பிக்பாஸ் - மரமண்டை மது

ஒரு வாரமாகவே பிக்பாஸ் வீட்டுக்குள்ள சச்சினை விரட்டுற விராட் ஹோலி மாதிரி அடிச்சி ஆடிக்கிட்டு இருக்காங்க... ஆடி மாத முடிவு வேறயா எல்லா இடத்திலும் திருவிழாக்கள் நடக்கும் போது காளியின் பல ரூபங்கள் ஓரிடத்தில் இருக்கும் போது திருவிழா இல்லேன்னா எப்படி... அதான் 'கூப்பிட்டா ஓடி வருவாளா... நம்ம காளியம்மா குதி போட்டு ஆடி வருவாளா'ன்னு ஓரே ஆட்டமா இருக்கு.



ஆஹா... விடிஞ்சிருச்சா... இன்னைக்கு எங்கே ஆரம்பிக்காலாம்ன்னு படுக்கையில் கிடந்து பாந்தமா யோசிச்சிக்கிட்டு இருந்தாங்க வனிதா.



ஆத்தாடி விடிஞ்சிருச்சே... நாலு பெண்கள்ன்னு நம்மளையே சுத்துவாளுங்களேன்னு கவிந்தடிச்சிப் படுத்திருந்தான் கவின்.



இவளுக ஆட, அவனுக பாட சம்பந்தமில்லாம நம்மளை சந்தடி சாக்குல சாத்துவானுங்களே இந்த சாண்டியும் கவினும்ன்னு நெனச்சிக்கிட்டு இருந்தார் சேரன்.



இன்னைக்கும் எப்படியாச்சும் கம்பு சுத்தணும் என மதுவும்...



இன்னைக்கும் கவினோட சுத்தணும் என லாஸ்லியாவும்...



என்ன பேசுறேன்னே எவனுக்கும் புரியக்கூடாது என கஸ்தூரியும்...



முகனைக் கட்டிப்பிடிக்க விடமாட்டேங்கிறானுங்களேன்னு அபியும்...



ஏதோ ஷெரினை டாவடிக்கிற மாதிரி நடிச்சா அதையும் காலி பண்ணிட்டாளுங்களேன்னு தர்ஷனும்...



அபிராமி... அபிராமி... இனி கட்டில் உடைக்க ஆளில்லையே அபிராமின்னு முகனும்...



கேப்புல சேரனை வெட்டியாகணுன்னு சாண்டியும் படுக்கையில் உருண்டப்போ...



'ஊலல்லா.... ஊலல்லா'ன்னு பாட்டைப் போட்டார் பிக்பாஸ். அவருக்கு ஊலல்லாதானே... பின்னே விஜய் டிவி டிஆர்பிடில முதலிடம் பிடிச்சிருச்சுல்ல.



கக்கூஸ்ல 'ஏம்ப்பா எங்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க..?ன்னு கவினுக்கு கன்டெண்ட் கொடுக்க லாஸ் சேரப்பாக்கிட்ட கேட்டுச்சு. உடனே சேரப்பா நீதானேடா கண்ணு கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு இந்த அப்பாக்கிட்ட பேசலை என்றார். நீங்கதான் மகளைவிட மருமக மது பெருசுன்னு நினைச்சிக்கிட்டீங்க... வீட்டுக்கு வந்தா எனக்கு மரியாதை இல்ல... அதான் அங்கிட்டே இருக்கேன்னு சொன்னதும்... இன்னைக்கு அப்பா உனக்கிட்ட பேசுறேன்டா அதுக்கு முன்னாடி உங்க அண்ணி மதுக்கிட்ட மரியாதைக்காக் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்னு சொல்லிட்டார்.



அவனுக பாடுற பாட்டுல பிழை இருக்கிறது யுவர் ஆனர் என வத்திக்குச்சியிடம் வத்தி வச்சது தொரட்டிக் கம்பு அபி. அப்படியா அப்படி என்ன பாடுறானுங்கன்னு வனிதாக்கா சிரிக்காம கேட்டுச்சு... ஏன்னா இங்க கிள்ளி விட்டுட்டு அங்கிட்டுப் போய் அக்கா அழகாத் தொட்டி ஆட்டிரும்... அவனுங்களும் பால்பாட்டிலை கையில் புடிச்ச பிள்ளையாட்டம் தூங்கிருவானுங்க... இங்க கிள்ளு வாங்குனதுக என்ன எழவுன்னு தெரியாமயே கத்திக்கிட்டே இருக்குங்க... அக்கா ரசிச்சிச் சிரிக்கும் பாருங்க... ஆஹா... என்ன அழகு... விஜயகுமார் வீட்டில் இருந்து அருமையானதொரு வில்லி.



