இரைச்சல்

வணக்கம்.

இந்த கதை சற்று ஆபாசம் கொண்டது. பெண்கள் தவிர்க்கலாம்.
வாழ்வின் யதார்த்தத்தில் இப்படி இருக்குமா என்ற சிந்தனை எனக்கும் உண்டு.

கதைகள் கற்பனைகள்தான். ஆனால் அது நடந்தது போலவோ நடப்பது போலவோ தென்படுவதெல்லாம் ஒரு மாயை மட்டுமே.

இந்த கதையும் கற்பனை. இவ்வளவு மோசமாக கற்பனை செய்திருக்க வேண்டாம் என்று தோன்றினால் கண்ணை துடைத்து கொண்டு காதை டாக்டரிடம் காட்ட சொல்ல தோன்றும்படிதான் இன்று நடைமுறை இருக்கிறது.

எழுத்துக்கு பொய் சத்தியம் செய்து விட்டு பதிக்கிறேன்.
படிக்கலாம். தவறு இல்லை.
மிக்க நன்றி

_____________________:____





பாகம் 1

அத்தியாயம் 1

(2006” ம் வருடம் முற் பகுதிகளில்)
                     ---------------------------------------------

எந்த காரணமும் இல்லாமல் அது அவனுக்கு பிடித்திருந்தது.

அது கூடவே இருந்து அவனை பார்த்து  கொள்வதால் மட்டும் அல்ல. அதற்கும் மேலும்  அது ஒத்திசைவாய் இருந்தது.

நன்றாக விழித்து கொண்டபோது மணி சரியாய் பத்து.

மிகச்சரியாக பத்து இருபத்தி ஏழு.

சொல்லிவிட்டு அது சிரித்தவுடன் கூடவே அவனும் சிரித்தான்.

சரி, கிளம்புவோம் என்று அவன் சட்டையை அணிந்து கொண்டு வாசலுக்கு  வந்து ஒருமுறை தவறாய் செருப்புக்குள் காலை நுழைத்து மீண்டும் கால் மாற்றி அணிந்து அறைக்கு வெளியில் வந்து வாசலை பூட்டிவிட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

தெருவில் செருகிக்கிடந்த எல்லா வீடுகளிலும் அநேகமாய் டீவீக்கள் ஒளிர்ந்து ஒலித்தன.

தெருவெங்கும் நிலை தடுமாறி அலையும் அலங்கோலமான அமைதியை அவனால் அப்போது உற்றுப்பார்க்க முடிந்தது.

அந்த இருள் அவனுக்கு பழகிய ஒன்று.

தெருக்களை தாண்டி சில சந்துக்களில் புகுந்து வளைந்து சற்று வேகம் கூட்டி இப்போது சாலைக்குள் நடக்கும்போது அவனுக்குள் ஒரு திமிர் மிதந்தது.

இந்த திமிர் அவனுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு இனிய உபாதை. நடந்தான்.

பேருந்து நிலையம்.

பூம்புகார் செல்ல வேண்டும் என்று அது கூறியதும் 'அவ்வாறே' என்று வந்த பேருந்தை பார்த்தான்.

அது ஜன்னலோரம் உட்கார விரும்பியது.

அவன் அதிக கூட்டம் இல்லாத அந்த பேருந்தில் எங்கு வேண்டு மென்றாலும் அமரலாம்.
அது ஜன்னலோரத்தில் அமர விடும்பியது. வழி விட்டு ஒதுங்கி கொண்டான்.

திருச்சி, திருச்சி, திருச்சி... பஸ் வாசலில் துப்பட்டாவை போல் அசைந்த  ஒரு ஒல்லியான நடத்துனன் வாய் பிளந்து கத்தி கொண்டே இருக்க...
அவனை அது பஸ்ஸில் ஏறச்சொல்லி முறைத்தது.

தான் இன்னும் அதில் ஏறி அமரவில்லை என்று தெரிந்தது.
சமீப காலங்களில் அடிக்கடி இப்படித்தான் நடக்கிறது.

பஸ்ஸில் போக பணம் வேண்டுமே?

சட்டை பைக்குள் எட்டி பார்த்தபோது சில நாணயங்கள் இருந்தன. போதாது.

அது கேட்டது, “இப்போ என்ன செய்யலாம்?”

ரூமுக்கு போய் பணம் ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு பூம்புகார் போகலாம்...

அப்படின்னா...

திரும்ப ரூமுக்கு போவோம்.

அது அமைதியாக இருந்தது.

மீண்டும் சாலைக்கு வந்து சந்துக்களை தவறவிட்டு தெருவை அடைந்து ரூமுக்கு வந்து.... அவனுக்கு அசதி மேலிட்டது.

கஷ்டமா இருக்கா...அது கேட்டது.

இல்ல...போவோமா...

எங்கே, பூம்புகார்?  நீ சொன்னியே..?

நாளைக்கு போவோம்.

இப்போ என்ன செய்யலாம்?

தூங்குவோம்.

தூக்கம் வரலை.

அப்படினா...அப்படினா...ரெண்டு பேரும்...

இல்ல வேணாம்.

எனக்கு இப்போ வேணும்.

இல்ல....நான்...தூங்கப்போறேன்...

அவன் கண்களை மூடிக்கொண்டான்.

அதுக்கு தெரியும். அவன் தூங்கவில்லை என்று...

காத்திருந்தது.

அத்தியாயம் 2

தூங்கிவிட்டான்.

அவன் விழித்தபோது மணி  ஐந்துக்கு மேல். இருள் ஒளியோடு  மசங்கி பிரிந்து கொண்டிருந்தது. 

அதை இப்போது காணவில்லை.

உடல் வலித்தது. புரண்டு படுத்துக்கொண்டான். இன்னும் சற்று கண்களை அழுத்தி மூடிக்கொண்டு தூங்கப்பார்த்தான்.

மனம் மௌனமாக இருந்தது. காலை நேரம் போலவே தெரியவில்லை. ஒரு வேளை சாயந்திரம் ஆகி விட்டதோ என்று தோன்றியது. ஓரிரு நிமிடத்தில் ஒரு பெருமூச்சை விட்டு எழுந்தான்.

அது இல்லை.

எங்கே தொலைந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு மொபைல் போனை திறந்தான்.

நேற்று முன்தினம் பாதி படித்த ஒரு போர்னோ கதையின் நினைவு வந்தது. அதை மீண்டும் தேடிக்கொண்டு இருந்த போது அது வந்தது.

அதே கதையா...

ஆமா.... நீ எங்கே போய் தொலைஞ்சே?

அது பேசாமல் இருந்தது.

பூம்புகார் போலாமா? என்றான்.

அது பூம்புகார், பூம்புகார் என்று கத்தியது.

வாய மூடு சனியனே...

அது அறையை விட்டு ஓடியதும் சிங்காரம் மெஸ்ஸில் இருந்து டிபன் வந்து சேர்ந்தது.

அறையெல்லாம் பெருக்காது குப்பை சேர்ந்து இருந்தது. கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தபோது கன்னத்தில் எலும்பு சற்று தூக்கலாய் இருந்தது. தன்னை பார்த்து கொஞ்சம் சிரித்தான்.

சிரிக்கறயோ?

ஆமாம். எனக்கு சிரிக்கும்போது இப்போவெல்லாம் வெக்கமா வருது.

என்ன டிபன்?

இடியாப்பம்.

நல்லா துன்னு...

சிகரெட்டை அறை முழுக்க தேடி கண்டு பிடித்து குடிக்க ஆரம்பித்தான். புகையில் அறைக்கு கமறியது. அந்த அறை விழுந்து விழுந்து இரும ஆரம்பித்தது.

வெளியே போய் குடியேன்.

அவன் வெளியே வந்தபோது தாரிணி குத்தவைத்து கோலம் போட்டு கொண்டிருந்தாள்.

வரைய வரைய தாரிணியை கோலம் எரிப்பது போல் பாக்குது இல்லையா என்றது அது.

அவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

பூம்புகார்...பூம்புகார்...

அவன் சிகரெட்டை அணைத்து விட்டு அறைக்குள் புகுந்து பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

நானும் உள்ள வரேன்...

இங்கேயே கெட நாயே...

மாட்டேன்...பாக்கணும்...

வருவேன். வருவேன். பின்னாடியே வருவேன். நில்லு... நில்லு...

அவன் கதவை தாளிடாது திறந்து வைத்து குளிக்க ஆரம்பித்தான்.

அப்போது அது அங்கே இல்லை.

அது இன்னும் இருக்குமா என்று துண்டை கட்டிக்கொண்டு வெளியில் வந்தான்.

இல்லை. அது வரவேயில்லை. வெயில்தான் அன்றைய நாளை பாழடித்துக்கொண்டு இருந்தது.

மின்னல் குத்தியது போல் ஒரு உணர்வை
அடைந்தபோது உண்மையில் விழிப்பு வந்தது.

அவன் இன்னும் படுக்கையில்தான் இருந்தான். பகலும் இரவும் அவனுக்கு புரியாது போவதை பெரிதாய் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அது சொல்லி இருந்தது.

நடந்தது எல்லாம் கனவு. இல்லை, நடந்து முடிந்தபின்தான் தூங்கி இருக்கிறோம் என்று சொன்னான். அதையே நம்பினான்.

படுக்கையில் அமர்ந்து கொண்டு நெட்டி முறித்துக்கொண்டான்.

மணி எட்டு.

       

அத்தியாயம் 3

அவன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பின் பூட்டிக்கொண்டு வெளியில் கிளம்பினான்.

தனக்கு முக்கியமான இரண்டு வேலைகள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டான். ஒன்றை முடித்து விட்டு இன்னொன்றை செய்ய வேண்டும்.

இரண்டும் ஒன்றுதான். ஆனால் ஒன்றையே வேறு வேறு வேலைகளாக பிரித்து வேறு வேறு இடங்களில் செய்து முடித்து விட்டால் நேரம் மிச்சம் என்று யோசித்து கச்சிதமாக அதன் வழிமுறைகளை ஒருமுறை முழுமையாக சொல்லி கொண்டே நடந்தான்.

இப்போது அந்த இரண்டு வேலைகளும் என்னென்ன என்று யோசித்த போது  அது பல்ப் எரியவைக்க பல்ப் வாங்க வேண்டும் என்று தெரிந்தது.

சமீப காலமாக அது அவனை தொடர ஆரம்பித்து கொண்டிருந்தது. அவனுக்கு அது பற்றிய அறிவு இருந்தும் இல்லாமல்தான் இருந்தது.

தனக்கிருக்கும் அதீதத்தை  அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

"ஒரே ஆனால் உண்மையான தத்துவ பிரச்சனை தற்கொலைதான்" என்று காம்யூ சொன்னதை அவன் கிரகித்து கொண்டபோது சில நாட்களில் அது அவனுக்குள் இருந்து அவனுக்கு வெளியில் வெளிப்பட்டது.

சில மாத்திரைகள் கவுன்சிலிங் மூலம் அதை விரட்டியடிக்க முடியும். அதை விரும்பவில்லை.

அதன் இருப்பு அவனுக்கு பிடித்தது.

அதனால்தான் அவனுக்கு அதீத துணிச்சல் தர முடிந்தது.  அவன் தனிமையை போக்கியது அதுதான்.

அதை கொல்வதற்கு விரும்பவில்லை.

அது விரும்பும்போது மட்டுமே அவனிடம் வருகிறது என்ற சிக்கலை அவன் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

அதன் உருவம் ஏதோ ஒரு மாதிரியான வடிவம்தான். வர்ணங்கள் கூட மாறிக்கொண்டே இருக்கும்.

குரல் மூன்று பேரின் குரலாய் கேட்கும். மூன்று பேரின் குரல்கள் ஒன்றாகவும் கேட்கும்.

அவன் நடந்து கொண்டிருந்தான்.

இந்த உலகம் அவனுக்கோ அல்லது அவனுக்கான உலகம் இதுவோ அல்ல என்பதை இருபக்கமும் முடிவு ஆனதும் கீழ்த்தரமான பயணியை போல் இருவரும் மனதை மாற்றி கொண்டனர்.

திமிர் ஒன்றுதான் ராஜ போதையாக இருக்கும். அதை த்ராவகம் போல் பீய்ச்சி கொண்டே செல்ல வேண்டும் என்று நினைப்புடன் வாழ ஆரம்பித்தான்.

அது உதவியது.

அத்தியாயம் 4

அறைக்குள் நுழைந்த போது இரண்டு வேலைகளையும் நேர்த்தியாக செய்து முடித்தது குறித்து மகிழ்ந்தான்.

அது அவன் அருகில் வந்து அமர்ந்தது.

கேட்டது.

எங்கே போயிருந்தே?

பூம்புகார்.

இல்ல...தாரிணி கூட போனியா?

இல்ல...

மௌனமாக இருந்தார்கள்.

பேசமாட்டியா அவன் இப்படி கேட்டான்.

