சரசுவ தித்தாய் தமிழ்த்தாயின் வயதும் காலமும்
தெளிதமிழ் மக்கள் தெளிந்தார் எதிலே?
தெளிந்துத் தமிழுக்கோர் தாயைத் ---- தெளிந்தார்
இருபதாம்நூற் றாண்டில விரும்பியேத் தேர்ந்தார்
நறுந்தமிழும் துர்நாற்ற மாம்.
பெருந்தமிழ் நாட்டில் இருபதுக்கும் முன்னே
இருந்தனள் சரசுவதித் தாயார்----- அருமை
மறந்துமறக் காநம் சரசுவதித் தாயை
மறுக்க வருவானோ முன்.
வடக்குத்தெற் கென்று மடையரும் பேசி
மடக்கிப்போட் டார்தமிழ. னையும்.-- முடங்கிக்
கிடந்தவன்முக் கால்நூறு ஆண்டாய் நடக்கத்
தடம்தே டாநிற்கி றான்