இதை உணர்வாய் எப்போ எப்போ

ஜோடி கிளி அங்கே
இணைக் கிளி இங்கே
பேசும் கிளி தானே நீ
பேசும் என நான் கெஞ்சும் போது
மௌனம் ஏனோ ஏனோ /

பாசம் கொண்ட நெஞ்சம்
பேசு என்று கெஞ்சும் போது
மோசம் செய்யலாமோ நீயும் நீயும் /

நேசம் கொண்டபெண்மை உள்ளம்
காசிக்காக. தன்னை விற்கும்
தாசி இல்லம் இல்லை /
இதை நீ யோசிக்காமல் போவதும்
ஏனோ ஏனோ /

என் சுவாசத்துடன் கொஞ்சம்
உன் வாசம் கலக்க /
நான் ஏங்குவது புரிந்தும்
புரியாதது போல் நீ போவதும்
ஏனோ ஏனோ ./

ரோசம் கொஞ்சம் அதிகம்
கொண்ட பெண்மை /
இவளும் அது உன்னிடம்
சாதிக்காமல் போவதுதான்
பெரும் மாயம் மாயம் ./

வெட்டு ஒன்று துண்டு
இரண்டாக /
வெட்டி விட்டுப் போகும் மங்கை /
உன்னிடம் மட்டும் வெட்டி வெட்டி
ஒட்டிக் கொள்வது மிக புதினம் புதினம் /

என் உணர்வை கொன்று விட்டாய்/ உணர்ச்சியை வென்று விட்டாய் /
என் உள்ளே நின்று விட்டாய் /
இதை உணர்வாய் எப்போ எப்போ ./ (எனது முகநூல் தோழி வானி
கேட்டு 2014 எழுதியவை இவை)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Aug-19, 11:00 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 115

மேலே