அடுத்து தர்ஷனுடன் சேரன் பேசிக் கொண்டிருந்தார்... ஆஹா அமைதிப் பேச்சு வார்த்தை சிறப்பாப் போகுது. சண்டையில்லாமல் சமாதானத்தில் முடியும் போல... இன்றைய விடியலில் நம்ம ஆசை நிராசையாகி விடுமோன்னு வனிதாக்காவுக்கு மனசுக்குள்ள பயம்... அங்க என்ன பேச்சு வார்த்தை நடக்குதுன்னு கேட்க, தர்ஷன் கூட சேரன் பேசுறாரு என்றார் ஷெரின். ஆஹா இந்தாளு ஆட்டையைக் கலச்சிடுவான் போலயே... இதுக்கு ஒரு புள்ளி வைக்கணுமேங்கிற யோசனையுடன் தலை தூக்க அங்கே வெட்டுறதுக்கு தலை கொடுக்கத் தயாராய் ஆடு காத்திருந்தது.



வனிதா: ஏய் மது தர்ஷனும் சேரனும் ஏதோ பேசுறாங்க... அங்கிட்டுப் போய் பாரு...



மது : நான் மௌனவிரதம் (சைகையில் சொல்கிறார்)



வனிதா : மௌன விரதம் மசுரு விரதம்ன்னு போ... போய் பாரு... இன்னைக்குப் பிரச்சினைக்கு எதாவது கன்டெண்ட் கிடைக்கும்... அப்புறம் கண்டபடி பேசலாம்.



மது : க்கும் உன் போதைக்கு நான் ஊறுகாய்... நாலு நாளா நானேதான் ஊறுகாயா இருக்கேன்... இன்னைக்கும் போறேன்... அந்தாளு சேரன் அட்வைஸ் பண்ணியே கொல்றாருன்னுதானே மௌன விரதமா இருக்கேன்.. உனக்குப் புரியலையாடி ராட்சஸி... ஷெரினையும் அபியும் பக்கத்துலதானே வச்சிருக்கே... அவளுகளை அனுப்பலாமுல்ல (மனசுக்குள் நினைத்தபடி)



சேரன் : வா... வந்துட்டியா... அதானே... வனிதா அனுப்புனாளாக்கும்.



மது : ம்.



தர்ஷன் : அவ சொல்றான்னு இவ வந்து நிக்கிறா பாருங்க... தத்தி...



சேரன் : அப்படியெல்லாம் சொல்லாத... இந்த வாரம் இவ பேசணும்ன்னு வனிதா முடிவு பண்ணிட்டாங்க... டூ பி ஹானஸ்ட்...



தர்ஷன் : அண்ணே அது வனியக்கா வசனம்.



சேரன் : தெரியும் தர்ஷன்... இப்ப இங்க எல்லாருமே வனிதாவின் அவதாரங்கள்தானே...



தர்ஷன் : மதுவோட பேச்சு சரியில்லைன்னே...



மது : நான் மௌன விரதம்.



சேரன் : தூக்கி அங்கிட்டுப் போடு...



மது : இப்ப என்ன... நாலு பேரு... நல்ல இருந்த கவினு அப்படின்னு சொல்லணுமா.. முடியாது... கவின் கக்கத்துல நாலு பேரும்...



தர்ஷன் : என்ன நாலு பேரு நாலு பேரு... ஷெரின் என் ஆளு...



மது : அடேய் அபிதான் அவனுக்கு முதல்ல... வேண்டான்னு விட்டதும் முகன் எடுத்துகிட்ட மாதிரி, ஷெரினை நீ எடுத்துக்கிட்டே.



இதுக்கு அப்புறம் எங்க ஊரு வாரச்சந்தைக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஒத்தை இலைக்கு அடிச்சிக்கிற நாய்ங்க மாதிரி அடிச்சிக்கிட்டாங்க...



இதெல்லாம் விரிவாப் பாத்தமுன்னா நமக்குப் பைத்தியம் ஆயிரும்.



கஸ்தூரி : நான் என்ன சொல்ல வரேன்னா...



