குறுந்தொகை குறிஞ்சித்திணை 95 வது பாடல்

பாடல் காட்சி “தலைமகன் பாங்கற்கு உரைத்தது



தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு, “ஒரு குறமகள்பாற் கொண்ட காமத்தால் என்கண் இஃது உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.



பாங்கன் தோழன் ,



என்ன ஒரு மார்க்கமா இருக்கனு தோழன் கேட்க , மச்சான் லவ்வுல இருக்கேன்டா னு தலைவன் சொல்லுறதுதான் இந்தப் பாட்டு



இப்படலை எழுதியவர் : கபிலர்



விளக்கம்



மால் வரை இழிதரும் தூ வெள் அருவி

கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்

சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்

நீர் ஓரன்ன சாயல்

தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே





தலைவியோட இடத்தைப் பற்றி தலைவன் கூறுகின்றான்


மால்வரை யிழிதருந்

மால் வரை இழிதரும் -பெரிய மலையினிடத்துவீழும்

பெரிய மலையில் இருந்து விழும்

தூவெள்ளருவி - தூய்மையான வெள்ளை அருவி



கல் முகை ததும்பும் - பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கும்



கீழே விழும் அருவி பாறைகளில் பட்டு சத்தம் எழுப்பும்







பல் மலர் சாரல் - பல மலர்களையுடைய , பக்கத்துக்கு மலையில் உள்ள



சிறு குடி குறவன் - சிற்றூரிலுள்ள தலைவனுடைய



பெருந் தோட் குறுமகள் - பெரிய தோளையுடைய சிறிய மகளினது



நீர் ஓரன்ன சாயல்- நீரைப் போன்ற மென்மை,



தீ ஓரன்ன என் உரன் அவித்தன்று - தீயை ஒத்த என் வலியைக் கெடச் செய்தது



தலைவியோட மென்மையினால் எனது வலிமை குறைஞ்சிருச்சு சொல்லுறதுதான் இந்தப் பாட்டு



இப்ப பாட்டை மறுபடியும் பாக்கலாம்



மால் வரை இழிதரும் தூ வெள் அருவி

கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்

சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்

நீர் ஓரன்ன சாயல்

தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

எழுதியவர் : பாவி (17-Aug-19, 2:08 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 157

மேலே