பிக்பாஸ் - பற்றி எரிகிறது பிக்பாஸ் வீடு

தான் நினைத்து வந்ததை விட சரியாக காய் நகர்த்தி பல பிரச்சினைகளைத் தலைதூக்க வைத்த தானைத் தலைவி வனிதாவில் தர்ஷனிடம் மட்டும் நேரடித் தாக்குதலில் இறங்கு முடியவில்லை... கைப்பிள்ளையாய் தன்னைக் கைமாப் பண்ணிருவான்னு தோன்ற, வேறு வழி யோசிக்க ஆரம்பித்தார் அதில் சிக்கியது ஷெரின்.



கொஞ்சம் கொஞ்சமாக உரை ஊற்றி பாலைத் தயிராக்கும் முயற்சியில் வெற்றி கண்டார். கடல் கொந்தளிக்கக் காத்துக் கொண்டிருக்கும் தருணத்துக்காக வனிதாக்கா வாசலில் காத்திருக்கிறார்.



சுதந்திர தினம்டா இன்னைக்கு என்பதை ஞாபகப்படுத்த 'ஜன கண மன...' பாட்டைப் போட்டானுங்க... எங்க எல்லாரும் ஆடிருவானுங்களோங்கிற பயத்துல பாட்டை சீக்கிரமே நிப்பாட்டிட்டாரு பிக்பாஸ்.



ராத்திரிப் படுக்கும் போது வனிதா நாளைக்கு வாகா யாரைச் செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டே படுத்திருந்த மாதிரி காலையில சேரனுக்குச் சொல்றதும் சுவத்துக்குச் சொல்றதும் ஒண்ணுதான்னு முடிவு பண்ணி ஷெரின் ஆரம்பிச்சாளா இல்லையான்னெல்லாம் காத்திருக்க முடியாது.... எனக்கு இப்ப பிரச்சினை தேவை இல்லைன்னா விக்கிரமாதித்தனுக்குத் தலை சுக்கு நூறாகிடும்ன்னு வேதாளம் சொல்ற மாதிரி என் தலை எனக்கில்லாமல் போகும்ன்னு யோசிக்குது... பின்னால வந்து நிக்கு மது.



ஆடு தானா வந்து சிக்கும் போது பிரியாணி பண்ணாம பிரியாமணிக்கிட்டயா பிடிச்சிக் கொடுப்போம்... பள்ளிக்கூட வாத்தியாரு மாதிரி பதமாக் கிளாஸ் எடுக்குது... அக்கா அவனுகளத் திட்டிட்டு அவனுக கூடவே கும்மாளமும் போடும் நாம மட்டும்தான் கூட்டத்தை விட்டு ஒதுக்கப்பட்ட கோழிக் குஞ்சியாட்டம் கியாக்... கியாக்..ன்னு கத்திக்கிட்டு இருக்கணும்ன்னு சேரனுக்கும் மதுவுக்கும் தெரியவேயில்லை என்பதுதான் முரண். இதையெல்லாம் பார்த்துட்டுப் போன பஞ்சாரத்துக் கோழி லாஸ்லியா வத்திக்குச்சி பத்தவச்சிக்கிட்டு இருக்குடான்னு பயலுககிட்ட சொல்லிச் சிரிச்சிச்சு.... லாஸ்லியா கூட இருக்கது கவினுக்கு ரொம்பக் கலகலப்பூட்டுது.... எல்லாரும் லாஸ், லாஸ்ங்கும் போது எங்க லாஸ் ஆயிருவாளோன்னு லியா... லியான்னு பாட்டாப் பாடுறான்... சாக்சிதான் சாக்கடிச்ச காக்காய் மாதிரி வீட்டுல படுத்துக்கிடக்கும்.



தர்ஷன் சார்க்கிட்ட பார்த்துப் பழகுன்னு மதுக்கிட்ட சொல்றாரு சேரன்... உடனே மது இனி உறவெல்லாம் இல்லை டைரக்டா தலையை உடைக்கிறதுதான்னு குள்ளமணி கூவுற மாதிரி கூவுது. வனிதா மனசுக்குள்ள 'நான் பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிகிறது'ன்னு சிரிச்சிக்கிது. இந்த வாரம் கமல் சார் மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பொற்கிழி கொடுத்தாலும் கொடுக்கலாம்.