கவின் : வாஸ்து சரியில்லை.



கஸ்தூரி : இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா...



கவின் : வாஸ்து சரியில்லைன்னு சொல்லுறேன்...



கஸ்தூரி : அதனாலதான் நான் இப்ப என்ன சொல்ல வரேன்னா...



கவின் : அடியே அதுதான்டி சொல்றேன் வாஸ்து சரியில்லைன்னு...



கஸ்தூரி : என்னது... டப்புன்னு டீப் போட்டுட்டானுங்க...



தர்ஷன் : கடலைப் பருப்புப் போட்டு சக்கரைப் பொங்கல் வைக்கலையில்ல.



கஸ்தூரி : இவனுக சகவாசம் நமக்கு வேண்டாம்... ஆத்தாடி அடிச்சித் தூக்கி செட்டுக்கு அந்தப்பக்கமா வீசிருவானுங்க போலவே.



சேரன் : மது முதல்ல நாலு பெண்கள்ன்னு பேசுற கதையை நிறுத்து.



மது : ஏண்ணே... நாலு பெண்கள்தானே... வனிதாக்கா அப்படித்தானே ஆரம்பிக்கச் சொன்னாங்க.



வனிதா : மது நாலு பெண்கள் முடிஞ்சிருச்சு... டாஸ்க் ஓவர். இப்ப டார்கெட் தர்ஷன்... நீ இன்னமும் நாலுலயே நிக்கிறே... நாலுநாள் முடிஞ்சிருச்சு தெரியுமா...



மது : அப்ப அந்த நாலு பெண்கள்.



சேரன் : உன் தலையில விண்கல் விழ...



பசங்க பாட்டுப் பாட வனிதாக்கா ரசிச்சிக்கிட்டு இருக்காங்க... விட்டா ஒரு ஆட்டம் போட்டிருப்பாங்க. மது மனசு மாறிட்டா நம்ம வேலையெல்லாம் கெட்டுப் போயிருமேன்னு உக்காந்திருந்தாங்க.



சேரன் : பாத்தியா அவனுக பாட... இவளுக ஆட... ஆமா நீ யாருக்காகப் பேசினே...



மது : அவங்களுக்காத்தான்...



சேரன் : இப்ப அவங்க எங்க..?



மது : அங்கதான் இருக்காங்க...



சேரன் : நீ எங்க இருக்கே...?



மது : நடுத்தெருவுல இருக்கேன்.



சேரன் : இப்ப முட்டாப் பீசு யாரு...?



மது : அண்ணே...



நம்மள வச்சி விளையாடுறாளுங்களா... விதி வச்சிச் செய்யுது... ம்... இனி விலகினா கட்சியைக் கலைக்கிறேன்னு தீபாம்மா சொன்ன மாதிரி ஆயிடாதா... ஆட்சியைக் கலைக்கிறேன்னு கத்திக்கிட்டு இருக்க ஸ்டாலின் மாதிரி முடிஞ்சவரைக்கும்... இல்ல பிக்பாஸ் முடியிற வரைக்கும் கத்துவோம்ன்னு மது யோசிச்சிக்கிட்டு இருக்க, கஸ்தூரி காலைத்தூக்கி கருப்பனசாமி மாதிரி ஆடிவருகிறார்.



கஸ்தூரி : மது நீங்க யாருக்காக சண்டை போட்டீங்க...?



மது : இதை இப்பத்தான் சேரன் கேட்டார்... நீங்களுமா... கடைசியில முட்டாப்பீசுன்னு சொல்ல மாட்டீங்களே...?



கஸ்தூரி : இல்லை சொல்லுங்க...



மது : அவங்களுக்காகத்தான்.



கஸ்தூரி: அவங்க... அவங்கன்னா... யார் அவங்க...?



மது : ஷெரின், அபி, லாஸ்....



கஸ்தூரி : ஏய் லூசு... லாஸ்தான்டி உன்னை தூக்கிப் போட்டு மிதிச்சா...



மது : சாரி... ஒரு புளோவுல வந்திருச்சு.



கஸ்தூரி : அப்ப ஷெரின், அபிதானே



மது : ஆமாப்பா ஆமா...



கஸ்தூரி : இந்த ஓமாவுக்கு மட்டும் குறைச்சலில்லை... அவளுகளே அவனுக கூட ஆடுறாளுக நீ என்ன மயித்துக்கு நாய் மாதிரி கத்துறே...



