நிலையான தீர்வு
உணர் அடர் கானகத்தில்
ஊடுருவிச் செல்லும் சாரையாய் மனம்....
இடை இடர் மின்னலாய் சில நினைவுகள்
தூவான சிராய்ப்புகளாய் தொடர.....
பதுங்கப் புதர் பக்கம் ஒதுங்க.....
பிதுங்கிச் சீறுகிறது ஆழ்மன சிறுத்தை.....
மௌனத்தை மன சிம்மாசனத்தில்
தியானத்தால் முயன்று திணித்தாலும்....
மகிஷாசுரனாய் கட்டிழந்து மீண்டும் கர்ஜிக்கிறது.....
நிம்மதி என்ற இலக்கை அடைவது
எப்போது....???
நீண்ட உறக்கம் தான் நிலையானத் தீர்வோ...????
🙏🏽இனிய காலை வணக்கம்!