பயலுக கக்கூஸ்ல உக்காந்து பாட்டுப் பாடுறானுங்க... லாஸ்லியா கூட இருக்கிறது தேவாவுக்கு சூர்யா பக்கத்துல இருக்கிற மாதிரி... வேலு நாயக்கருக்கு கவுண்டர் பக்கத்துல இருக்க மாதிரி... ரொம்பத் தெம்ப இருக்கு.. கேமரா வேற இந்தப் புள்ளையை முன்னும் பின்னும் கண்ணால காதலிச்சிக்கிட்டு இருக்கு.



சிறைக்குள்ள இருக்க அபிராமிக்கு முடியல... ஷெரின் வந்து சாண்டிக்கிட்டச் சொல்றாங்க... சாண்டி உடனே திறக்கப் போறார்... சேரன் பிக்பாஸ்க்கிட்ட கேளுங்கன்னு சொல்றார்... நீ யாருய்யா குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு... ஒரு ஓரமாப் போயி விளையாடுங்கிறான் கவின்... என்னைக்கோ கூவுற சேவலுக்கு என்னடா கூட்டுக்குள்ள மரியாதையின்னு சாண்டி போய்யா போன்னு சொல்லுறான். தர்ஷன் நீ குத்த வைக்க இடமொன்று இருக்கிறது... அங்கே வலமும் இடமுமாய் குள்ளச்சியும் வத்திக்குச்சியும் இருக்கு... இங்க உனக்கென்ன வேலையின்னு சொல்லுறான். சேரன் சேத்துல மாட்டுன செவ்விளனி மாதிரி கிடக்கார்.



அபிராமி வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறா... கஸ்தூரி கமண்டலத்தைக் கழட்டி வச்ச நாரதர் மாதிரிப் பேசுது... லாஸ்லியாவுக்கு இப்பல்லாம் யானைப் பலம் வந்திருச்சு போல... பூனையாய் மியாவ் சொன்னது என்ன ஆயான்னு ஆங்காரமா ஆடுது. எல்லாருமா வனிதாக்காக்கிட்ட பொயிட்டாங்க... ஏன்னா அக்காதான் காக்க வந்த கடவுள்ன்னு நினைக்கிதுங்க மூதேவிங்க... அக்காவும் எவன்டா திறக்காதேன்னு சொன்னான்... நாந்தான் பிக்பாஸ் இங்க... மத்தவனெல்லாம் எனக்கு முன்னாடி நிக்கக்கூட தகுதியில்லாதவனுங்கன்னு கதவைத் திறந்திருச்சு.



ஆஹா... ஒரு டாஸ்க்கையே நீ என்னய்யா டாஸ்க் நடத்துறேன்னு நிப்பாட்டுனவளாச்சே.... வனிதாம்மா கம்முனு கெடன்னு சொன்னா... இவன்தான்டா கெடா வெட்டச் சொன்னான்... அதான் நான் வெட்டுனேன்னு பேசிப்புடுமே... கைப்புள்ள பிக்பாஸ் கவனமாயில்லைன்னா கைமாப் பண்ணிடுமே இந்த அக்கான்னு வேகவேகமா மூச்சிறைக்க ஓடியாந்து அபிராமி நீ விடுவிக்கப்பட்டாய்ன்னு சொல்லிட்டுத் தண்ணியைக் குடிச்சிட்டார்.



அப்புறம் ஆணும் பெண்ணுமாப் பிரிஞ்சி இப்ப அடிச்சிக்கிறதா... சேரன் பெண்ணான்னும் லாஸ் ஆணான்னும் கேட்கக்கூடாது... அது பிரிவினை டீம்... இப்பக் கூடுறது டாஸ்க்குக்கான டீம்... டாஸ்க் என்ற பெயரில் அடித்துக் கொண்டார்கள்.அப்புறம் எப்பவும் போல ஆளாளுக்குக் கத்திக்கின்னாங்க... பின்னே தின்னது செரிமானம் ஆனாத்தானே மறுக்கா மறுக்கா தின்னலாம். ஒரு வழியா டாஸ்க் முடிஞ்சது... கவினுக்கு சேரன் மீது கோபம்... அதை எல்லா இடத்திலும் காட்டுகிறான்.