கவிதை ஒண்ணு எழுதணும். சொல்றேன் எழுதறையா?

சொல்லு...

சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான். மூச்சினை இழுத்து சட்டென்று தும்மல் போல் அதை வெளியே தள்ளி மீண்டும் அதையே பலமுறை செய்தான்.

தலைப்பு சொல்லு என்றான்.

தலைப்பு இல்லாத கவிதையா சொல்லு.

"தெருவை உடைக்கிறது
பிச்சைக்காரன் பாத்திரத்தின் ஒலி.
பசிக்குள் புகையும் மனதை
அப்போதும் வதைக்கிறது ஆண்குறி".

போதும்...

இன்னும் இருக்கு. சொல்றேன்.

அவன் எழுந்து அறையில் விளக்குகளை
ஒளியூட்டி கொண்டான்.

ரொம்ப இருட்டா இருக்கு இல்ல, அவனை அது கேட்டபோது தலையை அசைத்தான்.

நீ எப்போ சினிமா எடுக்க போறே?

பாதி எடுத்துட்டேன். மிச்சம் எடுக்க மாட்டேன். அது தியேட்டருக்கு  வெளியில் படம் பார்த்த மக்களே மீதியை நடிக்கும்படி திரைக்கதை வச்சு இருக்கேன்.

ஏய்...ரொம்ப புதுமையான சினிமா...

அது அறைக்குள் பறக்க ஆரம்பித்தது.

பறந்தால் பசி என்று அர்த்தம்.

சிங்காரம்  மெஸ்ஸுக்கு போனால் புரோட்டா கிடைக்கும்.

அவன் கிளம்பும்போது அது அவன் தலைக்குள் புகுந்து கொண்டது.

அத்தியாயம் 5

அவனை யாரோ வன்மமின்றி மிதமாய் தொட்டு கொண்டிருப்பதை போலவே உணர்ந்தான். அப்போது பேசாது இருந்தால் வருடி விடுவது போன்றும் அழுத்தி விடுவது போன்றும் கூட இருக்கும்.

இது போல் இப்படி அடிக்கடி அவனுக்குள் நிகழ ஆரம்பித்துள்ளது. அந்த தொடுகை மிக இனிமை. யாரோ ஒரு பெண் குரல் தன் பெயரை மீண்டும் மீண்டும் கூப்பிடுவது போலவே இருக்கும்.

வெயிலில் நடக்கும்போது அப்போது அத்தனை சூடு தெரியவில்லை. வெயிலும் குளிரும் கூட தெரியவில்லை அவனுக்கு.

ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவோமா?

அவ்வளவு பணம் இப்போ இல்லையே.

பணம் வேணுமா?

ம்.

அப்போ நேர நடந்து வலதுபக்கம் திரும்பி கீழ இறங்கிடு.

நடந்து போனான். இறங்கினான்.  அது பஸ் ஸ்டாண்ட்.

இங்கே எப்படி பணம்...? கிடைக்கும்?

எவ்ளோ கூட்டம்...போய் பிச்சை கேளேன்.

அன்று அவனுக்கு அது புது அனுபவம். இப்படி முன்பு சம்பவித்ததில்லை. கால் கூசியது.  தடுமாறினான்.

அவன் உடைகளும் தோரணையும் அந்த பேருந்துகளை வாங்க வந்திருக்கும் ஒருவனாய் மட்டுமே காட்டக்கூடியது.

பசி...பசி...போய் பிச்சை கேளு...
அம்மா பசி அப்பா பசி ன்னு கேளு கேளு.
கேள்றா...நாயே...ஓ..சாரி சாரி.. கேளேன்.

இப்போது 'அது' முன்புபோல் இல்லை. அவனை திரிக்க ஆரம்பித்தது.

அவன் அதற்குள் மட்டுமே வாழ வேண்டும் இனி அது மட்டுமே அவனுக்கு முடிந்த ஒன்று என அது சொன்னது போல் தோன்றியது.

எப்போது சொன்னது என்பது மட்டும் நினைவில் இல்லை. சொல்லி இருக்கும்.

மாட்டேன். அது கேவலம்.

நீ டேரெக்டர்தானே. அப்போ போய் பிச்சை கேக்கற மாதிரி  எனக்கு நடிச்சு காட்டு. நடிக்க கத்து கொடு.

மாட்டேன்.

அப்போது அந்த பேருந்து நிலையம் நெளிய ஆரம்பித்தது. ஒவ்வொரு வாகனமும் பெருத்த ஓநாய்கள்  போல் ஊளையிட சின்ன சின்ன எறும்புகள் வரிசை குழம்பி அலைய ஆரம்பித்தன.

காடாய் மாறிய அந்த வெளியில் ஒரு பெரிய லாரி மிருகத்தை போல அவனை பார்த்தது.

லாரியில் இருந்து ஒரு நாக்கு வெளியில் நீண்டு உடலெல்லாம் நக்கி கொடுத்தது.

கொஞ்ச நேரத்தில் சரட்டென்று வேகம் கொண்டு ஓட ஓட  விரட்டியது. திரும்ப முடியாத சுவரில் வைத்து யானையை போல நசுக்கி கொண்டே இருந்தது.

காட்சிகள் இப்போது மாறின.   

அவனை நோக்கி பல வண்ணங்கள் திரண்டு எழுந்து வந்தன. நிறங்கள் வெவ்வேறு குரல்களில் அவனை நோக்கி இரந்து கேட்க ஆரம்பித்தன.

மெல்ல மெல்ல அந்த குரலால் அவன் தன் காதுகளில் குருதி வடிவதை உணர ஆரம்பித்தான்.

கால்கள் நடுங்கி உடையில்  சிறுநீர் கழிந்து கொண்டிருப்பதை  உணர்ந்ததும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.

நிற்காது திரும்பி பார்க்காது உயிரை இல்லாமல் ஆக்கிக்கொண்டு ஓடிய ஓட்டம் அது. மூச்சு இறைக்க ஓரிடத்தில் நின்ற போது ஒரு அமைதியை அடைந்தான்.

தான் எங்கிருக்கிறோம் என்பது புரிந்தது.

அதே பஸ் ஸ்டாண்ட்.

இங்கே எப்படி வந்தோம் என்பதை அவனுக்கு சொல்ல ஒருவரும் இல்லை.

பசி மறைந்து அருகில் இருந்த கடைக்கு சென்று ஒரு சிகரெட் வாங்கினான்.

பூம்புகார் போகலாமா?

அதுதான் கேட்டது.


அத்தியாயம் 6

தான் அதுக்கு  நிறைய இடம் கொடுத்து விட்டோம் என்று அவன் கருதினான். அதை தன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை முடிவு செய்தான். ஆனால் அது எப்படி? எப்போது?

அவன் வாயிலிருந்து ஒரு வாடை கிளம்பியது. என்ன ஒரு நாற்றம். மெள்ள புகையாய் மாற்றமுற்று அறை முழுக்க நிரம்பியது.

தான் தூங்கி கொண்டிருக்கிறோம் என்றான். அது அவனுக்கே கேட்கவில்லை.

நடு இரவில் என்ன இப்படி ஒரு நாற்றம் என்பதை அவன் உணரும்போது அது அவன் நெஞ்சருகே அமர்ந்திருந்தது.

வாயில என்ன எச்சல் ஒழுகுது.

அவன் துடைத்து கொண்டான்.

அதான் இந்த வாடையோ...

அந்தப்பக்கமில்ல. இடதுகை பக்கத்தில்.

அவன் இடது கையை தேட ஆரம்பித்தான். அது சுவற்றில் தொங்கி கொண்டு இருந்தது. எப்படி அது அங்கே போனது என்று அவனுக்கு புரியவில்லை.

அதில் வெட்டுப்பட்ட ரத்தம் வழிகிறதா என்று கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தான்.

நாளை வாடகை பணம் கேட்டு கோனார் வந்தால் இந்த கறைகளை என்ன செய்வது என்று புரியவில்லை.

நல்லவேளை...

கையில் காயங்களோ ரத்தமோ இன்றி  சுத்தமாய் இருந்தது. ஃபேன் காற்றில் அவ்வப்போது வலம் இடமாக ஆடியது.

வளது கைய வச்சு நோண்டிட்டு இருக்கியா, அதை வச்சு வாய தொடடா. நாறித்தொலையுது என்றது கடுப்புடன்.

தொங்கும் இடது கையை என்ன செய்வது என்று பார்த்தபடியே வாய் எச்சிலை துடைக்க ஆரம்பித்தான்.

எச்சில் ஊறி வருவது நிற்கவில்லை.

சில கணங்களில் எச்சில் நீராய் மாறி வாயிலிருந்தும் மூக்கில் இருந்தும் கொட்ட ஆரம்பித்தது.

சட்டென்று பீய்ச்சி ஊற்றியது.

ஒருகையால் வாயையும் மூக்கையும் மூட முடியாது போகவே அறை முழுக்க நீர் நிரம்பி அவனை உள்ளே இழுக்கும் சுனை போல் மாறியது.

நீரின் வேகத்தில் கழன்று விழுந்த செத்த இடது கை அவன் பார்க்கும் போதே தலையை சுற்றிக்கொண்டு எங்கோ சென்று மறைந்தது.

கால்கள்  சக்தி கொண்ட மட்டிலும் உதைந்து கொண்டே இருந்தன. அதுவோ அவனை பார்த்து சிரித்தது.

அப்படித்தான்...அப்படித்தான்..நீச்சல் அடி.

காப்பாற்று என்று வாய் விட்டு கத்த முடியும் என்று அவனுக்கு தோன்றவே கத்த நினைத்தான்.

திடுக்கிட்டு விழிப்புற்றான்.

பாய் முழுக்க ஈரமாய் இருந்தது.

பாயையும் லுங்கியையும் ஓரமாய் வைத்து விட்டு பாத்ரூமுக்குள் வேகமாய் சென்றான்.

விடியும் வரை வெளியில் வரவில்லை.

அத்தியாயம் 7

அந்த காலை நேரம் கிழட்டு ஆமையை போல் முழித்து பார்த்து கொண்டிருந்தது. அவன் இருப்பு கொள்ளாது தவித்தான்.

படிக்க வேண்டும். அப்போதுதான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியது.


அடுக்கில் இருந்த பல புத்தகங்களை தள்ளி விட்டு தேடி கொண்டே இருந்த போது மிக சரியாக அந்த புத்தகம் அவன் கைக்குள் வந்தது.

பழைய சரோஜாதேவி புத்தகம்.

இது அவன் கைக்கு கிடைத்ததே ஒரு வரலாறு.

ஒரு நாள் சிறுவனாக இருந்தபோது மொட்டை மாடியில் விளையாட சென்றான்.

அது துள்ளல் நிறைந்த பருவம்.
நடு மாடியில் அந்த புத்தகம் காற்றில் விரிந்து துடித்து படபடத்தது.

வியப்புடன் எடுத்து வாசித்து பார்த்த போது அதன் ஒவ்வொரு வரிகளும் மிக புதுமையாக ஒரு இன்பத்தோடு நகர்ந்தன. 

அந்த வரிகள் அவனை புரட்டி எடுத்து காற்றோடு காற்றாய் கவ்விக்கொண்டு அலைந்தது.

அது எப்படி தன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்திருக்கும் என்று யோசிக்க முயன்று தோற்று போனான். அதை கிழித்து எறியலாம் என்றால் சரஸ்வதியை கிழித்தால் பாவம் என்று தோன்றியது.

இன்னும் அதில் பல வரிகள் மர்மமாகவே இருந்தன. அதற்கெல்லாம் அர்த்தம் தெரியும் வரை வைத்திருப்பது அவ்வளவு கஷ்டம் அல்ல அவனுக்கு.

அதை படிக்கும் போதெல்லாம் அவன் ஒரு மின்னல் கொட்டிய உணர்வை அடைந்தான்.

காலப்போக்கில் அந்த புத்தகம் அவனுக்கு போரடித்து போனது. வேறு புத்தகம் கிடைக்குமா என்று மொட்டை மாடிக்கு சென்று கதவை சாத்தி வைத்துவிட்டு ஜன்னல் கதவின் இடுக்கு வழியே விடாது பார்த்து கொண்டிருப்பது தேனான பொழுது போக்காய் கழிய ஆரம்பித்தது.

இப்படி போன ஒருநாள்தான்  அவன் எட்டி பார்க்கும் போது அவன் அக்கா எதுவோ கூர்ந்து படித்து கொண்டிருப்பதை பார்த்தான். அடிக்கடி தலையை தூக்கி அக்கம் பக்கமும் பார்த்து கொண்டிருந்தாள்.

சட்டென்று கதவை திறந்தபோது அவள் திடுக்கிட்டு அதை அடுத்த வீட்டில் இருக்கும் கணேசமூர்த்தியின் அறையை நோக்கி விட்டெறிந்தாள்.

அவன் புரியாது விழித்தான்.

ஒன்னுமில்ல என்னமோ பழைய நோட்டீஸு...அதான் தூக்கி போட்டேன் என்றாள்  அவள் சிரித்துக்கொண்டே.

