ஆரண்யக்காண்ட ஆளுமை

இராமக் காதையில் ஆகச் சிறந்தது
இராவணன் வரும் ஆரண்யக்காண்டம்

அத்திரி அனுசூயை கொடுரன் விராதகனோடு
சரவங்க முனி அவன் கொள்கை உடன் மனைவி

அகத்தியன் அவனை எதிர்த்த வாதாவி
வடமொழிப் படைத்த பாணினி

அழகு கொஞ்சும் மண்ணில் சொர்க்கம் பஞ்சவடி
கழுகு அரசன் சடாயு அவன் தம்பி சம்பாதி

சூரப் பெண் இலங்கை சூர்ப்பனகை
இராவணன் தம்பி கர்ண கொடூரன் கரண்

மாமன் மாரீசன் மற்றோர் அரக்கி அயோமுகி
இருந்த இடத்திலிருந்து கொல்லும் கவந்தன்

மதங்க முனி அவன் ஆசிரமத்து தவசி
அன்பால் உபசரித்த முதியவள் சவரி என

இக்காண்டம் தொடங்குவதே திராவிட தேசத்தில்
இதில் காணுவோர் முனிவராகவும் அரக்கராகவும்

பறவையாகவும் பாம்பாகவும் மிருகமாகவும்
துர்எண்ணம் கொண்டப் பெண்டீராகவுமே

ஏதோ நெருடல் இக்காப்பியத்தில் உள்ளதாக
என் நெஞ்சிற்குள் எழுகிறது ஏகத்திற்கும் வினா

எவரேனும் விளக்கினால் வாட்டமான சிந்தனை
எழுச்சியில் மீட்சியடையும் அன்பர்களே விளக்குக.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (5-Sep-19, 8:36 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 85

மேலே