செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ - முத்தொள்ளாயிரம் 45

நேரிசை வெண்பா

தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ – யானை
பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது! 45

- - முத்தொள்ளாயிரம்

பொருளுரை:

ஆண் பெண் யானைகளை வளமாகத் தரும் கொடையாளி கிள்ளி! மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா?

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (29-Sep-25, 11:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே