நட்பு

ஒருவன் நிறைந்தவன்
இன்னொருவன் குறைந்தவன்
நட்பில் எப்போதும் இல்லை பேதம்
ஒருமையில் அழைப்பதை
உயர்வாய் நினைக்கும்
நண்பன் இடர் துடைப்பதை
தனது உயிராய் மதிக்கும்
என்றும் எப்போதும் விலகாது
தோளோடு தோளாய் நிற்கும்
அதுவே நட்பு
அன்பில் மகிழும்
அவன் கவலையில்
மனம் வெம்பி நெகிழும்
நட்பிற்கு இணையாக
நானிலத்தில் வேறேதும் உண்டோ !


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (4-Aug-19, 12:58 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : natpu
பார்வை : 443

மேலே