கலாச்சாரம் காக்க வாரீர்......

வெள்ளயனை வெளியேற்றி
விடை கொடுத்தது அன்று எம் நாடு.....
வெள்ளயனின் பிள்ளைகளாய் இனறு
வெளித்தோற்றம் காட்டும் இளசுகளே கேளீர்.....
செந்தமிழ் வாழவு ம்
சீர்புகழ் சேரவும்-தம்
இன்னுயிர் தந்த சோதரர்
தியாகமதனை நினைவில் வையுங்கள்.....
நட்ட நடு வீதியில் கட்டியணைப்பதும்
வெட்டவெளியில் முத்தம் தருவதும்
தமிழர் எமக்கு அழகல்ல....
சங்கம் வைத்து காத்த எம் தமிழை
பங்கம் வைக்க நீவிர் முயல்வதேன்....
குட்டை பாவாடையும்
குனிந்தால் தெரியும் மார்பும்
வேண்டாம் சோதரிகளே......
தமிழர் எமக்கு அழகல்ல...
காத்திடுவீர் கலைந்திடாமலே-எம்
கலாச்சாரம் அதனை யே.......












எழுதியவர் : janaarthanan (8-Sep-11, 3:18 pm)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 313

மேலே