மழை

மழை !
கல்லூரிக்கு செல்லும்
பட்டாம் பூச்சிகளாய்
வான் மேகங்கள் !

அவர்களை ஒட்டி
உரசி கேலி பேசி
செல்லும் காற்று

கோபத்தில் முகம்
கறுத்து சூரியனிடம்
முறையிட்ட மேகங்கள் !

காற்றை அழைத்து
தண்டிக்க முடியாத
சூரியன்

புகார் கொடுத்த
மேகங்களை கோபமாய்
முறைக்க

பயத்தில் ஓடி
தப்பும் மேகங்கள்
ஒன்றுக்குள் ஒன்றாய்
மோதி கொண்டு

மோதிய வேகத்தில்
வெளிப்பட்ட மின்னல்

மின்னலை கண்டு
நடு நடுங்கிய காற்று !

சாந்தமாய் அருகில் வந்து
சமாதானம் செய்ய !

சூரியனின் கோபத்தையும்
காற்றின் சீண்டல்களையும்
பொறுக்க முடியாமல் !
ஓவென்று சிந்திய கண்ணீர்

மண்ணுக்குள் பெய்திட்ட
மாமழை !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Sep-19, 10:51 am)
Tanglish : mazhai
பார்வை : 118

மேலே