சரியாய் அடுத்த வருடம் கணேசமூர்த்தி அக்காவை இழுத்து கொண்டு ஓடினான்.

அன்று அவன் கைக்கு கிடைத்த புத்தகத்தை இன்று வரை வைத்து இருக்கிறான். அது அவன் அக்கா படிக்காத புத்தகம். இன்னும் கூட கணேசமூர்த்தி அதை தேடிக்கொண்டு இருக்க கூடும்.

அவன் அந்த காலத்தை நினைத்துக்கொண்டு கைகள் நடுங்க அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான்.

அது நிறமிழந்து பழுப்பு ஏறி பொலிவற்ற அச்சு மையில் விளங்காத ஓரிரு படத்துடன் இன்னும் வனப்பு குன்றாத காட்டுமிராண்டியாக மாறி அவனை ஏதோ ஒரு காலத்துக்குள் விரட்டி கொண்டே இருந்தது.

"படிச்சிட்டு பாலத்துக்கு அடியில் போக போறியா" என்று கேட்டுக்கொண்டே அது வந்தது.

புத்தகத்தை மூடி வைத்தான் அவன்.

சிரித்தது.


அத்தியாயம் 8

பாலத்துக்கு அடியில் செல்வது அவனுக்கு புதிய ஒன்று அல்ல. மனிதனின் நினைவுகள்  மனதில் படை  சிரங்கை போல அரிக்கும் போதெல்லாம் அவன் அங்குதான் செல்வான்.

மனிதர்கள் அவனுக்கு அலுப்பு தருபவர்களாக மாறி விட்டனர். “உன் உழைப்பு அவனுக்குத்தான் சேரும்” என்று சொன்னால் கூட போதும் எந்த மனிதனும் ஸ்தம்பித்து நின்று விடுவான். 

மெயின் ரோட்டிலிருந்து விலகி சில அடிகள் நடந்து போனால் தாழ்வான பாலம் ஒன்றை பார்க்கலாம்.

அதன் கைப்பிடி சுவரை பற்றி பக்கவாட்டில் வழுக்கி கொண்டு போனால் நாணல் புதருக்குள் கொண்டு போய் விடும்.

அப்படியே வலது பக்கம் திரும்பி கீழே கிடைக்கும் நரகலை மிதிக்காது தாண்டி தவ்வி தவ்வி கடக்க ஒரு ஆழமான குகை போன்ற இடத்தில் நயமான வருசநாட்டு கஞ்சா கிடைக்கும்.

அவன் பல சமயம் அங்கே புகைத்து இருக்கிறான். அதற்கு வேண்டியே பல சமயங்களில் அங்கு வருவதும் உண்டு.

அதனை கடந்து கோரைப்புல் பாதைக்குள் புகுந்து செல்ல அங்கே வேண்டிய அளவு ஆட்கள் இருப்பார்கள்.

ஆட்கள் என்றால் பெண்கள், சில அரவாணிகள் மற்றும் சில ஆண்கள். விருப்பம் போல தேர்ந்து எடுக்கலாம்.

ரூமெல்லாம் கிடையாது. பெரிய மறைப்புகள் இருக்காது.

நிழல் பார்த்து ஓரிடத்தில் பழைய பாயிலோ அல்லது நின்று கொண்டோ வேலையை முடித்து விட்டு வர வேண்டியதுதான்.

அவன் வழக்கம்போல் அவளிடம்தான் போனான். அவள் மற்றவர் போல் வெற்றிலை சுவைத்து காறி உமிழ்ந்து கொண்டிருக்க மாட்டாள். அதுதான் பிடித்த விஷயம்.

பிடிக்காதது அவளின் பெரிய பால்சுரப்பிகள் திசைக்கொன்றாய் முகம் திருப்பி பிரிந்து செல்லும்.

அவளிடம் இரண்டு பித்தளை சிலுவைகளும் ஒரு தாலிக்கொடியும் இருந்தது. அவள் பெயரோ ஊரோ அவனுக்கு தெரியாது.

அவள் முதல் உறவு அவளின்  பதிமூன்று வயதில் ஒரே நேரத்தில் அவளின்  தந்தையோடும் சகோதரனுடனும் நிகழ்ந்ததாம்.

பிற்பாடு அவள்  தந்தை இதில் சோகம் கொண்டு அவள் தமையனை  கொன்று சிறை சென்றாராம். அது அப்போது மேற்கு மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்ட செய்தி என்று சொன்னாள்.

மேலும் அவள் தமிழ் 'கலாச்சார காவல் சார்ந்த சிலர் எங்கள் ஊருக்கு... என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கவே அவன் புறத்தே காறி உமிழ்ந்து விட்டு அவள் மீது ததும்பினான்.  

அவளோடு இருக்கும் நேரத்தில் மட்டும் அது அவனிடம் வராது. அவளை கடந்த பின் பொந்துக்குள் சென்று கஞ்சாவை புகைத்து விட்டு நீண்ட தொலைவு உடல் அலுக்க நடந்து சென்று பின் ரூமுக்கு சென்று விடுவான்.

இன்றும் அவளோடு அவன் பின்னி கிடந்தபோது மஞ்சளும் நீலமுமாய் வர்ண ஒளியை அவன் பார்த்தான்.

அதற்குள் அவன் அதை பார்த்தான். அது அன்று எப்படியோ வந்து விட்டது. கோரத்தில் சிடு சிடுத்த அதன் முகம் பயங்கரமாக இருந்தது.

அவள் மீது கிடந்த அவன் அதை அப்படி பார்த்தவுடன் பயந்து போய்  குரலெடுத்து நாயை போல் உறுமவும் ஊளையிடவும் செய்ததால் அவளும் பயந்து போய் பணம் எதுவும் வாங்காது எழுந்து ஓடினாள்.

ஒரு அரவாணி வேகமாய் ஓடி வந்து அவன் வயிற்றில் ஓங்கி ஓங்கி  குத்திக்கொண்டே இருந்தான்.


அத்தியாயம் 9

அறைக்குள் அது இன்று இன்னும் யாரோ ஒருவரை கூட கூட்டிக்கொண்டு வந்ததை உணர்ந்தான்.

வயர் பொசுங்கும் வாடை அறை முழுக்க நிரம்பி மூச்சை அடைத்தது.

"எங்கே இருக்க சனியனே வந்து தொலையேன்" கோபமாய் கத்தி கொண்டும் கெஞ்சியும் அழுதும் அவன் புலம்பி கேட்டு கொண்டே இருந்தான்.

நான் வரமாட்டேன் இனிமே அதன் குரல்தான் அது.

வா

மாட்டேன்.

நீ வந்தாத்தான் எனக்கு நல்லா இருக்கும்.

இப்போது இரண்டு குரல்கள் அவனுக்கு முன்னும் பின்னுமாய் கேட்க ஆரம்பித்தன.

தலைக்கு மேலும் தலைக்கு கீழும் பின்னிக்கொண்டு அலைந்த அந்த குரல்கள் அழுதும் வெடித்தும் கொஞ்சியும் எச்சரித்தும் சுற்றிக்கொண்டே இருந்தது.

இங்கிருந்து ஓடிடு.
பேச்சுதுணைக்கு அவளை கூப்பிடு.
போர்ஹேஸ். விஸ்கி.
பூம்புகார் போலாம்.
குரேசேவா
மையதிரிபுவாதம்
காண்ட் ஹெகலிசம்
நாய் கத்துது ஓடாதே
டயலெக்டிக்கல் மெட்டிரியலிசம்
சாவு நிச்சயம்டா உனக்கு
பொருள் முதல் வாதம்
பூம்புகார்...பூம்புகார்...
திருச்சி திருச்சி
கஞ்சா வேணுமா
சாவுடா நாயே
வாழ்க வாழ்க பாரத சமுதாயம்...

அவன் காதை இறுக்க அழுத்திக்கொண்டு வயிற்று வலி வந்தவன் போல் சுருண்டு படுத்து கொண்டான்.

அவன் முன்னால் ஒரு கத்தி சுழன்று கொண்டிருந்தது.

எடுத்து குத்திக்க. குத்திக்க.

அதன் முனை பற்றி நேரே நெஞ்சை நோக்கி வேகமாய் சரித்தான்.

மொத்'தென்று ஒரு குத்தாய் விழுந்து வெறும் வலி மட்டும் மிஞ்சியது.

கரண்டியோ. தயிர் மத்தோ.

அலுப்பு மேலிட சோர்ந்து தூங்க ஆரம்பித்தான்.

கண்களை இறுக்கி மூடிக்கொண்டபின் அது அவன் கால் கீழ் வந்து அமர்ந்தது.

அதை உணர்ந்தாலும் காட்டி கொள்ள விரும்பவில்லை.

விழிக்க முடியாது கிடந்தான்.

தூங்கினான்.

அத்தியாயம் 10

அவன் விழித்தபோது அங்கு நடு இரவு.

அது அமர்ந்திருந்தது.

நீ ஏன் பாலத்துக்கு வந்தே?

நீ பண்றதை பாக்க.

பாத்தியா?

அவளை நீ என்ன செஞ்சே?

அவன் பதில் தராது பேஸ்ட்டை எடுத்து விரலில் தீற்றி பற்களை தேய்க்க ஆரம்பித்தான்.

அது முன்புபோல் மணக்காது கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவையாய் இருந்தது. அவசரமாய் துப்பி விட்டு முகத்தை கழுவினான்.

சொல்லு அவளை என்ன செஞ்சே? அது அவனை முறைத்து பார்த்தது.

அப்போதும் பதில் தரவில்லை.

அது ஓடிப்போன உன் அக்கா தெரியுமா என்றது.

இல்ல.

அப்போ உன் தங்கைதானே..

அவதான். “கணேசமூர்த்தி ங்கொக்காளை கழட்டி உட்டுட்டு போய்ட்டான். இப்போ அவ  த்தா...தேவ்டியா களுதே... நீ அவளைத்தா.........”

அவன் தலையில் மாற்றி மாற்றி அறைந்து கொண்டு அழ ஆரம்பித்தான்.

இல்ல...இல்ல..இல்ல...கதறி அழுதான்.

இப்போது அவனுக்கு அழுகை கோபமாய் மாறி வெறி பிடித்தது போல் மாறினான்.

அது சிரித்தது.

பாவத்தை போய் தொலைடா பன்னாடை பயலே, அழுக்கு பயலே, கஞ்சா குடிகாரா...ஓடு என்றது.

அறையில் இருந்த ஒற்றை விளக்கு பிஸாசின் சிரிப்பை போல் எரிந்தது. அந்த ஒளி பட்ட அவன் உடல் வியர்வையில் கசகசத்தது. அவன் நிழல் அவனோடு பேச ஆரம்பித்தது.

யாரையும் நம்பாதே

சரி நீ யாரு...

இனிமே நான்தான் நீ புரியுதா?

ம். புரியுது.

தென்னை மரத்தில் போய் படுத்துக்க.

அது எங்கே இருக்கு? அதில் எப்படி படுக்கணும்.

நிழல் கட்டிலை காட்டியது.

அதான் தென்னைமரம்.

இல்ல. கட்டில் அது.

அப்படித்தான் சொல்வாங்க. நம்பாதே.
யாரையும் நம்பாதே. உன்னை நீ நம்பாதே.

கட்டிலில் ஏறி படுத்தான்.

பாலத்துக்காரி அவன் அருகே வெற்றிலை போட்டு குதப்பிக்கொண்டே சிரித்தபடி புடவையை தூக்கினாள்.

சரேலென்று கட்டிலில் நழுவி கீழே விழுந்தான்.

ஏண்டா தென்னை மரத்திலிருந்து படகில் குதிச்சே.

அது வந்து நின்றது.

கணேசமூர்த்தி வறான். உன் அக்காளை அவன்கிட்ட அனுப்பு என்றது.

தான் ஒரு இயந்திரம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

சரி அனுப்பறேன்.

உன் அக்காளை நீ என்ன செஞ்சே.

.........

இன்னொரு வாட்டி சொல்லு.

..........

இன்னொருவாட்டி

..........., ........, .......

பாவம்தானே அது?

ஆமா.

ரொம்ப பாவம் அது.

அவன் ஆமா ஆமா என்றான்.

அப்போ அதை சரி பண்ணு.

எப்படி?

கதவை திறந்து வெளியே போ. அப்போ காத்து அடிக்கும். நடந்து நடந்து போ. அப்போ உனக்கு கால் வலிக்காது.

சரி, அப்பறம்...

லெப்ட் டேர்ன் எடுத்து நேரே போ.

சரி.

அங்கே ஜில்லுன்னு இருக்கும். காத்து வேகமா வீசும்.  ஈரமா இருக்கும். அந்த ஈரத்துக்குள்ளே போனா நீயும் ஈரமா ஆகிடுவே.

