தழுவல்

கரைத் தழுவும்
படகு

பூமி தழுவும்
மரம்

அலை தழுவும்
கரை

உனைத் தழுவும்
நான்

எனைத் தழுவிய
நீ

நம்மை தழுவும்
காற்று

தழுவல் தான்
உலக

வழக்கமா..,?

எழுதியவர் : நா.சேகர் (9-Sep-19, 10:41 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thazuval
பார்வை : 354

மேலே