்லும் போது ரோசாப்பூ சுடிதார்காரிதான் குறிபார்த்து முகத்தில் ஆசீடை ஊற்றிவிட்டு மறைந்து விடு என்று பேசிக்கொண்டது அவள் காதில் விழுந்து விட்டது

அதனால் அவள் நடையை பின்னுக்கு வாங்குவதை அறிந்த அடியாட்கள் துறத்த முயன்றதை அறிந்து பின்னோக்கி ஓடிவந்து
தனது சிநேகிதனை அவளை அறியாமலேயே ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டாள்

அவன் மரக்கட்டை போல் நின்றிருந்தான் கைகளை தொங்கபோட்டு

தம்மை கட்டிப்பிடித்தவளை விடுவித்து கொண்டு அடியாட்களை எகிரி அருகில் இருந்த மரக்கிளை ஒன்றை ஒடித்து ஓடிவந்தவனை அடித்து விரட்டிக் கொண்டு இருக்க , அவள் பயத்தால் தாம் என்ன செய்கிறோம் என்று அவளை அறியாமலேயே மீண்டும் அவள் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்

அப்போதும் அவன் ஜடம் போல் நின்றிருந்தான் அவளை கைகளால் கட்டி அனைக்கவே இல்லை அந்த உணர்வு அவனிடம் இருந்தது ஆனாலும் கௌரவப்பிரச்சனை காட்டிக்கொள்ள வில்லை

அந்த இடத்தில் வேறு எவனாவது இருந்திருந்தால் சும்மாவா விட்டிருப்பான் இதுதாண்டா சாக்கு என்று வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி பாக்கு சேர்த்து கடைவாயில் வைத்து கசகசவென்று மென்று விழுங்கிவிட்டிருப்பான் புதிதாக ஒரு பிரச்சினை உருவெடுத்து இருக்கும்

சாலையில் இருந்து மரத்தில் ஒலிந்திருந்த ஒருவன் திராவகத்தை அவள் மேல் வீசிட முனையும் அவனை கண்டுவிட்டதால் அவள் மேல் படாதபடிக்கு காத்திட செய்யும் போது
அவள் மேல் விழாதபடிக்கு அவளை தள்ளிவிட அவள் கீழே விழுந்து உருண்டோடினாள் அவள் மேல் விழ இருந்த திராவகம் இவன் மேல் விழ துடிதுடித்து விழுந்தான்

அதனை கவணித்த அடியாட்கள் ஓட்டம் பிடித்தனர் இதனை அறிந்த சகமாணவர்கள் ஓடி அடியாட்களுடன் சண்டையிட்டு ஒருவனை பிடித்து கைக்கால்களை கட்டி கேட்டபோது அடிதாள முடியாமல் தம்மை அனுப்பிய வில்லனை காட்டிக் கொடுத்தது

அம்பு எய்தவனின் சதியை உண்மை இன்னதென்று பிறகே அறிந்து கொண்டு ஓடினாள் அவனைக்காண திராவகம் வீசம்பட்டதும் மாணவர்கள் அவனை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து இருந்தனர்

ஓடினாள் ஆஸ்பத்திரி நோக்கி அவனிடம் போய் "" நீ அவர்கள் மேல் சந்தேகப்பட்டு எனக்கு விஷயத்தை பயந்துவிடுவேனோ என்று சொல்லாமல் தடுத்ததால் உன்னை தவறாக நினைத்து ஏதேதோ ஏசிவிட்டேன் என்னை மன்னித்து விடு
நண்பா என்று கதறினாள்

நீ எதற்கு இங்குவந்தாய் ஒன்னாம் வகுப்பில் இருந்து டிகிரி முடிக்கிறவரை முள்ளை ஒடித்து உன் மேல போட்டு இருப்பேனா உன்னை தொட்டு தான் பேசியிருப்பேனா இவ்வளவுதானா உன் நட்பு ஆமாம் ஏழ்மையானவன் தானே
யார் வேண்டுமானாலும் என்னவேணுமானாலும் பேசலாம் அதில் நீயும் அந்த வரிசையை சேர்ந்தவள் தான் என்று உணர்த்தி விட்டதற்காக நன்றி, ஏறச் சொன்னால் குதிரைக்கு கோபம் இறங்கச் சொன்னால் நொண்டிக்கு கோபம் விடு என்று இரு கைகளையும் சேர்த்து கும்பிடு போட்டு நீங்க போகலாம் என்றான் கண்கலங்க
இதைத்தான் தன் கையே தன்னை குத்தும் என்பதோ உன்னை அப்படித்தான் நினைத்திருந்தேன் நீ குத்தி விட்டாய் கண்ணைக் குத்த வில்லை என் இதயத்தில் குத்திவிட்டாய் பரவாயில்லை நல்லா இரு எங்கிருந் தாலும் நல்லா இரு இனிமேல் நீ என் கண்முன்னே வரக்கூடாது தானும் உன் கண்ணெதிரே வரமாட்டேன் ப்ளீஸ் லிவ் மீ அலோன் செத்து தொலைச்சி இருக்கலாம் என்னை இன்னும் உயிரோடு ஏன் வச்சிருக்கான் அந்த கடவுள்