அப்போவும் நிக்காம உள்ளே போய்ட்டே இரு. ஒரு கழுகு உன்னை தூக்கி வெளியே போடும். அப்போ வெளியில் வந்துடு. நீ செஞ்ச பாவம் எல்லாம் போய்டும்.

சரி.

அவன் கிளம்பினான்.

நீ வரலையா?

பாவத்தை தொலைச்சிட்டு வாடா நாயே. நான் இங்கே இருக்கேன்.

சரி வரேன்.

இறங்கி நடந்தான்.

அவன் போனது ஆள் விழுங்கும் கடலை நோக்கி.

******************************


பாகம் 2

அத்தியாயம் 1

(2005 ”ம் வருடம் பிற்பகுதிகளில்)


'வத்'தென்று பிடரியில் ஒரு மிதி விழவும் வாயில் இருந்த ஒட்டுபீடி தெறித்து கீழ் சிதறும்போது

தினேஷ் நெஞ்சுக்குள் புகை சிக்கி கண்களில் ஈரம் நிரம்பி கமறல் மிகுந்து இருமலோடு திரும்பி பார்க்கும் போது பஞ்சலிங்கம் ஆவேசமாய் நின்று கொண்டிருந்தார்.

படிச்சு பாஸ் பண்ண வக்கில்லாத நாய்க்கி புகை சுகம் கேக்குதோ? போய் கழுதெகிட்டே கேட்டு குடிக்கலாம் இதுக்கு என்று அவர் ஆரம்பித்தபோது இது இரவு வரையிலும் நிற்காது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

பல கோடி பஞ்சலிங்கங்கள் நிரம்பிய ஒரு தேசத்தில் இந்த பஞ்சலிங்கமும் மாசு மருவற்று எந்த அடையாளமும் இன்றி பிறந்து வளர்ந்து

மனையை போற்றி மனைவியை ஆண்டு மூன்று குழந்தைகள் பெற்று நிம்மதியாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் அப்படியே விரைந்து சாகவும் துடியாய் துடித்து கொண்டிருப்பவர்.

தினேஷ் நடுவில் பிறந்தவன். மேலும் கீழுமாக அக்கா தங்கை.

அவன் ஊர் எதுவென்றால், ஒரு நாற்றம் மிகுந்த பெரிய நகரத்தின் ஆசன வாய்க்கு அருகில் ஒட்டி  இருந்த

ஒரு மத்திய ஊருக்கு இடுப்பில் மச்சம் போல் மிளிர்ந்த ஒரு கிராமத்துக்குள் நுழைந்து வழி விசாரித்து கொண்டு போனால் வரும் ஒரு சிறு பொட்டல் கிராமம்.

நிலம்  உயிர்ப்புடன் இருந்தவரை அள்ளி கொடுத்த வரை இந்துக்கள் இருந்தனர்.

அந்த ஊர் நடுவே இருந்த பிரபலமான சிவன் கோவில் இப்போது வயோதிகனின் கடைசி காவி பிடித்த பல் போன்று ஒளி இழந்து கோரமாய் இருந்தது.உற்சவ மூர்த்தி இன்னும் தேஜஸ்வியாக இருக்கிறார் என்ற பேச்சும் உண்டு.

அதை ஒட்டி வாழ்ந்த பற்பல இந்துக்கள் காலப்போக்கில் ஓட்டம் எடுத்ததும் மிஞ்சிய சில இந்துக்கள்  காலப்போக்கில் வந்து சேர்ந்து இன்று மிகுந்து இருந்த பல முஸ்லிம்களுடன் மனம் முழுக்க அன்பு பொருந்தி வாழ்ந்து வந்தனர்.

அதாவது அப்படி காட்டி கொண்டனர்.

முஸ்லிம்களின் அயராத உழைப்பில் ஓட்டு வீடுகள் இரண்டு மாடி வீடுகளாக மாறி வளர்ந்தன.

“கறுத்துப்போன எந்த  சாமானையும் ஜாதியை ஒழித்து விட்டால் பின்  சமூக நீதியின் மூலம் தங்கமாக்கி விடலாம்” என்ற கனவு அந்த இந்து குடும்பங்களில் நாற்பது வருடத்துக்கும் மேல் கனவாகவே இருந்தாலும் வாக்களிக்க என்னவோ தவறுவதே இல்லை.

பங்குனி கொடைக்கு காப்பு கட்டி கலர் தோரணம் கட்டி மைக் செட் போட்டு மலேஷியா வாசுதேவன் பாடலுக்கு ப்ருஷ்டம் ஆட்டிக்கொண்டிருந்த விடலைகள் நிலமும் மழையும்  பொய்த்த பின் குவாரி வேலைக்கு சென்று வேலை முடிந்த கையோடும் காசோடும்  டாஸ்மாக்கில் புகுந்தனர்,

அங்கே ஜாதியற்ற சமூக நீதி ஜாதி பேதமற்று வாந்தியும் மூத்திரமுமாய் கலந்து ஓடியது.   

பஞ்சலிங்கம் சமீபத்தில் ஏதோ இனம் புரியாத சமூக பயத்தில் சிக்கி கொண்டார். நாட்டில் சட்டங்கள் என்று ஒன்று இருப்பதாக அவர் நம்பவே இல்லை.

தன் உழைப்பு மட்டுமே அவருக்கு நிம்மதியை கொண்டு சேர்க்கும் தன் ஜாக்கிரதை மட்டுமே தன்னை காப்பாற்றும் என்று திடமாக நம்பினார்.

அந்த நம்பிக்கையில் வெடி வைத்தது தினேஷ்.

"பாத்துளா, ரெண்டு பொட்டைய வச்சிருக்க, துளுக்கா மேல ஒரு கண்ணா விரும்வோய்.ஊருக்குள்ள  தினார் இளிப்பை பார்த்தீரா. மச்சு ஊடா எல்லாம் மாறி போச்சுள்ளா. பொறுப்பா இரும் வேய்”  என்று யார் யாரோ கிள்ளி போட்டதும் பஞ்ச லிங்கம் நிலை குலைந்து போனார்.

தன் ஒற்றை பிள்ளை தலை நிமிர்ந்தால்  எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவர் நம்பினார்.

முழு நம்பிக்கையும் தினேஷால் முடமாகி போகும் என்று அவரால் கற்பனை செய்தும் பார்க்கவில்லை.

ஆனால் அதுதான் நடந்தது.

அத்தியாயம் 2

தினேஷ் அறிவார்ந்த குழந்தை. அந்த குழந்தை தவழ்ந்து விளையாடிய காலத்தில் குடும்பம் அதை மெச்சியதற்கு காரணம் ஊரும் மெச்சி மகிழ்ந்ததுதான்.

குழந்தை பருவத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா? எல்லா கழுதைகளும் குட்டியில் பேரழகுதான்.

தினேஷ் அப்படி அல்ல என்பதே உண்மை.

பள்ளியில் படித்த காலத்தில் ஒரே நாளில் கடன் வாங்கி கழிக்கும் கணக்கு விளையாட்டிலும்  வங்காள விரிகுடாவையும் தோடர்களின் வாழ்க்கை முறையையும் கற்று தந்த போது குழம்பி போனான்.

சாமர்த்தியமாக படித்து சாமர்த்தியமாக தேர்வு எழுதி சாமர்த்தியமாக வேலைக்கு சென்று சாமர்த்தியமாக பெண்டாட்டியை ஆண்டு சாமர்த்தியமாக வாழ்வை முடித்து கொள்ள அவனுக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று ஊர் முடிவு செய்தபோது கல்லூரி படிப்பை பாதியில் துறந்து வீட்டுக்கு வந்திருந்தான்.

பஞ்சலிங்கம் இடிந்து போனார்.

அவரின் மொத்த சமூக பயமும் அவன் மீது படிந்து அதுவே அவர் குரல் வளையை நெருக்க ஆரம்பித்தது.

எல்லா நடுத்தர வர்க்க பெருசை போலவே கையாலாகாத தந்தையின் பாத்திரத்தை பஞ்சலிங்கம் கச்சிதமாக செய்ய துவங்கியபோது தினேஷுக்கு புரிந்தது...
இப்போது தன் அப்பா பொழுது போகாமல் இருக்கிறார் என்பதும்.


இனி அப்படித்தான் இருக்க போகிறார் என்பதும். 

கல்லூரியில் அவன் வளப்பமாய் இருந்த நூலகத்தில் மட்டுமே இருந்தான்.

அது அவனுக்கு 'ஒவ்வாததை' கற்று கொடுத்து அனைத்துக்கும் புறத்தே செலுத்தியது.

எல்லோரும் திக்கு முக்காடும் பிரச்சனைகள் அவனுக்கோ எளிதாக இருந்தது. அவனுக்கு மனதில் தோன்றிய பிரச்னைகளோ மற்றவர்க்கு ஒரு தூசியை போல் கூட தெரியவில்லை.

காலப்போக்கில் இந்த இருவரும் ஒருவரையொருவர் ஒரு வழியாக புரிந்துகொண்டு பட்டும் படாமலும் வாழ முடிவு செய்தனர்.

இருந்தும் கல்வி கசந்ததும் வீடு வந்தான்.

ஒரு நாள் அக்கா கணேசமூர்த்தியோடு ஓடிப்போனாள்.

ஒருநாள் அவன் தங்கை சிக்கந்தருடன் தூத்துக்குடிக்கு ஓடிப்போனாள்.

இந்த இரு நிகழ்வும் அவனை பாதிக்கவில்லை. பஞ்சலிங்கம் மட்டும் நோயுற்று சரிந்தார். நிலத்தை குத்தகைக்கு விட்டு கட்டிலில் விழுந்தார்.

தினேஷ் ஒற்றையானான்.

ஒருநாள் திரைப்படம் இயக்கும் ஆசை வந்தது. பின்  எழுத்தாளனாய் மாற வேண்டும் என்றும் ஆசை வந்தது.

புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட அவன் சென்னைக்கு கிளம்பினான்.

பஞ்சலிங்கம் இருமலோடு அவனை வெறித்து பார்த்தார்.

இப்ப எங்கெலே புடுங்க போறீய?

யப்பா, மெட்றாசுக்கு...

'கடல் ல விளுந்து சாவுலே'

புரண்டு படுத்து இருமினார்.

தினேஷ் சென்னைக்கு வந்து விட்டான்

அத்தியாயம் 3

அந்த சிறு கூட்டம் ஆர்ப்பரித்து நின்றது.

தினேஷ் அங்கு இருந்தான்.

"ஜனநாயகத்தின் இன்னிசை  என்பது மக்கள் பிரதிநிதித்துவம். அதன் சங்கநாதம் மதம். மதத்தின் தொட்டில் ஒரு பெரும் கட்டிடம்.

உலகமெங்கும்  இருக்கும் அக்கட்டிடத்தின் அக்குள் மயிரில்  என்ன மணக்கிறதோ அதுதான் உலகமெங்கும் இடைவிடாது நாறிக் கொண்டிருக்கிறது".

இந்த கட்டிடம் என்பது என்னவென்று அவர்களுக்கு புரிந்ததால்தான் அந்த அலையடிக்கும் சிரிப்பு.

நன்றாகத்தான் இருந்தான் தினேஷ். போன புதிதில் அங்கு பணி புரிந்த அவன் நண்பர்கள் முறை வைத்து காப்பாற்றினர்.

பிரிட்டிஷ் சேம்பர் நூலகத்திலும் கன்னிமராவிலும் நேரங்களை செலவிட்டு கொண்டிருந்தான்.

திரைப்படம் என்பது உண்மையில் அசுர சூழ்ச்சி கொண்ட இடமாக இருந்தது. உறுதியாய் நின்ற இடங்கள் கூட உறுதியாய் வழுக்கி விடும் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

பெரும்பாலும் அரசியல் பினாமிகளின் அல்லகைகள் மட்டுமே வடிகட்டிய ராஜ தந்திரத்துடன் வலம் வந்தனர்.

ஆட்டை தூக்கி மாட்டில் போட்டு யானையை இழுக்கும் அவர்கள் சுதாரிப்பாக சொந்த ஜாதிக்காரனையும் ஜால்ரா ஜாதிக்காரனையும் கொண்டே கலையை தொழிலாக்கி வைத்தனர்.

முன்பே அத்தொழிலில் சாதித்த ஜாம்பவான்கள் டிவி பக்கம் ஒதுங்கினர்.

படிப்பறிவு அற்ற இவர்கள் சுய வரலாறு கூட எழுதலாம்.
எழுதவில்லை. ஏன் என்று அவர்களாக சொன்னால்தான் உண்டு.

தினேஷ் சில எழுத்தாளர்களுடன் தொடர்பை வளர்த்து கொண்டான். இனி இவர்கள்தான் சரியான ஜனநாயகத்தை கட்டமைக்க வந்த ருத்ர சாதுக்கள் என்று தோன்றியது. மெரினாவில் அந்தியோர சந்திப்புக்களும், விவாதங்களும் இதை அவனுக்கு நம்பிக்கையாக்கின.

