காதல் கசியும் உயிர்
சின்னச்சின்ன அன்பில் ஜீவன் கொட்டிக் கிடக்காம்...
உன் பேரன்பில் என்ன கொட்டிக் கிடக்கிறது அன்பே!
அதைத் தேடுகிறேன், அறியாது அங்கேயே மூழ்கிப்போகிறேன்....
முற்றும் துறந்தவனாய் செத்துக்கிடந்தேன் பத்தும் தந்து மீண்டும் என்னை பெற்றாயடி....
பித்தம் இழந்து நித்தம் நினைக்க விடுவாயா இல்லை உன் ஆயுளோடு தொடர்ந்து வர எனக்கு அருள்வாயா!
ஏக்கமும் தூக்கமும் நீயாய் போனாய்...
கடனாய் என்னுயிரை தருகிறேன் ஏற்றுக்கொள்வாயா...? அன்பே!