நான் ஒரு புதுக் கவிதை
இரண்டிற்கும்
பொதுவாகிப் போன
என்னை
இலக்கணத்திற்கும்
பொருந்தாத
இலக்கியமும் இல்லாத
ஒரு புதுக் கவிதை என்று
ஏளனம் செய்தான் ஒருவன்
தெரிந்து கொள்ள
புதுக் கவிதை படித்தேன்
மானுட இலக்கணம்
மறந்து
மரபு துறந்து
என்னைப் படைத்த
இறைவனுக்கும்
நன்றி சொன்னேன்
ஏனெனில்
நானும் ஒரு புதுக் கவிதை
அது
வெறும் அழகுகளின்
மலர் தோட்டம் இல்லை
உள்ளத்தின் உணர்வுகளின்
உயிரோட்டம்
----கவின் சாரலன்