அழுதுக்கொண்டே வீட்டுக்கு போனாள்
நெஞ்சிமேல் கிடந்த துப்பட்டா நனைந்து இருந்தது கண் கலங்கியதால் கண்கள் இரண்டு கோவைப்பழம் போல் சிவந்திருந்தது என்னம்மா என்ன ஆச்சி என்று கேட்டார்கள் நடந்ததை சொன்னாள் பெற்றோர்கள் ஓடோடி வந்தனர் தம்பி என் மகளுக்கு நேர இருந்ததை நீ ஏற்றுக்கொண்டாய் இதுவே அவளுக்கு நிகழ்ந்திருந்தால் அவள் எதிர்காலமே ஸ்தம்பித்து போயிருக்குமே அதை தடுக்க போய் உன் எதிர்காலத்தை ஸ்தம்பிக்க வைத்துக்கொண்டாயே தம்பி உனக்கு நன்றி சொன்னால் நன்றாக இருக்காது நன்றி கெட்டவன் ஆகிவிடுவேன் என்றே நினைக்கிறேன்

அதோடு நிறுத்திக்கொண்டு தன்மகளை தனிமையில் கூப்பிட்டு என்ன பேசினார்களோ தெரியவில்லை
உள்ளே வந்தார்கள் அதற்குள்

அவனது பெற்றோர்கள் தரையில் புரண்டு அழுவதைக்கண்டு அவர்கள் அழுகையை நிறுத்தி ஆறுதல் சொன்னார்

அவர்கள் ஏழ்மையின் சின்னமாக திகழ்ந்தார்கள், அழுக்கு ஆடை ஒட்டிய வயிறும் கண்ணமும், அவன் தாயின் அலங்கோல தலை ரோமங்கள் அவருக்கான ஆடை குளிக்காத வியர்வை வாசனை அவர்களையும் பையன் பெற்றோரையும் ஓப்பிட்டு பார்க்கையில் எட்டாத தூரத்தில் இருப்பதை உணர்ந்து அதை எதையும்
பொருள் கொள்ளாமல், ஏழ்மையின் வர்க்கத்தவர் என்று கருதாமல்

உயர்தர மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ ரீதியாக அவனது உண்மை முகத்தை உருவேற்றி தன் மகளையே அவனுக்கு கட்டி கொடுக்க முடிவு செய்து பையனிடம் பெண்ணின் தந்தை
"" உன் சிநேகிதி உன்னை கணவனாக் கிக்கொள்ள விரும்புகிறாள் எங்களுக்கு
முழு சம்மதம் என்றார்

ஜயோ அங்கிள் உங்க பொண்ணு என் நட்பை கொச்சை படுத்திவிட்டாள் அதனால் எனக்கு தாங்கள் சொல்வதில் சம்மதம் இல்லை என்றான்

ஹலோ...ஒன் மினிட்...என்னை பாருங்க சார்....என்னை மனைவியா ஏத்துக்காட்டா வேற எவளையும் உனக்கு மனைவியாக விடமாட்டேன் என் உயிரே போனாலும் அந்த ஆன்மா கூட உன்னை இழக்க சும்மா இருக்காது

உன்னால் என்னபண்ணமுடியுமோ அதை முதலில் பண்ணு போ

வர இருக்கிறவ வருவதற்கு முன்பே நான் இவருக்கு மூன்றாம் மாதம் கர்பமாகி இருக்கிறேன் இதுக்கு ஒரு வழி சொல்லிவிட்டு அப்புறம் தாலிகட்ட பொண்ணை தாலி கட்டிக்க அனுப்புங்க என்று சொல்வேன்

அடிப்பாவி....ஒன்றும் தெரியாத புள்ளப்பூச்சின்னு நெனைச்சேன் ஏகப்பட்ட கிரிமினல் மைண்டா ஸ்டோர் பண்ணி வச்சி இருக்காளே வேற வழியில்ல தாலியை கட்டி தொலைக்கிறேன்