மதுக்கிட்ட மக பேசலைன்னு உண்மையாவே வருந்துறார் சேரன்... உடனே மது நீங்க செய்யுற சரி சார்... அவளைக் கண்டுக்காதீங்கன்னு சாம்பிராணி போடுது... துணூறு போட்ட வனிதாவுக்கே மசியாத சேரச்சாமி, இந்தச் சாம்பிராணிக்கா மசிவாரு... நான் உண்மையான அன்பு வச்சிருக்கேன்... அதுல இருந்து மாறுறவன் மனுசனில்லைன்னு சொல்லிடுறாரு. காற்றுப் போன பலூன் ஆன மது மீண்டும் காற்றை நிரப்ப ஹீலியம் வாயு வனிதாக்கிட்ட போயிடுது.



தர்ஷனுக்கிட்ட ஷெரின் பஞ்சாயத்தைக் கூட்டி நீதான்டா மாறியிருக்கே... நானில்லை... எப்பவும் நண்பிதான்... தோழிதான்னு சொல்லுது. தர்ஷன் மாறிட்டான் என்பது உண்மை... இதன் பின்புலத்தில் இருப்பவர்கள் கவினும் சாண்டியும்... ஏதோ குழி பறிக்கிறார்கள்... தெரியாமல் எல்லாருமே மாட்டிக் கொள்கிறார்கள்.



முகன் அழுதுகொண்டே அபிக்கிட்ட பேசுறான்... மீண்டும் ஒரு காதல் கதை ஆரம்பிக்குமோன்னு தோணுது... அபிக்கு அணைத்துக் கொள்ள ஆசை, கட்டையில போறவனுங்க எல்லாத்துக்கும் கதை கட்டுறானுங்களேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு எழுந்து போகுது.



கஸ்தூரியும் விடுவிக்கப்பட வனிதாக்கா கஸ்தூரி பேச ஆரம்பித்து... என்னைக்கு வனிதாக்காவோட பேச்சு நல்லவிதமா முடிஞ்சிருக்கு... நாறவாயி எப்பவும் நாறத்தானே செய்யும்... சின்னச் சண்டையை பசங்க குரூப்புல கொண்டு போய் பேசிச் சிரிக்கிது... அவனுகளுக்குக் கொண்டாட்டம்... நம்ம வீட்டு நாய் சிக்கன் சாப்பிடும் போது பக்கத்து வீட்டு நாய் பாத்துக்கிட்டு நிக்கிற மாதிரி கஸ்தூரி பாவமாய் உட்கார்ந்திருக்கு.



எப்பவாச்சும் பேசினாலும்... எப்பவுமே தனித்திருக்க ஆரம்பித்திருக்கிறார் சேரர்... எல்லாரையும் சார் போட்டு மரியாதையாகத்தான் விளிக்கிறார் சேரர்... மகளைக்கூட வாங்க போங்க என்றே அழைக்கிறார் சேரர்... ஆம் இன்னைக்கும் சேரர் அப்செட்.



கமல் சார் வர்றன்னைக்குத்தான் இந்த 'அப்'செட்டைக் கழட்டி வைத்துவிட்டு பேசுவார் என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் மக அவரைக் கண்டுக்காது கணவனுடன் லூட்டி அடிப்பது நல்லதல்ல என்றாலும் இதுதானே தமிழ்மண்ணு கலாச்சாரம் என்பதால் சேரர் வருத்தப்பட்டு பாரம் சுமக்க வேண்டியதில்லை... அப்செட்டை விடுத்து ஆம்லெட்டை ஒரு கை பார்க்கலாம்.



பிக்பாஸ் தொடரும்

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (18-Aug-19, 5:32 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே