மிசாலினியின் உணர்ச்சிகரமான பேட்டி

நிருபர்: வணக்கம் மிஸ் மிஸ்ச்சிவசஸ் மிசாலினி, எங்கள் செய்தித்தாள் "டெய்லி டூப்ஸ்" உங்களை நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
மிசாலினி: நானும், மிஸ்டர் ரிப்போர்ட்டர்

நிருபர்: படங்களில் நடிப்பதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
மிசால்லினி: நான் ஸ்பூன்கள் விற்பனை செய்து கொண்டிருந்தேன்.

நிருபர்: சுமார் எத்தனை ஸ்பூன்கள் விற்றிருப்பீர்கள்?
மிசால்லினி: என்னிடம் சரியான எண்ணிக்கை இல்லை, ஆனால் ஒரு நாளைக்கு 99 ஸ்பூன்களுக்குக் குறைவாக விற்பனை ஆனதில்லை.

நிருபர்: 100வது ஸ்பூனை வாங்குபவராக நான் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மிசாலினி: இப்போதும் தாமதமாகவில்லை. நீங்கள் இப்போதும் என்னிடமிருந்து ஸ்பூனை வாங்கலாம்.

நிருபர்: ஆனால் இப்போது நீங்கள் நடிகையாகிவிட்டீர்கள், ஸ்பூன் விற்பனைக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று நான் நம்புகிறேன்
மிசாலினி: நீங்கள் சொல்வது சரிதான். இன்னும் என் வீட்டில் விற்கப்படாத கையிருப்பாக சுமார் பத்தாயிரம் ஸ்பூன்கள் உள்ளன.

நிருபர்: கடவுளே, பத்தாயிரம் ஸ்பூன்கள் விற்கப்படவில்லை. உங்கள் வீட்டில் இவ்வளவு ஸ்பூன்களை எப்படி குவித்தீர்கள்?
மிசாலினி: நான் ஸ்பூன் விற்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளராக இருந்தேன். அதனால்தான்.

நிருபர்: ஓ, இது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தியிருக்கலாம் அல்லது பாதி விலைக்கு விற்றிருக்கலாம்.
மிசாலினி: உண்மையில் நான் ஸ்பூன்களை என் வீட்டின் முன் செல்லும் ஒவ்வொரு வழிப்போக்கருக்கும் பரிசளித்து அப்புறப்படுத்தி வருகிறேன்.

நிருபர்: அப்படி விநியோகித்த பிறகும் உங்களிடம் பத்தாயிரம் ஸ்பூன்கள் உள்ளன. அப்படித்தானே?
மிசாலினி: ஆமாம். தவறுதலாக, ஸ்பூன் அட்டைகளில் உள்ள ஸ்டிக்கரில் "ஒன்றை வாங்கி இரண்டைப் பெறுங்கள்" என்று அச்சடித்துவிட்டோம். அதை ஸ்பூன் பெறுபவர்கள் "ஒன்றைப் பெற்று இரண்டை கொடுங்கள்" என்று தவறாகக் எடுத்துக்கொண்டுவிட்டனர். எனவே, நான் ஒவ்வொருவருக்கும் ஒரு பாக்கெட் ஸ்பூன்களை நன்கொடையாகக் கொடுக்கும்போதெல்லாம், அவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு என்னிடம் வந்து, அவர்களுக்கு நான் முன்பு கொடுத்ததை விட இரு மடங்கு ஸ்பூன்களை என்னிடம் கொடுத்துச் செல்கின்றனர்.