வெறும் கவிதைகளோடும் உரத்த குரலோடும் உள்ளே சென்றால் ஒரு நாயும் மதிக்காது என்று தினேஷுக்கு புரிந்தது.

இப்போது காவியோ கருப்போ ஒரு அடையாளம் வேண்டி இருக்கிறது. கருப்பு சீக்கிரம் மேலே வரமுடியும்.

வாய் கூசாத பொய்களும் சண்ட பிரசண்டங்களும் இருந்தால் போதும். காவிக்கு இதுவே வேறு மாதிரி. அடியாள் தோரணை இருக்க கூடாது. பொட்டும் இளிப்பும் முக்கியம்.

சரி. நமக்கு எதற்கு வேண்டாத பேச்சுக்கள்..

அந்த எழுத்தாளர்களில் சிலர் சினிமாவுடன் தொடர்பில் இருந்தனர். அவர்கள் வணிக இதழ்களில் இலக்கியம் படைத்து அறிவு சார் மாந்தர்களை உய்வித்து பின் பத்தரிக்கை ஆபீஸ் வாசலில்  'கால் கழுவிக்கொண்டு' சினிமாவுக்குள் புகுந்து விட்டனர். அதுதானே நோக்கமும் கூட.

அவர்களுடன் தினேஷ் நெருங்க காரணம் அவர்களில் பலர் அவனுக்கு அருகில் இருக்கும் ஊர் என்பதுதான்.
கிராமத்து ரகசியங்கள் என்று சில இருக்கும்.

அதை திறம்பட அள்ளி விட முடிந்தால் இதழ்கள் அவர்களை பூ வைத்து பொட்டு வைத்து சின்ன ட்ரைனிங் கொடுத்து உள் வாங்கி கொள்ளும்.

பிறகென்ன...அப்பத்தா, அம்மாயி கதைகளும் கிழட்டு சண்டியர்கள் ஊர் மேய்ந்த சங்க சிறப்புகளையும் குளிர குளிர எழுதிவிட்டு பேர் வாங்க வேண்டும்.

காலம் செல்ல செல்ல ஒரு நட்டு கழன்ற இயக்குனரை சோப் போட்டால் டிஸ்கஷன் நேரத்தில் கூப்பிட்டு விடுவான். அவனை ஏறக்கட்டினால் போதும்.

பின்னொரு நாளில் வசன பொறுப்பை கேட்டு வாங்கி பேர் வாங்க வேண்டும். பின் ஒரு கதை. பின் ஒரு தொப்பை தயாரிப்பாளனின் சந்திப்பு.

இயக்குனர் ஆகி விடலாம்.

தினேஷுக்கு இதுவெல்லாம் இடித்தது.

அத்தியாயம் 4

ஃபினாமினாலஜி என்ற தத்துவக் கோட்பாட்டை முன்வைத்த ஹூசர்ல் பற்றி விடிய விடிய படித்துவிட்டு ஹெகலிசம், ஜோசப் டிட்சன், போர்ஹெஸ், போலா ஓலாய்சராக்,ரோல்ட் டால்,மோ ஷென், லாரி ஸ்டோன் என்று இரவு பகலாய் அலைந்தவனுக்கு....

இந்த திரைத்துறை புதியதாய் இருந்தது.

எல்லா 'லஜி'க்களும் அங்கே ஓரம் கட்டப்பட்டு வேறொன்றை சிருஷ்டி செய்தார்கள்.

எல்லா கருத்துக்களும் விஷம் பூசி வைக்கப்பட்டு இருந்தது. ஜெயகாந்தன், புதுமை பித்தனை யார் என்று கேட்டனர்.

சில ஸ்டார் எழுத்தாளர்கள் மட்டும்  அங்கே உச்சமாய் இருந்தனர். ஓசிக்குடியும் சில்லறை விபச்சாரமும் இனித்து கிடந்தது. அவர்கள் பிராண்டெட் ரைட்டர்ஸ்.

நாம் முக்கி முக்கி யோசித்து ‘சங்கமம்’ என்று எழுதி இலக்கியம் ஆக்க முடியாத ஒன்றை அவர்கள் “ஓ......” என்று எழுதி ஆக்கும் சர்வ சக்தி படைத்தவர்கள்.
அது எப்படி என்றால் அது அப்படித்தான். 

சினிமாவில் 'போடா தக்காளி’ என்றால்  'போடா துண்ணி' என்றால் அது கெட்ட வார்த்தை இல்லை என்று சென்சார் சொன்னது.

பார்க்கும் நம் எளிய உழைப்பாளி, இந்நாட்டு மன்னராகிய நம் மக்களுக்கு மகிழ்ச்சியில் விடைக்க வேண்டும். துயரம் மறந்து மகிழ வேண்டும். ஆகவே அவர்களும் அப்படியே ஆமோதித்தனர்.

அந்த குல  விளக்குகள் ஈன்று எடுத்த பிள்ளைகள் அப்படங்களை  பார்க்கும்போது கூடவே பாடவும் ஆடவும்  சொல்லி ரசித்தனர்.

சற்று பெருத்த பன்னிரெண்டு வயது பெண் குழந்தை யார் யாரோ கூட்டமாய் பார்த்து ரசிக்க தன் சின்னஞ்சிறிய புது வெள்ளை முலைகள் இரண்டும் இசைக்கு ஏற்ப தன்னை மறந்து டண்டணக்கா என்று குலுக்கி குலுக்கி ஆடுவதை  டிவியில் காட்டும் போது அதன் பெற்றோர் வாக்கு பிச்சை கேட்கவும் தவறவில்லை.

சரி. நமக்கு எதற்கு வேண்டாத பேச்சுக்கள்..

வாழ்க்கையோ மக்களுக்கு அமோகமாக இருந்தது.

இவைகளில் தினேஷ் மட்டும் ஒவ்வொரு நாளும் தடுமாறினான்.

அவனுக்கு பிடித்த எழுத்தாளர்  ஒருவர் (ஆந்திரா பார்டர் ஓரத்தில் இருக்கும் சிறிய ஊரில் பிறந்தவர்) ஆரம்பத்தில் சிரமப்பட்டு சிறப்பான இடத்துக்கு வந்திருந்தார்.

வசனத்தில் கொடி கட்டி பறந்த (ஏய்ய்ய், டாய்ய்ய் வசனங்கள்தான்) காலத்தில் துணை நடிகையோடு ஒருத்தியோடு அலைந்து அலைந்து திரிந்தார்.

“இது வெறும் சொறிதான். இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். என்று சொன்னதையும் செய்தார்.

மஞ்சள் பத்து போட்டு ஜட்டி போடாமல் வெய்யிலில் காட்டி கொண்டிருந்தால் போதும்” என்று சொன்னதையும் செய்து பார்க்க நினைத்தபோது பச்சை நிறத்தில் பாசம் பிடித்த கலரில் மூத்திரம் போகவே முக்கி கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு தினேஷ் அவரை போய் பார்த்தான்.

எல்லாம் ஊழ் வினை என்றார். எந்த வைத்தியத்திற்கும் அதை கட்ட முடியவில்லை.நல்லவேளை எய்ட்ஸ் இல்லை.

சிபிலிஸ் என்றார்கள். கோனேரியா என்றார்கள்.

அந்த சீழ் வடியும் பாம்பு எந்த மகுடிக்கும் ஆட முடியாது
வறண்டு கிடந்தது.

ஊருக்கு போனதும் கண்ணுற்ற பெண்டாட்டி விரட்டி விட்டாள்.

மார்த்தாண்டம் பக்கத்தில் இதற்கு ஸ்பெஷலாக  ஒரு வைத்தியர் இருக்கிறார் என்பது தெரிந்ததும் அங்கே சென்று சம்பாதித்ததில் கொஞ்சம் செலவு செய்து வைத்தியர் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு வீட்டை வாங்கி குடியேறினார்.

தினேஷின் நண்பன் ஒருமுறை போய் பார்த்துவிட்டு வந்தான். என்ன செய்கிறார் என்று கேட்டபோது "வெயிலுக்கு காட்டிய நேரம் போக வள்ளத்தோள் எழுதியதை மொழி பெயர்த்து கொண்டிருக்கிறார் என்று சிரித்தான்.

தினேஷ் மனம் கசந்து போனான்.

தன் வசிப்பிடத்தை இன்னொரு புரட்சி எழுத்தாளர் வீட்டுக்கு மாற்றி கொண்டு போனான்.

திருமணம் செய்யாது அவர் இலக்கிய சேவை செய்து வருகிறார். ஏழெட்டு முறை அவரோடு பேசியது நட்பை நன்றாக இறுக்கி வைத்திருந்தது.

அவருடன் சில நாட்கள் நன்றாகவே போனது.

அத்தியாயம் 5

அன்று இரவு தினேஷ் தூக்கம் வராது படுக்கையில் கிடந்தான். எழுத்தாளர் தட்டு தடுமாறி உள்ளே நுழைந்தார்.

அவர் ரூமில்தான் இப்போது  தினேஷ் இருக்கிறான். அன்பு மிகுந்த உணர்ச்சி புயல். கையில் காசு இருந்தால் கர்ணன்தான்.

தினேஷ் அவரோடு இணக்கமானது அவரின் படித்த திமிரில் இருக்கும் ஆண்மையையும் சபைக்கு அஞ்சாத வீரத்தையும்  பார்த்துதான்.

"நாதாரிப்பய அவன். நீ நம்பாதே" என்றார்.

சரிங்கண்ணே.

யாரை என்று கேட்க மாட்டான். ஏன் என்றும் கேட்க மாட்டான். அது சக எழுத்தாளர் அல்லது ஒரு நடிகர் அல்லது ஒரு இயக்குனராக மட்டுமே இருக்கும்.

அந்த நபரை பற்றிய பச்சையான வசவுகள் இனி வந்து விழும் என்று தெரிந்து கொண்டான்.

டே தம்பி..டேய்... சாப்டியாடா...

சாப்டேன்னே...

தம்மு அடிக்கிறியா...

கொடுங்கண்ணே...

இந்தா ஸ்பெஷல் தம்மு. பிரம்மபத்திரி. பத்த வச்சு புகையை நெஞ்சுக்குள்ள வச்சுக்க... வொம்மாள...எல்லா கஷ்டமும் மறந்து போய்டும்.

அது கஞ்சா.

தினேஷ் முதன்முறையாக  அதை புகைத்து  ரசித்தான்.
அவன் அதை பயன்படுத்த தடுமாறும் போதெல்லாம் தொடையில் தட்டி கிள்ளி  அன்புடன் சொல்லி கொடுத்தார்.

அந்த போதை முதலில் அடக்க முடியாத சிரிப்பை கொண்டு வந்தாலும் காட்சியளவில் தன் அருகே இன்னொரு தினேஷ் அமர்ந்து தன்னை ரசிக்கும் உணர்வை அடைந்தான்.

இது இன்னும் எத்தனை நேரம் நீடித்து இருக்கும் என்பதை அவனுக்கு அப்போது கணிக்க முடியவில்லை.

அங்கேயே தரையில் படுத்து கொண்டான். எழுத்தாளர் அருகில் படுத்து கொண்டார். பெருத்த உடல் கொண்ட அவர் உடனே குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.

தினேஷ் அந்த மயக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வர விரும்பவில்லை.

பஞ்சலிங்கமும் அவர் மனைவியும் வந்து மறைந்தனர். அக்கா கணேசமூர்த்தியோடு சரோஜாதேவி படித்து கொண்டிருந்தாள்.
தங்கை சிக்கந்தரின் தொடைகள் மீது உருண்டு கொண்டிருந்தாள்.

தினேஷுக்கு வாய் கோணுவது போல் உணர்ந்தான். இப்போது எல்லா காட்சிகளும் அடியோடு மாறின.

எழுத்தாளர் சட்டென்று விழித்து பேச ஆரம்பித்தார்.

டே தம்பி...டேய்... நல்ல இலக்கியம் வேணும்னா கோவில்பட்டிக்கு ஓடு.  நாகர்கோவிலுக்கு ஓடு.

இல்லாட்டி மலையாளத்தான் எழுதுவான் போய் படி. இன்னும் வேண்மா...வங்காளம் போ ரஷ்யா போ. பிரான்ஸ் போனா மொட்டகுண்டியோட படம் போட்டு எழுதுவான் படிச்சு பாரு... ஆனா, வொம்மாள...இங்கே மட்டும் இருக்காத. நாதாரி பயலுவ நாசம் பண்ணிடுங்க...அவர் கண்களில் கஞ்சா ஜொலிக்க பேசி கொண்டே போனார்.

தினேஷ் திடுக்கிட்டு விழித்தபோது எழுத்தாளர் நன்கு தூங்கி கொண்டிருந்தார்.

பிரமை. அனைத்தும் காட்சிகள். அல்லது கனவுகள்?
கஞ்சாவை அவன் வெறுத்தான். ஆனாலும் அவன் மனம் அதை விரும்பியது. 