கல்யாணம் செய்து வைத்து அவர்கள் எதிர்காலத்திற்கு வழியும் வகுத்து கொடுத்தனர்

இந்த ஜென்மத்தில் இந்த வசதி கிடைக்க சாத்தியக்கூறு இல்லாதார்க்கு
அமையலாயிற்று

பையனின் பெற்றோர்கள் ஐயா நன்றி கோடி ஐயா இப்போது நீங்கள் தந்துவிட்ட வசதி அவனுக்கு வரவே அவனை படிக்கவேண்டும் என்று படிக்வைத்தோம் பின்னால் கிடைக்க இருந்த அந்த தகுதியை தாங்கள் முன் கூட்டியே தந்துவிட்டீர்கள் எப்படி நன்றி சொல்வதென்று எங்களுக்கு புலப்படவில்லை ஐயா

நாங்கள் உங்க மகனை முதல் வகுப்பில்
இருந்து வீட்டுக்கு வருவான் அதுவும் அவனாக வரமாட்டான் மகள் போய் அவனை அழைத்து வருவாள், இவளுக்கு அவனைத்தவிர வேறு நண்பர்கள் கிடையாது, யாரும் இவளைத்தேடி வந்ததில்லை, இவளும் வேறு யாரையும் தேடி போவதில்லை காரணம் அவளுக்கு கணிதம் மண்டையில் ஏறவே ஏறாது, உங்க மகனால் தான் அவள் இவ்வளவு தூரம் வண்டியை ஓட்டிவர முடிந்தது, மகளிடம் அவனுக்கு தெரிந்ததை அவளுக்கு சொல்வான் அவனுக்கு தெரியாததை மகளிடம் கேட்டு தெரிந்து கொள்வான்
விளையாட்டுக்கு கூட அவளோடு விளையாடுவதை நாங்கள் கண்டதில்லை

அவ்வளவு மரியாதை உள்ளவன் என்பதை நினைத்து நானும் மனைவியும் பெருமை பட்டுக் கொண்டதுண்டு அதிலிருந்து அவர்கள் இருவர் விஷயத்தில் நாங்கள் இருவருமே தலையிடுவது இல்லை அதே சமயத்தில் மறந்தும் சந்தேக நோக்கோடு மறைந்து நின்று பார்ப்பது ; என்ன பேசிக்கொள் கிறார்கள் என்று ஒட்டு கேட்பது என்ற சங்கதி இல்லாமல் இருந்தோம் தாயே

எங்களுக்கு வசதி இருந்தால் என்ன ராஜாவாகிவிட முடியுமா என்ன, அது பரம்பரை பரம்பரையாக வந்த வசதி இல்லை; அது வரும்போது சொல்லாமல் கொள்ளாமல் வரும்,; போகும்போது சொல்லாமல் கொள்ளாமல் போய்விடும்; ஏன் எதற்கென்று அதனோடு வாதம் செய்யவெல்லாம் முடியாது, அது ஒரு நடமாடும் அதிர்ஷ்ட அரங்கம் அந்த மாதிரி எண்ணம் எனக்கு என் மனைவி என் மகள் மூவரிடத்திலுமே கிடையாது, நாங்கள் ஒன்னும் பரம்பரையாக பணக்காரர்கள் இல்லை ஏதோ கொடுத்தான் அனுபவிக்கிறோம் எங்கள் உடையையும் நடையையும் பார்த்து அதிகமாக மரியாதை கொடுத்து தயவு செய்து எங்களை அசிங்கப்படுத்தி விடாதீர்கள் ப்ளீஸ் என்று கேட்டுக்கொண்டார் பெண்ணின் தந்தை

நீங்கள் உயர்வு தாழ்வு மனதில் கொள்ளாது வாழ்க பல்லாண்டு என வாழ்த்தினர்

பையனுக்கு கிடைக்க முடியாத வாழ்க்கையை கிடைக்கச்செய்த கடவுளுக்கு நன்றி கூறினர்கள் அவனின் பெற்றோர்கள்

இதற்கு காரணமானவர்களுக்கு நன்றி அவர்கள் உங்களை எதிர்கவில்லை யென்றால் இப்படியொருத்தி எனக்கு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை அங்கிள் அவர்களை பழிதீர்க்கும் எண்ணம் இருந்தால் அதை தூக்கிப் போட்டுவிடுங்கள் அங்கிள் நீ என்ன சொல்றே பொண்டாட்டி நான் சொன்னது சரிதானே

நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனா சரியில்லை

அவங்களாலத்தான் ○நீ எனக்கும் நான் உனக்கும் ○ அமைஞ்சது அதனால்தான் சொன்னேன்

எல்லோரும் சிரித்தார்கள்

வாழ்க்கையும் மனைவியும் அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
•••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (2-Aug-19, 12:55 pm)
பார்வை : 257

மேலே