வாலி என்ற வலிமையான கவிஞன்

வாளி வாளியாய் வார்த்தையை இறைத்து
வளமான கருத்துக்களால் வனப்பு செய்து
வகை வகையான பா வினால் பாடல் புனைந்து
வண்ண வண்ண சரணங்கள் செய்து

எந்நிலை நடிகருக்கும் ஏற்றத்தை பாடலால் காட்டி
எட்டுத்திக்கும் தமிழிசையின் பாட்டொலி கேட்க
எடுப்பான பாடல்களால் மிடுக்காய் அழகூட்டி
ஏகாந்த மனத்தை கேட்போருக்குள் உருவாக்கி

இலக்கணத்தை கரைத்து வார்த்து புதுபாணியில்
இலக்கியத்தையும் இதர காவியங்களையும் பதிப்பித்து
இதிகாசங்களை இலகு தமிழில் தழையவிட்டு
இவ்வுலகத்திற்கு எழில் தமிழை வளர்ச்செய்து

உருகுவோருக்கு அருமை முருகன் பாடல் செய்து
உலகாதி மக்கள் மனங்குளிர கிறுக்கு பாட்டெழுதி
உள்ளதை திரித்துக் காட்டும் திரைக்கு பா இசைத்து
உன் மனம் விரும்பாத போதும் காசுக்கு வேசியாகி

கண்ணதாசனுக்கு இணையாக கதாக்காலட்சேபம் செய்து
கருத்துள்ள பாடல்களால் காவியக் கவியாக
கன்னித்தமிழ் அன்னை மகுடத்தில் மின்னும்
திருவரங்கத்து அரங்கராசனே அகங்குளிர தொழுகிறேன்.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (6-Sep-19, 10:36 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 60

மேலே