கஞ்சா மயக்கத்தில் இருந்து தெளிந்திருந்த தினேஷுக்கு உடல்  சற்று வலித்தது.

மீண்டும் அயர்ந்தான்.

திடுக்கென்று அவனுக்கு விழிப்பு தட்டியபோது உலகின் அனைத்து அருவெறுப்பும் அவன் மீது படிந்தது.

கீழே அவன் லுங்கி காலடியில் அவிழ்ந்திருந்தது. எழுத்தாளர் தினேஷ் கழுத்தை சுற்றி ஒரு பிடி போட்டு இறுக்கி வைத்திருந்தார்.

அவன் குதத்தில் வழி தேடி அவர் பெருத்த உறுப்பு முட்டி மோதி அலைந்து கொண்டிருந்தது.

சகலமும் தெரிந்து கொண்டான் தினேஷ்.

அண்ணே, விடுங்கண்ணே, வேண்டாம்னே...வேண்டாம்னே. 

டே தம்பி, சும்மா இரப்பே... ஸு... பேசாத.. சூ..  சூ.. 

நெருக்கமான கணத்தில் சரட்டென்று வேகமான லாரி சுவரை உடைத்து போவது போல் அது புகலிடம் தேடி அறுத்து அறுத்து உள்ளே செல்கையில் வலியின் கொடூரத்தை உணர்ந்தான்.

எழுத்தாளர் நாய் போல தன் பெருத்த வயிற்றால் எக்கி எக்கி  அவன் முதுகில் கொந்தி கொந்தி முட்டினார் . பின் அது நிற்கவில்லை.

தினேஷ் ஒரு ஓட்டையாக மாறினான்.

அங்கே சர்வ அறிவும் அழுக்கும் ஒழுக்கமும் நம்பிக்கைகளும்
ஈரமாய் நமத்து அழுகி பறக்கும் புழுக்களாக மாறியது.

தனக்குள் எதுவோ பீறிட்டு கசிந்து முடிவதை உணர்ந்த தினேஷ் கண்களில் நீர் பொங்க கிடந்தான்.

ஒரு கையாலாகாத கொலைவெறி அவனுக்குள் நிரம்பி அதே வேகத்தில் வடிந்தும் போனது.

அத்தியாயம் 6

காலையில் தினேஷ் விழித்தபோது நேற்று நடந்தது அனைத்தும்  நினைவுக்கு வந்தது. அவன் அவமானத்தில் குறுகுறுத்து கிடந்தான்.

அருகில் எழுத்தாளர் காணவில்லை.

இனி இங்கு இருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றினாலும் உடனடியாக வேறு போக்கிடம் இல்லை.

எழுந்து சென்று குளித்தான். கண்களில் ஏனோ கண்ணீர் நிற்காது வழிந்தது.

தன் முதுகுப்பக்கம் யாரோ சாத்தான் மூலம் கொலை செய்யப்பட்ட உணர்வை அவனிடமிருந்து போக்க முடியவில்லை.

வெளியில் வந்தபோது டேபிளில் கொஞ்சம் பணமும் ஒரு பிரபல பதிப்பக முகவரியும் இருந்தது. கூடவே அந்த பதிப்பகத்தாருக்கு சிபாரிசு கடிதம்.

டேபிளில் கஞ்சா நிரப்பிய சிகரெட் இருந்தது. அதை புகைத்து முடித்தான். கொஞ்ச நேரம் அவன் உலகம் மறந்து மெய் மறந்து கிடந்தான்.

வெறும் வயிற்று கஞ்சா புகை அவன்  குடலை பிரட்டியது. வாயை கழுவிக்கொண்டு சிங்காரம் மெஸ்ஸில் பரோட்டாவை தின்று விட்டு பதிப்பகம் நோக்கி கிளம்பினான்.

நாட்டில் பிரபலமான பதிப்பகத்தில் அதுவும் ஒன்று. அதன் நிறுவனர் கொஞ்ச காலம் மொழிபெயர்ப்பு எழுத்தாளராக இருந்தார்.

அவர் அம்மா அவசரத்துக்கு பக்கத்து வீட்டில் புளி மிளகாய் வாங்கி சமைக்கும் நடுத்தர வர்க்கத்து படிப்பு வாசனை அறியாத தென் தமிழகத்தை சேர்ந்த குடும்ப ஸ்திரீ. அப்பா வட்டிக்கு பணம்  தரும் லேவாதேவி தொழில்.

ஸ்கூலுக்கு போக முடியாத இந்த நிறுவனர் கிடைத்த இடத்தில் எல்லாம் கிடைத்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார்.

ஸ்கூல் போகாததற்க்கு காரணம் அவரின்  உடற்பிரச்னையான  இடது கைதான்.

அது லொட லொடவென்று ஆடிக்கொண்டே இருக்கும். தோள் பட்டையில் ஆரம்பித்து சுண்டி விரல் வரையிலும் முன்னும் பின்னுமாகவோ எதிர் எதிர் திசைக்கு செல்லும் பெண்டுலம் போன்றோ ஆடும். அதன் இஷ்டத்துக்கு ஆடும்.

பிரபல வைத்தியர்கள் கை விட்டபின் ஸ்கூல் போக வெட்கப்பட்டு வீட்டோடு முடங்கினார்.

தாழ்வு மனப்பான்மை பெருகி வளர்ந்தது. அதுதானே உன்னத எழுத்தாளனையும் இந்த புவியில் சிருஷ்டிக்கிறது.

அவர் தனது ஆட்டம் கண்ட கையோடு இலக்கிய கூட்டங்களில் பங்கெடுத்து உதிரி உதிரியாய் சிலரை நட்பாக்கி  கொண்டு சில மொழிபெயர்ப்புகள் எழுதி அதையும் ‘ஓஹோஹோ’ முன்னுரைகளால் போணி செய்தார்.

மெட்றாசுக்கு கிளம்பி வந்தார்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அவரை மகோன்னதமாய் வாழ வைத்தது.


அத்தியாயம் 7

தினேஷ் பதிப்பகத்துக்கு சென்று கொஞ்சமாய் காட்டிக்கொண்டிருந்த ரிஷப்ஷனிஸ்டிடம் எழுத்தாளர் வைத்து சென்றிருந்த அந்த கடிதத்தை கொடுத்து விட்டு காத்திருந்தான்.

அழைக்கப்பட்டான்.

உள்ளே சென்றான்.

நிறுவனர் லொட லொட இடது கைக்கு இறக்குமதி மிஷின் வைத்து பொருத்தி ஆடாமல் நிறுத்தி வைத்திருந்தார். ஜெர்மன் மேக் ஆக இருக்கலாம். பார்க்கும்போதே ‘கிண்’னென்று இருந்தது.

பின் சொல்லுங்கள் நண்பர்...உங்களை பற்றி...

பூக்கோவிடமிருந்து ஆரம்பிக்கலாமா அல்லது பௌலா கன் ஆலென் னிடமிருந்து துவங்கலாமா என்று யோசித்து அவசரமாய் சினிமாவில் இயக்க விரும்புவது குறித்து ஆரம்பித்தான்.


ஸோ.. ஒரு புக் போட்டா அது விஸிட்டிங் கார்டு ஆயிருமா என்று சிரித்தார்.

தம்பி, நேர சொல்லிடறேன். நான் கட்சி ஆளு. எழுத்தை மட்டும் நம்பிட்டு இருந்தா இந்தா பாரு...இந்த விளங்காத கையோட பிச்சை எடுத்துட்டு தெருவில் அலைய போயிருப்பேன்.

பதிப்பகம்னு ஒண்ணை வச்சுக்கிட்டு அங்கே இருக்கிற பணத்தை வாங்கி இங்க முடக்கி புக் போட்டு வியாபாரம் பண்ணி பேர் பண்ணி பொழப்பை ஓட்டறேன்.
கிட்டத்தட்ட எல்லோரும் அப்படித்தான்.

எப்பவும் மக்கள்தான் ராஜா. அவங்கதான் இந்நாட்டு மன்னர். இதை சொல்லித்தான் கட்சி இருக்கு. நான் இருக்கேன். நீ வந்தா நீயும் அப்படி இருக்கணும்.

சுருக்கமா சொன்னா கட்சியை ‘இலக்கியம் மறக்கா இமயம்’னு நான் 'ஓம்பி' பாராட்டுவேன்.

கட்சி ‘இளைப்பற்ற இலக்கிய சிகாமணி’ னு என்னை 'ஓம்பி' சீராட்டும்.

இப்படி இந்த 'விருந்தோம்பலில்'  இலக்கியம் தன்னைத்தானே காப்பாத்திக்கும். இப்ப இருக்கிற  கட்சி தலைமைக்கோ ஒழுங்கா பத்து குறள் கூட சொல்ல தெரியாது. பாத்துகிடுங்க.

இப்போ இங்கே வேலை ஒண்ணு போட்டு தரேன். சேந்துக்க. அப்படியே சினிமால முயற்சி பண்ணு.

கிடைச்சா பாரு. இல்லாட்டி இங்கே வேலைய பாரு. இல்லாட்டி பத்திரமா ஊர் போய் சேரு என்று முடித்தார்.

சார்வாள் இப்படி முடித்தபோது தினேஷ் வெலவெலத்து போனான்.

கொஞ்சம் கூட யோசிக்காது இப்போதே தான்  வேலையில் சேர்வதாக கூறினான்.

நிறுவனர் சென்ட் மணக்க புன்னகைத்தார்.

தம்பி எழுத்தாளர் சொன்னனாலதான் நான் கேள்வி கேக்காம உன்னை நம்பி சேக்கறேன். இந்த ஓட்டை கையை வச்சு இங்கே வந்தப்போ அவர் ரூமில்தான் நான் தங்கி தின்னு தூங்கி கிடந்தேன்.

அப்பறம் முளைச்சு வந்தேன் எப்படி...??
கட்சி...வெக்கத்தை விட்டு சொல்றேன் ஒரு ரிவார்டெட் மாஃபியாதான் நான். அது பாத்தா திங்க முடியுமா..

இந்த "திராவிட" ன்னு ஒரு சொல்லை வச்சு சம்பாரிச்ச சொத்து. அப்பன்  மகன் பேரன் வப்பாட்டி பொண்ணு கூத்தியா மருமவள்னு  வேகம் வேகமா நீ முந்தியா நான் முந்தியானு கொள்ளையடிச்ச சொத்துதான்.

அப்படி பயக்காதே தம்பி.

நான் ஒண்டியா வீரமா இருக்கும்போது இவங்களை எதிர்த்து பேசி எழுதிட்டுத்தான் இருந்தேன். பழைய வேன் ஒண்ணுல வெறும் டீ குடிச்சிட்டு ஒண்ணாரருவா பன் தின்னு கம்யூனிஸ்ட்க்கு ஆதரவா மாசக்கணக்கில் பிரச்சாரம் பண்னினேன். அந்த காலம் அது. வயசு வேகம். இளமை திமிரு...அப்ப முடிஞ்சுச்சு. இப்ப...?

மக்களுக்கு புரியலை. நான் சாவ முடியுமா?

“புதிய வெளிச்சம்’ னு ஒரு தொகுப்பு போட்டேன். அது இதுன்னு எல்லா புஸ்தகத்திலும் தூக்கி வச்சு எழுதினான்.

வித்து கித்து போனதுக்கு அப்பறம் கணக்கு பாத்தா அம்பதாயிரம் லாசு. எனக்கு மட்டும்.

இல்ல.. கேக்கறேன் இந்த மயிராண்டிங்களை நம்பி அப்பறம்  எப்படி புக் போடறது?   

இப்போ நீயே பாரேன்.

என் கார் முப்பது லட்சம். சில்வர் ஸ்பூன்ல சாப்பிடறேன்.
நொண்டிக்கையன் னு என்னை ஒரு காலத்தில்  சொன்ன ஒரு போறம்போக்கு அவன் பினாமி காலேஜுல என்னை செமினார்ல பேச கூப்பிடறான்.

தன்னம்பிக்கையின் சின்னமாம் நான். நானும் போனேன். திரும்பவும் போவேன். வெக்கம் மானம் பாக்க முடியுமா.

நான் எழுதலை இவன்வெறும் மாமா பையன்னு ‘கதிர்வெடி’ ல  நேத்து எழுதி இருக்கான். எழுதிட்டு பன் வாங்கி துண்ணுவான்.

என்ன பிரயோஜனம்? பூக்கோ படிச்சிட்டு இங்கே வந்து நீ நிக்கறே.. இதான் உலகம் என்றார். 


செங்கோட்டை பக்கம் சுரண்டையில் இருந்து கிளம்பி வந்து ஒத்த கையோட இதை என்னால சாதிக்க முடியுதுன்னா அதுக்கு காரணம் கட்சியும் இந்த முட்டாள் மக்களும்தான்.

இப்போ இந்த மட மாங்கா தமீளன் என் பேர  பாத்ததுமே புக் வாங்கரான்னா அது எப்படி? கார்ப்பரேட் சூத்திரம்தான். அதே நம்ம வாயால சொல்ல கூடாது. தமிழ்பற்றுனு  சொல்லணும்.