மது : என்னப்பா டப்புன்னு மயிரு, நாயின்னுட்டே.... சேரன் கூட முட்டாப்பீசுன்னுதான் சொன்னார்... நான் அதை பிரியாணியில பீசுன்னு நினைச்சேன்.



கஸ்தூரி : இப்பப் புரியுதா... இனிமேயாச்சும் மூடிக்கிட்டு இரு.



மது : எதை...?



கஸ்தூரி : ம்... வாயைத்தான்.



அப்புறம் சாக்லெட் கொடுத்தானுங்க... சேரனுக்கு கிடைத்ததான்னு தெரியலை... கொடுத்திருக்க மாட்டானுக... மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மகிழ்வானவர்கள் என்ற போதிலும் மகள்கள் பேசவில்லை என்றால் உலகமே இருண்டதாய்த்தான் நினைப்பார்கள்... ஷெரினிடம் அப்பனாய் புலம்பினார் சேரன்... இதே புலம்பலை மகளிடமே புலம்பியிருக்கலாம்.... சேரன் சறுக்கி விட்டார்.



இந்த வார கேப்டன் தேர்வு... எல்லாரும் ஷெரினுக்கும் தர்ஷனுக்கும்... தாயில்லாப் பிள்ளையாய் நின்ன மதுவுக்கு தகப்பனானார் சேரன். தேசிய விருது இயக்குநரின் இயக்கத்தில் மது வெற்றி... சேரனுக்குள் கிடந்த மன அழுத்தம் அடித்து எழுந்து ஆட்டம் போட வைத்தது. இப்படியான இடங்களில் வெளிப்படத்தான் செய்யும்... இதை நாம் நடிப்பு என எடுத்துக் கொள்ளுதல் முறையல்ல.



மது கேமரா முன்னாடி நான் செய்யிறது தப்பான்னு கேட்டுச்சு... நீ செய்யிறது தப்பில்லை... அதை வனிதாவுக்காக செய்யிறதுதான் தப்புன்னு கேமரா சொன்னுச்சு. கஸ்தூரி நீ சாமி கும்பிடு அப்பத்தான் ஜெயிக்க முடியும்ன்னு மதுக்கிட்ட சொல்லிக்கிட்டே சாக்லெட் பிடிக்கலைன்னா சேரனுக்கு கொடுத்துடாதே எனக்குக் கொடுன்னு சொல்லிட்டு கையிலிருக்கும் சாக்லெட்டையே நாய் சாப்பாட்டுத் தட்டைப் பார்க்கிற மாதிரி பார்த்துச்சு... மது லாவகமாப் பிரிச்சு வாய்க்குள்ள வச்சிக்கிச்சு... வடைக்கு ஏமாந்த காக்கா மாதிரி எழுந்து போயிருச்சு.



அப்புறம் ஹாலோ ஆப் விளம்பரத்துக்காக ஒரு சின்ன டாஸ்க்... சேரன் நடுவர்... எல்லாருக்கும் வெள்ளைச் சட்டை... ஆனா அம்புட்டு மனசுக்குள்ளும் கருப்புத்தான் நிறைஞ்சிருக்கு.



'ஒருத்தர் மேல உள்ள விசுவாசத்துக்காக அடுத்தவங்கள ஏன் அசிங்கப்படுத்துறீங்க' - கவின்



'குருநாதா சும்மா இருந்த என்னய சொறிஞ்சு வுட்டானுங்கடா' சாண்டி.



'உம்முன்னும்... கம்முன்னும்... இருந்தா சும்மா ஜம்முன்னு இருக்கலாம் ஆனா இந்த வீட்ல அப்பிடி இருக்க விட மாட்டானுங்க' - லாஸ்லியா.



'வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வனிதா.



முகன், தர்ஷன், மது, ஷெரின் எல்லாம் ஏதோ சொன்னாங்க.



அபி என்னமோ ராப் பாட்டு மாதிரிப் பாடுச்சு... முகனின் தாக்கம் முழுவதும் தெரிந்தது.



சேரன் அந்தப் பாடலுக்காகவே அபிதான் வின்னர்ன்னு சொன்னார்... அதுதான் சரியாகவும் தெரிந்தது. இயக்குநர் அல்லவா.



உடனே ஐவர் அணி பாட்டுப் பாட ஆரம்பிச்சிருச்சு...



பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (18-Aug-19, 5:33 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 166

மேலே