காணாமல் நீ குழலோசைக் கேட்க வைத்தாய்
கண்ணனே , மணிவண்ணன் கார்முகிலோனே
கண்ணுக்கு தெரியாமல் நிற்கிறாய் கண்ணா
கண்ணுக்கு நீபுலனாகாவிட்டாலும் உன் குரல்
வேணுகானமாய் என் காதில் வந்து இசைக்குதடா
கண்ணா , கண்ணா என்று நான் வாய்திறந்து
அவன் நாமம் பாட, எங்கிருந்தோ வந்தான்
என்மடியில் வந்தமர்ந்தான்,' பாட்டி, இதோ
நான் உந்தன் கண்ணன் , நீ அழைத்த கண்ணன்
தெரியலையா இன்னும் உனக்கு' என்றான்
மடி கனத்தது , கன்னம் நனைந்தது அவனிடம்
முத்து முத்தாய் முத்தங்கள் வாங்கிய கன்னங்கள்;
இதோ, மடி லேசாகிவிட்டது; அவன் குரல் ……
வேணுகானம் இன்னும் காதில் வந்தொலிக்க
அவன் மட்டும் காணாமலே நிற்கின்றான்
மாயனல்லவா அவன்.... காணவைத்து முத்தும் தந்து
இப்போது நான் அவனுக்கு தாலாட்டு பாடுகின்றேன்
'மாயனே போதும் போதும் நீ நடந்தது
வந்து என் மடியில் கண் மூடிவிடு கண்டவர்
கண் உன்மீது பட்டுவிடக்கூடாது என்னப்பனே
ஆரீரோ, ஆரீரோ …… என்றேன்.
'பாட்டி, பாட்டி, என்று என்னை வந்து
கட்டிக்கொண்டான் என் பேரன் ஸ்ரீவத்சன்…..
' கண்ணா , இதுவும் உன் மாயன் தானோ …
உன்னைக் காண வைக்கின்றாயே இப்போது
இவனில் என்று நினைத்தேன் நான்
கண்ணீர்பெருக !