இயற்கை - தூக்கணாங்குருவி கூடு

பௌர்ணமி நிலவு
அந்த முட்புதர்களும் ஈச்சமரங்களும்
சூழ்ந்த காட்டின் நடுவே
ஓடிக்கொண்டிருக்கும் சிற்றாறு
அதன் மீது மெல்ல மெல்ல ஆடி
போய்க்கொண்டிருந்தது என் சிறு படகு
அங்கோர் ஈச்சமரத்தில் நடு நடுவே
தீப்பந்தம் போல் காட்சி தந்தது ஏதோ ஒன்று
இதோ இப்போது நான் அதன் வெகு அருகில்
படகை கரையோரம் நிறுத்தி இறங்கினேன் நான்
இதோ ஈச்சமரத்தடியில் நான் …..
நான் நிலவின் ஒளியில்
வெள்ளி மரமாய் மாறின மரத்தடியில்….
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தொங்கி கொண்டிருக்கும்
பறவையின் கூடுகளை பார்த்தேன்
அதில் மனித அரவம் கேட்டு


எட்டிப்பார்க்க வந்த மஞ்சள் கழுத்து சிட்டுக்குருவிகள் ……………. தூக்கணாங் குருவிகள் அத்தனையும்
அதன் கூடுகள் உள்ளே என்ன வெளிச்சம் அது?
லாந்தர் விளக்குபோல்…!!!!!!!!
ஆம் கிட்டே சென்று பார்க்கையில் இப்போது
புரிந்தது ...காய்ந்த புல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும்
களிமண்ணில் மாட்டிக்கொண்ட 'மின்மினி
பூச்சிக்கள்;..... இரவில் மின்னிக்கொண்டிருந்தன
லாந்தர் விளக்குபோல்…….
தூரத்தில் என் கண்ணிற்கு தெரிந்த
வெளிச்சமும் இதுவே!
தம் வீட்டிற்கு வெளிச்சம் சேர்க்க
தூக்கணாங்குருவி செய்த மாயமோ இது!

அப்படியே கூட்டை விட்டுவிட்டு
கரை வந்தேன் …. மீண்டும் படகை மெல்ல
துடிப்பால் ஒட்டிக்கொண்டு……

கற்பனையால் கவிதைப் புனையும்
கவிஞன் நான்….. வெட்கிப்போனேன்
தூக்கணாங்குருவி கூட்டின் அமைப்பை
பார்த்து ….. மனிதனால் ஒரு போதும்
இப்படியோர் வீட்டை நெய்திட முடியாது
என்னால் இதற்கொரு கவிதையும்
எழுதிட முடியாது ….

என்னே இயற்கை…..விந்தை தரும்
காட்சிகள் தந்து திக்குமுக்காட செய்கிறாய்

அசந்துபோனேன்…..இது என்ன
எங்கு கற்றன இந்த குட்டி சிட்டுக்
குருவிகள் இப்படியோர் அதிசய
கூடுகள் பின்னிப் படைக்க,,,,
ஆம் இவை வண்ண ஆடைகள் போல்
பின்னிப் படைக்கப்பட்ட கூடுகள்…..
காய்ந்த புல், வைக்கோல் இப்படி
இவற்றைக்கொண்டு இக்குருவிகள் கட்டிய
மயனும் மயங்கிடும் 'வீடுகள்'.....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Sep-19, 4:33 pm)
பார்வை : 177

மேலே