உன்னை சந்தித்த வேளையில்
உன்னை சந்தித்த வேளையில் 💥
அந்த மின்னல் கீற்று பார்வை
என் உயிரை உலுக்கியதடி
என் உடல் சிலிர்த்தடி
என் உள்ளம் பூரித்ததடி
என் மனம் உன்னை காதலித்ததடி.
இந்திரலோகத்து சுந்தரியே
ஊர்வசி, ரம்பை, மேனனகையின் வழி தோன்றலோ
நான் கண்ட ஆக பெரிய அதிசயமே
வழி தவறி பூமிக்கு வந்த பேரழகியே.
தென்றலாக உன்னை வந்து தழுவவா
பனிதுளிகளாக உன் மீது வந்து உறங்கவா
உன் அழகான நாசியின்
கிழ் வியர்வை பூக்களாக வந்து பூக்கவா
மழையாக மாறி உன் மீது பொழியவா
மலராக மலர்த்து உன் கூந்தலுக்கு அழகு சேர்க்கவா
கற்பனையில்....
உன் இடை வளைத்தேன்
சிலிர்த்ததது நான் மட்டும் அல்ல
நீயும் தான்
உன்னை கட்டி அனைத்தேன்
உன் இதழ்தனில்
ஊரும் தேன்
அதனை சுவைத்தேன்.
உன்னை சந்தித்த இந்த தருணம்
என் வாழ்க்கையின் சந்தோஷத்தில் உச்சம்
மகிழ்ச்சியின் மகோன்னதம்
ஆனந்தத்தின் ஆரவாரம்
குதுகுலத்தின் கும்மாளம்
என் உண்மையான வாழ்க்கை ஆரம்பம்.
- பாலு.