குறளடி கவிதை

கணிதமும் கணினியும் கலியுக கடத்தியாம்
பணிபுரிவோர் இதன் பின்னே

நவீனத்தின் பாதை நலமான காற்றாம்
குறுஞ்செய்தியை கடத்தும் வழி

ஒளியின் வேகத்தில் உட்கிரகிக்க முயன்றால்
ஒப்புமையில்லா ஆற்றல் வரும்

மண்ணும் பணமும் மகத்துவம் பெறுவதால்
மனிதம் மலமென மாறும்

படிப்பை பணத்தால் பலவந்தமாய் பெறின்
புரைவோடிய மரம்போல் அறிவு

கலையோடே கவர்ச்சி இணைந்தால் சமூகம்
சஞ்சலத்தின் பின்னால் செல்லும்

அரசியல்வாதி மக்கள் யார் ஏமாற்றினும்
நட்டம் மக்களுக்கு மட்டுமே
- - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (6-Sep-19, 8:36 pm)
பார்வை : 89

மேலே