தொண்ணூறுல சண்டை போட்டு நாய் மாதிரி கடிச்சிக்கிட்டு இலக்கியம் வளர்த்த கபோதி பயல்க இப்போ என்னை தேடி வராங்க..

காரணம் என்று நிறுத்தியவர் கெக் கெக் கெக்கென்று சிரித்து விட்டு அந்த ஸஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்த்தார்..  “கட்சி”.       


ரெண்டாம் கிளாஸ் படிச்ச என் அத்தைக்கு 35 லச்ச ருவாய் கார், வீடு, புருஷன் எல்லாம்...எப்படி...கட்சி...
தலமை என் அத்தைய வச்சிருக்குனு சொல்றான்.

ஆமா என்ன செய்வான் இவன் என்று எதிர்க்கட்சியின் சின்னத்தை காற்றில் வரைந்தார்.

கூடுதலாய் செத்து கிடந்த இடது கையை வலது கையால் பற்றியபடி சாரில் இருந்து அரையடிக்கு எழும்பி காற்றில் இடுப்பை தூக்கி தூக்கி ஆட்டி ஆட்டி காட்டினார்.

தினேஷ் "புரிந்தது சார்" என்றான்.

அதான்பா என்று கொஞ்சம் ஆறுதல் அடைந்தார். 

இலக்கியம் வேற, வாழ்க்கை வேற...
ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு போய்டனும். புரிஞ்சுதா... நாளைக்கு வந்து வேலையில் சேர்ந்துருங்க...
தெய்வமே...புள்ளைய நல்லா காப்பாத்துப்பா என்று வேண்டினார்.

எழுந்தான்.

அப்பறம் தம்பி, எங்கே தங்கி இருக்கீங்க?

அவரோடுதான்.

நானும் வந்த புதுசில் அவரோடுதான் தங்கி சாப்பிட்டு ராத்துக்கம்  தூங்கி...அது ஒரு காலம். பச்சை தமிழன்னா அது அவர்தான்.

ரொம்ப ராசியானவர்... “ஏணி, ஏணி  அவர். யாரையும் பிடிச்சு போனா நல்லா உசரே ஏத்தி விடுவார்” என்று கன்னத்தில் போட்டு கொண்டார்.

தினேஷுக்கு இன்னும் ஆசனவாய் எரிந்து கொண்டே இருந்தது.

எதுக்கும் நீ திருவல்லிக்கேணில ஒரு ரூம் இருக்கு அங்கே வந்தா ஆபீஸ் சீக்கிரம் வார முடியும் என்று சொன்னவுடன். இரவே தான் அங்கே செல்வதாக கூறினான்.

அட்வான்ஸ் வாங்கிக்க.

தம்பி உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் ஆவார்.
விசுவாசம் இருக்கணும்.

நமது கட்சி.... என்றார் நீளமாக.

இவன் கட்சி பெயரை சொன்னதும் ‘வாழ்க மணித்திருநாடு’
என்றார்.

வணக்கம் செலுத்திவிட்டு வெளியேறி மெரினா பீச்சுக்கு போய் படுத்து கொண்டான்.

காற்று இதமாக இருந்தது.

மனம் வலித்தது. உலகம் புரிந்தது.

பீடி குடித்தபோது பஞ்சலிங்கம் பிடரியில் மிதித்த வலி இன்னும் இருந்தது.

என்ன ஆனாலும் பொறுத்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து அறைக்கு சென்றான்.

எழுத்தாளர் இருந்தார்.

எல்லாவற்றையும் கூறியதும் பொறுமையாக கேட்டுவிட்டு டே தம்பி இனி நல்லா வருவெட என்றார்.

பின் திருவல்லிக்கேணியில் ரூம் பார்த்து வைத்து இருப்பதால் காலையில் அங்கே சென்று விடுமாறு கூறினார். சரி என்றான்

இருவரும் கஞ்சா புகைத்தனர்.

தூங்க ஆரம்பித்தனர்.

நள்ளிரவில் எழுத்தாளர் தினேஷ் மீது கவிழ்ந்தார்.

மௌனமாக இருந்தான்.

நேற்று போல் வலிக்கவில்லை.

அத்தியாயம் 8

திருவல்லிக்கேணி தனி அறை பிடித்து இருந்தது. வேலையும் பிடித்து இருந்தது.

ஒரு மாதம் மேல் ஆயிற்று. சம்பளமும் வாங்கி விட்டான். அவ்வப்போது கஞ்சா புகைக்க ஆரம்பித்தான்.

விலை மாதர் கூடும் இடங்களும் தெரிந்து கொண்டான். குப்ரின் எழுதிய நாவலும் ஹாஸ்மியின் கதைகளும் நினைவில் வந்து போயின.

சம்பளமும் வேலையும் பசியின்றி அவனை வைத்தபோது லட்சியங்கள் உருக்குலைய ஆரம்பித்தன.

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்தபோது அந்த பெண் விடுதலை பற்றி எழுதி பெயர் பெற்ற கவிதாயினி வந்தார்.

அவர் கவிதைகள் படித்த போது அவன் பல முறை நெக்குறுகிய நிலையில் இருந்தான். இன்று அவர் நேரே.

தினேஷ் அவரிடம் விழுந்து விழுந்து கவிதைகளில் நினைவிருந்த வரிகளை சொல்லி அதில் அவன் கிடைத்த  தரிசனத்தை சொல்லும் போது அவர் அவன் கைகளை பெற்று தன் கைக்குள் வைத்து கொண்ட போதும் நிறுத்தாது பேசி கொண்டே போனான். கண்கள் பனித்து நிறுத்தியபோது அவரும் பனித்து இருந்தார்.

"எத்தனை பேறு.  எனக்கு இப்படி வாசகர் இருப்பதை நினைக்க" என்றார்.

நிறுவனர் வெளியில் வந்து தலையை நீட்டி பார்த்து விட்டு செருமியபடி உள்ளே சென்றார்.

“ஐயாவை பார்த்துட்டு வரென்பா”

கவிதாயினி சென்றார்.

தினேஷ் அமர்ந்து கவிதாயினியிடம்  முன்பு கேட்க வேண்டிய கேள்விகள் என்று சிலவற்றை வைத்திருந்தான். அதை எழுதினான்.

கேட்க வேண்டாம். கையில் கொடுத்து விடுவோம் என்று அதில் போன் நம்பரையும் சேர்த்து எழுதினான்.

நேரங்கள் சென்றது. ஏதேனும் அருந்த வாங்கி  கொடுக்க வேண்டும் என்ற நினைப்பினூடே நிறுவனர் அறைக்கு சென்றான்.

நிறுவனர் அறைக்கதவை தட்டாது கண்ணாடி வழியே எட்டி பார்த்தான்.

நிறுவனர் வாய் பிளந்து ஆகாயம் நோக்கி கழுத்தை உயர்த்தி ஒட்டகம் போல மேலும் கீழுமாக ஆட்டி கொண்டிருந்தார்.

கவிதாயினியை காணோம்.

கூர்ந்து பார்த்த போது கவிதாயினி நிறுவனர் ஸீட்டுக்கு கீழே குறுகி அமர்ந்து  இருந்தார்.

முதுகு முழுதாய் தெரியவில்லை. அவர் தலை மட்டும் அவசரமாய்  மேலும் கீழுமாக ஆடிக்கொண்டே இருந்தது.

தினேஷுக்கு புரிந்து போயிற்று.

தளர்ந்து போய் வெளியில் வந்தான்.அப்போதே  கஞ்சா குடிக்க வேண்டும் என்று நினைத்தான்.

ரிஷப்ஷனிஸ்ட்டை ஒரு பார்வை பார்த்து கையால் கோப்பை போல் வளைத்து டீ குடிக்க செல்வதாக காட்டிவிட்டு நடந்தான்.

அவள் எதுவும் சொல்லாது மர்ம புன்னகையில் சரி என்றாள் . உள்ளே எதுவும் நிகழாத மாதிரியும், நிகழ்வதில் இப்போது தன் பங்கு ஒன்றுமில்லை என்பதாகவும் மொபைல் போனில் கிடந்தாள் என்றே தினேஷுக்கு அவளை பார்க்கும்போது தோன்றியது.

ஒரு சிகரெட் பற்ற வைத்த போது கால்கள் நடுங்கியது.

மீண்டும் அலுவலகம் வந்த போது அவன் டேபிளில் கவிதாயினிக்கு எழுதிய அந்த கடிதம் இல்லை.

இன்னொரு பேப்பரில் சிறு காகிதம் ஒன்றில் சிறு குறிப்பு இருந்தது.

மாலையில் அழைக்கிறேன். கவிதாயினி. என்று.

அத்தியாயம் 9

மாலையில் கவிதாயினி அழைக்கும் போது தினேஷ் கொடிமலர் பாரில் இருந்தான்.

நீங்க எந்த ஊர்? எங்கு இருந்தீர்கள் இத்தனை நாட்கள் என்று கேட்டபோது அவன் அனைத்தும் சொல்லி முடித்தான்.

இப்போது எங்கே இருக்க?

கொடிமலர் பார்.

ஒரு ஃபுல் வாங்கிட்டு வர முடியுமா?

வாங்கி கொண்டு போனபோது எட்டு மணி ஆகியிருந்தது.

பாட்டிலை திறந்து தனக்கு ஊற்றி கொண்டு கொஞ்சம் நீர் மட்டும் சேர்த்து ஒரே மடக்கில் சரித்து கொண்டார்.

அந்த பேமானி பயலோடையா இருந்த... உன்னையும் நோண்டி இருப்பானே? சொம்படிச்சானா உன்னை என்று கேட்டார்.

இல்ல என்றான் தினேஷ் கசப்போடு.

முன்னாடியே தெரியுமா உங்களுக்கு?

அவன் என் புருஷன்தான் என்றாள்.

தினேஷ் அதிர்ந்தான்.

கவிதாயினி சொல்ல ஆரம்பித்தார்.

பெண்ணுரிமை பேசப்பட்ட காலத்தில் தான் வறுமை மிக்க படிப்பற்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன்.

அப்பா திருட்டுபய. என் பெரியம்மாவை வச்சு இருந்தான். அம்மா முழு நேர  விபச்சாரி. (கவிதாயினி பற்றி தினேஷ் இன்டர்நெட்டில் படிக்கும்போது அப்பா விவசாயக்கூலி அம்மா நோயாளி என்று சொல்லி இருந்தார்)

நான் வீட்டை விட்டு ஓடி வந்தப்ப அந்த எழுத்தாளர் கிட்டதேதான் அடைக்கலமா போனேன் என்றார்.
அப்போ சில கவிதைகள் பிரசுரம் ஆகி கவிதாயினி பற்றி நாடே பேச கொண்டிருந்த நேரம். எழுத்தாளரோ சமூக மீட்பில் உறுதியோடு போராடி கொண்டிருந்த நேரம்.  

எழுத்தாளர்  கொஞ்ச நாள் குழுவிலும் கொஞ்ச நாள் இயக்கத்திலும் இருந்து புரட்சி கருத்து விதைத்து எழுதியும் வந்தார்.

நடுவில் சில காலம் கேரள காட்டில் இருந்து கொண்டு தென்மலை பீர் முகம்மதுக்கு கஞ்சா ஏஜெண்ட் வேலை பார்த்தார். மற்றவர்களுக்கோ  அதை லாவகமாக மறைத்து ஒரு நக்ஸலைட் பிம்பம் தந்து இலக்கிய உலகில் புரட்சி புயல் ஆனார்.

ஒருநாள் பீர்  அசந்த நேரத்தில் தண்ணி அடிக்க பணத்தை கேக்காது எடுத்து விட்டதை பார்த்த பீர் அடித்து விரட்டி விட்டான்.

பின் இங்கே வந்தவுடன் காட்டில் இருந்து சமூக மலர்ச்சி மலரை மலர வைக்க முடியாது என்று புரிந்து கொண்டேன்னூ ஒரே போடா போட்டு தேவடியாபய இங்கே வந்துட்டான் என்று முடித்தார். 

அப்போ அந்த ஈர்ப்பில் நான் அவருக்கு தாலி கட்டாத மனையாள் ஆனேன். அப்போது அவன் தம்பி கோடம்பாக்கத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் சப்ளை செய்யும் வேலை பார்த்தார்.

ஒருநாள் அவர் தம்பியோடு நான் சேர்ந்து இருப்பதை பார்த்து விட்டான். அன்று பிடித்தது சனி. போடா நாதாரி பயலே’ன்னு வந்துட்டேன்.

கவிதாயினி இப்போது வயதில் ஐம்பத்து நான்கில் இருந்தார்.

பின் என்னென்னவோ பேசி கொண்டிருந்தோம். முக்கியமாக இலக்கிய ஊழல்கள் பற்றி சொன்னார்.

