வா வாழ்ந்து பார்ப்போம்

எங்கே ஓடுகிறாய்? எதற்காக பயந்து ஓடுகிறாய் ?வாழத்தானே வந்திருக்கிறோம். வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான். பயந்து ஓடுவதற்காக அல்ல.அவனுக்கு அவள் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.அவன் உண்மையிலேயே மனதளவில் பயம் கொண்டவனாக தான் இருந்தான்.என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று தெரியாத ஒரு நிலை .ஒரு ஆசையில் ஒரு வேகத்தில் அவளை அழைத்துக்கொண்டு வந்து விட்டான்.இது காதல் என்பதா ?அல்லது மோகம் என்பதா? ஆசை என்பதா என்று அவனுக்கு தெரியவில்லை. எத்தனையோ படங்களை பார்த்து இருக்கிறான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு செல்லில் இருக்கின்ற தேவையில்லாத எல்லாம் பார்த்து மனதில் தேவையற்ற எண்ணங்களை வளர்ந்திருக்கிறான் இது சரியான எண்ணம் தானா ?அல்லது இது வாழ்க்கைக்கு உகந்ததா ?என்றெல்லாம் ஒரு குழப்பமாகவே இருக்கிறது அவள்மீண்டும் அவனை தட்டினாள்.ஏன் பயப்படுகிறாய் ?எதற்காக பயப்படுகிறாய் ?வாழ்வதற்காக வந்து விட்டோம் என்னஎன்று பார்த்து விடுவோம் . வயது என்ன தெரியுமா? என்னுடைய வயது என்ன தெரியுமா ?நாம் ஏதோ ஒரு ஆசையில் ஓடி வந்து ரயில் ஏறி இங்கு சுற்றி இதோ இங்க வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் இது தவறு என்று எனக்கு இப்பொழுது தெரிகிறது. அட
பைத்தியக்கார நீ தானே என்னை அழைத்து வந்தாய் நீ தானே என்னை ஆசையோடு கூட்டி வந்தாய். இப்பொழுது பயந்து கொண்டிருந்தால் எப்படி ?வரும் பெண்ணுக்கு அதிகமான துணிச்சல்தான் கல்லூரி முதல் ஆண்டில் நுழைகிறபோது இந்த துணிச்சல் அவளுக்கு இருந்தது .உண்மைதான் ஆனால் வாழ்ந்து பார்ப்போம்பார்ப்போம் என்று சொன்னவள் இப்பொழுது மூன்று ஆண்டு காலமாக அவனுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறாள்.அவனை காப்பாற்றுவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.ஓடி ஓடி உழைத்து சம்பாதித்து வந்து மருத்துவமனையில் கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.வாழவேண்டும் என்று ஆசையோடு வந்தவன் அவளோடு வாழ வேண்டும் என்று ஆசையோடு இருந்தவன் ஓடி வந்த அந்த பத்தாவது நாளில் படுத்துக் கிடக்கிறான் படுத்த படுக்கையாக. ஒருவேளை யாருமற்ற அவனுக்கு உதவி செய்வாள் என்று இறைவன் அவளை அனுப்பி வைத்திருக்கிறானா?பார்ப்போம் என்ன நடந்துவிடப் போகிறது வாழத்தானே பிறந்திருக்கிறோம் வாழ்ந்து பார்ப்போம்என்ற துணிவோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறாள் காயத்ரி.

எழுதியவர் : சு.இராமஜோதி (31-Jul-19, 5:36 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 210

மேலே