நீ ஜாக்கிரதையா இருந்துக்க. எங்க பொழப்புதான்  இப்படி போயிடுச்சு. பாதி பேர் இன்டர்நெட்ல படிச்சிட்டு எழுதினதையே மாத்தி மாத்தி எழுதிட்டு இருக்கான்.

கூஜா தூக்கி பயலெல்லாம் கதை வசனம் னு எங்கேயோ போய்ட்டான். யுனிவர்சிட்டி பாட புஸ்தகத்தில் நான் எழுதின ஒரு கவிதை போட நாலு பேர் கூட படுத்தேன். 

முக்கியமா எழுதி ஒண்ணும் வாழ்க்கையை சந்தோசமா ஆக்கிக்கிற முடியாது. வெறும் துட்டுதான்.

மக்கள் எப்பவுமே மாங்கா பசங்க...அவுத்து காட்டினா எந்த புத்தகத்தையும் தூக்கி போட்டுட்டு போய்டுவான். யாரை படிச்சு என்ன எழுதினாலும் காசுதான் நிக்கும். அதுதான் பேசும்.  என்றார்.

போதை அவரை தாக்கி கொண்டிருந்தது.

அதுவெல்லாம் உண்மையா பொய்யா என்று அவனுக்கு புரியவில்லை. தினேஷை விட பதினைந்து வயதாவது அதிகம் இருக்கும். மரியாதையோடு இருந்தவன் இப்போது பயத்தோடு அவரை பார்த்துக்கொண்டு இருந்தான்.

சோபாவில் ஆடியபடி  சட்டென்று யோவ்...வாய்யா... என்றார்.

இப்ப தூங்குங்க. இன்னொரு நாள் என்றவனை வலுமிக்க கைகளால் இழுத்து சாய்த்தார்.

தினேஷுக்கு அன்றைய தூக்கம் அங்குதான்.


அத்தியாயம் 10

அலுவகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு அறைக்கு வந்தான்.

தினேஷ் ஒடிந்து போயிருந்தான்.

தான் என்ன கற்றுக்கொண்டு வந்தோம் கற்றவற்றில் இருந்து தன்னை திட்டமிட்டு திட்டவட்டமாக அனைத்திலிருந்தும் மறைக்கும் பிரபஞ்ச சக்தி எது என யோசித்து கொண்டே இருந்தான்.

பதில் இல்லை.

தினேஷின் பழைய காலங்கள் அவன் நினைவுக்கு வந்தது. யாருமற்ற பொழுதில் கூட புத்தகத்தின் வழியே அதை ஆக்கியோர்கள் அவனோடு பேசி கொண்டிருந்த காலங்களை  எப்படி மனதால் துதித்து கொண்டிருந்தோம்.

அப்போது என்ன மாதிரியான உலகம் நமக்கு தென்பட்டது என்று கேட்டு கொண்டான். பஞ்சலிங்கம் அவனுக்கு ஒரு பொருட்டாய் இல்லாமல் போனதும் அந்த காலத்தில்தான்.

ஒருவேளை இன்று பார்ப்பதுதான் உண்மையான உலகமா? இதுதான் பார்க்க பார்க்க தெரியும் உண்மையான பொருள் முதல்வாதமா என்றும் கேட்டு கொண்டான். குழம்பினான்.



ஒவ்வொரு புத்தகத்திலும் படித்த அவர்களோடு விட்டு விலகாது பிணைந்து செல்லும் வாழ்வில் தாம் சந்திக்கும் மனிதர்கள் புதிய லட்சிய உலகை எப்படி நிறுவ போகிறார்கள் என்பதை பார்க்கவும் அதில் பங்கு கொள்ளவும்  அவன் மனம் ஆவல் கொண்டு சிந்தித்து தூங்காத இரவுகள்தான் எத்தனை எத்தனை?

பார்க்க போனால் இன்றுவரையிலும்  நிகழ்ந்து முடிந்த நிகழ்ச்சிகள் எதுவும் அவனுக்கு விரும்பிய ஒன்று அல்லவே.

அவன் மதித்து கொண்டிருந்த மனிதர்கள் பலரும் தம் சொந்த  வாழ்க்கையில் இப்படி குற்ற உணர்ச்சி எதுவும் இன்றி வாழ்வது கண்டு மனம் கசந்து போனான்.

வெளியே சென்று கால் போன போக்கில் தினேஷ் அலைய ஆரம்பித்தான். தொடர்ந்து சிகரெட்டும் கஞ்சாவும் மாற்றி மாற்றி புகைத்து கொண்டிருந்தான்.

இலக்குகள் எதுவும் இன்றி நடந்தான்.

சில மாதங்களுக்கு முன்பு செல்லும் வழியில் அவன் முன்பே பார்த்திருந்த பிச்சைக்கார சிறுமிகள் சற்று வளர்ந்து இன்னும் அதையே மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருந்தனர்.

வழக்கமான இடங்களில் பார்க்கும் விலை மகளீர் இன்னும் கூடுதலாக மூன்று பேரை இணைத்துக்கொண்டு நின்று ஆரவாரமாக புன்னகை குன்றாது நின்று பார்வையால் அழைத்து கொண்டிருந்தார்கள்.

தான் இப்போது அல்ல எப்போதுமே இந்த உலகத்தில் வாழவில்லை என்று தோன்றியது.

பஞ்சலிங்கம் இதை எல்லாம் படிக்காமலே புரிந்து கொண்ட ஜன்மம்தானா? நாம்தான் அவரை நியாயமாக தெரிந்து கொள்ளாமல் அசட்டையாக தவற விட்டுவிட்டோமோ என்று அலை பாயும் மனதை பார்க்க சகிக்க முடியாது சுற்றி கொண்டே இருந்தான்.

வந்த பேருந்தில் ஏறி அமர்ந்தான்.

எங்க போகுது?

திருவண்ணாமலை.

ஒண்ணு கொடுங்க.

கர்சீப்பால் கண்களை மூடிக்கொண்டு வெயில் சுடும் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணிக்க ஆரம்பித்தான்.

கண்களும் மனசும் கலங்கி இருந்தன.


அத்தியாயம் 11

ஓரிரு நாட்கள் கழித்து அறைக்கு வந்தபோது மீண்டும் அவன் அமைதியற்ற நிலைக்கு போக ஆரம்பித்தான்.

கவிதாயினி போனில் இரண்டு தடவை கூப்பிட்டு இருந்தார்.

ஒரு முறை குறுந்தகவல்.

யோவ்....வசியா...வாய்யா...

போனை அணைத்து விட்டு தான் இப்படி எல்லோருக்கும் எச்சில் ஆனதை மறக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

முடியவில்லை.

பழைய புத்தகங்களை தேடி கொண்டிருந்தபோது அழுக்கு மிகுந்த அந்த புத்தகம் கைக்குள் வந்தது. சரோஜாதேவி புத்தகம். 

ஒருவேளை இந்த சாபம்தான் தன்னை இப்படி தீய்த்து மௌனமாக விரட்டி கொண்டிருக்கிறதா என்று யோசித்தான்.

இந்த அசிங்கத்தை இன்னும் ஏன் இப்படி காப்பாற்றி கொண்டு இருக்கிறோம்... ஒருவேளை கணேசமூர்த்தி மீது இருக்கும்
வெறுப்பு கலந்த கோபமாக கூட இருக்கலாம்.



அவனுக்கு பிரியமான அவன் அக்காவை காமத்தில் முக்கி கொதிக்க வைத்து  வேக வைத்து வெட்கமின்றி நாள்தோறும் தின்று புசித்து தானொரு ஆண் என்று பறைசாற்றி திரியும் அவனை ஒரு நாளெனும் நாமும் கொன்று திங்க வேண்டும் அப்போது உலையில் தீ  ஏற்ற இது வேண்டும் என அவனுக்கு யார் சொல்லி கொடுத்தார்கள் என்று யோசித்தான்.

போனை ஆன் செய்தபோது கவிதாயினி மிஸ்ட் கால்கள் ஆறாக இருந்தது.

எழுந்து முகம் கழுவி புதிய உடைகளை அணிந்து கொண்டு வெளியில் கிளம்பினான்.

தேனாம்பேட்டையில் இறங்கி இரண்டு தெருக்களை கடந்து வாசலில் அழகாய் பூத்திருந்த போகேன்வில்லா க்லாப்ரா புதர் இருந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

அது கவிதாயினியுடையது.

அத்தியாயம் 12

வீட்டுக்கு வந்தபோது தான் இந்த விஷயத்தில் ஒரு கை தேர்ந்த தொழிலாளியாக மாறி வருவதை உணர முடிந்தது தினேஷுக்கு.

கஞ்சா அடைத்த மூன்று சிகரெட்கள் அவனிடம் இருந்தது.

ஒன்றை புகைத்தான்.

வீட்டின் நினைவு வந்தது.அவன் கோபித்து கிளம்பி வந்த நாட்களிலேயே  அப்பா அம்மா இருவரும்  வயோதிகம் கண்டவர்கள்.

இத்தனை நாட்களில் அவர்கள் போய் சேர்ந்திருப்பார்கள் என்று அவனுக்கு தெரியும். கதிரேசன் மாமா எல்லாம் காரியமும் செய்துவிட்டு வீட்டை அமுக்கி கொண்டிருப்பார் என்றும் தெரியும். அப்போதும் அங்கு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.

அக்காவையும் தங்கையையும் நினைத்து கொண்டபோது கண்கள் முட்டிற்று.

அவர்கள் இருவரும் என்ன பாவம் செய்தார்கள்? தங்கை விதம் விதமான பொட்டு இட்டுக்கொள்ளும் காட்சி கண்களுக்குள் வந்து போனது.

தினேஷ் பசித்த மிருகம் முன் நிற்கும் தன் தனிமையை அதி தீவிரமாக அப்போது உணர ஆரம்பித்தான்.

திரும்பி திரும்பி யோசித்தும் பஞ்சலிங்கம் செய்த பாவம் என்னவென்று தினேஷுக்கு புரியவே இல்லை. ஆனால் யோசிக்க யோசிக்க அப்பாவின் அருகாமையை அவன் மனம் உணர்ந்தது.

அதை மட்டும் விரும்பியது. ஆண்களும் பெண்களும் அவன் உடம்பை குதறி எடுத்த காட்சிகள் நினைவில் வரும்போது அப்பாவை அவனுக்குள் யாரோ ஒருவனை போலவே தேட ஆரம்பித்தான்.

அன்னா ப்யாஸேட்ஸ்கயாவும், ஹுலியோ கோர்தஸாரும் தன்னை படித்ததற்காக சபித்து இருக்க மாட்டார்கள் என்றும் தினேஷுக்கு தோன்றியது.

இருந்தும், கஞ்சாவை உறிஞ்சி அதன் சாம்பலை தட்டிக்கொண்டு இருப்பதில் என்ன கிடைத்து இருக்கிறது என்பதை தினேஷ் தேடி துழாவி கொண்டிருந்தான்.

வெறும் தனிமை.

புத்தகங்களின் புது மணத்தை மனம் நினைத்து கொண்டிருந்தது.

கையில் இருந்த கஞ்சாவின் புகை ஆழமாய் சென்று அவன் மனதுக்குள் ஒரு ரம்யத்தை உண்டாக்கியது. அது நிரந்தரம் அல்ல.

இனி இது நிரந்தரமாய் இருக்க வேண்டும். வெளியே இருக்கும் குப்பைகள் நிறையவற்றை போதுமளவு தன்னுள் சேர்த்து கொண்டாயிற்று என்று சொல்லி கொண்டான்.

இருள் தினேஷை ஏந்தியது.

விளக்குகள் அணைத்த போது சிகரெட்டின் சிவந்த நுனி அவனை பார்த்து சிரித்தது.

அவனும் சிரித்தான்.

இருவரும் வாய் விட்டு சிரிக்க மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்த போது உலகமே மறைந்து போனதும் அதனுள் இருந்த தினேஷூம் மறைந்து போனான். 

தினேஷுக்கு இது பிடித்து இருந்தது.

நேரங்கள் கடப்பது தெரியாத மயக்கம் அந்த இருவருக்குமே.

வாசல் கதவு தட்டும் சப்தம்.

யார் அங்கே என்று கேட்டு கொண்டே கதவை திறந்தான்.

எழுத்தாளர்? கவிதாயினி..?

யாரும் அங்கு இல்லை.

திரும்ப வீட்டுக்குள் வந்தபோது வாசலில் யாரு என்ற குரல் கேட்டது.
ஒருத்தரும் இல்ல என்று சொல்லிவிட்டு பின் திடுக்கிட்டு குரல் வந்த திசையில் பின் திசைகளில் தேடினான்.

யாரும் இல்லை.

என்னத்தானே தேடினே?

சிரித்துக்கொண்டே அது வந்தது.

காரணமே இல்லாமல் அது அவனுக்கு பிடித்திருந்தது.

***********************

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Sep-19, 12:45 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : iraaichal
பார்வை : 349

மேலே