நிருபர்: இதில் ஏதோ தவறு நடந்திருப்பதாக தோன்றுகிறது. ஸ்பூன்களை நீங்கள் உங்கள் பரிசாக அவர்களுக்கு கொடுத்த பிறகு, அவர்கள் ஏன் அவற்றை உங்களுக்கு இரண்டுமடங்காக திருப்பித் தர வேண்டும்?
மிசாலினி: எனது முன்னாள் கணவர் ஒருவர் என்னிடம் ஒருமுறை கூறினார் “அந்த ஸ்பூன்களை ஒரு அனாதை இல்லம் அல்லது இரண்டாவது விற்பனை உலோகக் கடைக்கு பரிசளிக்கச் சொன்னேன். ஆனால் நீ தொடர்ந்து ஸ்பூன்களை பரிசாக அளித்துவருகிறாய். அப்படி ஸ்பூன்களை கொடுக்கும்போது அவர்களுக்கு ஒரு முத்தமும் கொடுத்துவருகிறாய். அந்த ஸ்பூன்களை இரண்டுமடங்காக மீண்டும் உன்னிடம் திருப்பி கொடுக்கும்போது அவர்களுக்கு இரண்டு முத்தம் கொடுக்கிறாய். எனவே ஸ்பூன்கள் மற்றும் உன் முத்தத்தைப் பெற ஒவ்வொரு டாம், டிக் மற்றும் ஹாரியும் ஸ்பூன்களை இரட்டிப்பாகத் திருப்பித் தர விரும்புகின்றனர்.
மேலும் உன்னிடமிருந்து இரண்டு முத்தங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நீயோ அவர்களிடம் பாகுபாடு காட்டுகிறாய். சிலர் ஸ்பூன் திருப்பி தரும்போது உனக்கு அவரை பிடித்திருந்தால் மூன்று அல்லது நான்கு முத்தங்கள் கொடுக்கிறாய். மற்றவர்களுக்கு இரண்டு முத்தங்கள் மட்டுமே தருகிறாய். ஸ்பூன் திருப்பிக்கொடுப்பவர்கள் பெண்களாய் இருந்தால் நீ அவர்களுக்கு ஒரு முத்தம் கூட கொடுப்பதில்லை. என்னுடைய பெண் தோழிகள் பலர் ஸ்பூன்களை உனக்கு திருப்பிக் கொடுத்தபோது நீ அவர்களை ஒரு முத்தம் கூட கொடுக்கவில்லை என்று புகார் கூறினார்கள்”. இப்படி என் கணவர் சொன்னது எனக்கு இன்பமான வேதனையை அளித்தது.

நிருபர்: சரி, இப்போது எனக்கு விஷயம் ஓரளவுக்கு புரிந்தது. இந்தமாதிரி சூழ்நிலையில் நீங்கள் மொத்தமுள்ள ஸ்பூன்களையும் ஒரு நேரத்தில் பரிசாக கொடுத்துவிட்டால் இந்தமாதிரி பிரச்சினைகள் இருக்காது அல்லவா?
மிசாலினி: நானும் அப்படிதான் நினைத்தேன். ஆனால் இப்போது என் கணவர் என் சார்பாக, நான் முத்தமிடாத பெண்களுக்கு அவர் முத்தமிட விரும்புகிறார்.

நிருபர்: அப்படி என்றால் ஆண்களுக்கு யார் முத்தம் கொடுப்பார்கள்?
மிசாலினி: அதைவிட எனக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லையே.

நிருபர்: ஓ, என்ன ஒரு அருமையான ஏற்பாடு. ஆமாம், உங்கள் தற்போதைய கணவரின் பெயர் என்ன”?
மிசாலினி: முசோலினி

நிருபர்: உங்கள் இருவரின் பெயர்களில் என்ன ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு! மிசாலினி, முசோலினி. இப்போது என்னிடம் ஒரே ஒரு கேள்வி உள்ளது. இப்போதெல்லாம் நீங்கள் படங்களில் அதிகம் நடிப்பதாகத் தெரியவில்லை. ஏன்?
மிசாலினி: முசோலினி மிகவும் கண்டிப்பானவர். வீட்டில் உள்ள ஸ்பூன்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தும் வரை spoonful (சில படங்களில்) படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நிருபர்: நன்றி, மிசாலினி. நாங்கள் முழு நேர்காணலையும் பார்த்துவிட்டு, எங்கள் செய்தித்தாளில், குறைந்த எடிட்டிங் மூலம் அதை எவ்வளவு சிறப்பாக வெளியிடுவது என்று ஆலோசிப்போம்.
மிசாலினி: நன்றி இனிய ரிப்போர்ட்டர். என்னை நேர்காணல் செய்ததற்கு என் தரப்பிலிருந்து ஒரு சிறிய பாராட்டு. “இந்தாருங்கள், பத்து பாக்கெட் ஸ்பூன்கள்”.

நிருபர் நடிகையிடமிருந்து பத்து பாக்கெட் ஸ்பூன்களைப் பெறுகிறார். அவர் மனதில் நினைத்து கொள்கிறார் "அடுத்த வாரமே இன்னும் பத்து பாக்கெட் ஸ்பூன்களை வாங்கிக்கொண்டு வந்து இவளிடம் இரண்டல்ல, பத்து முத்தங்களை பெற்றுக்கொள்வேன்"

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Apr-24, 11:02 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 25

சிறந்த நகைச்சுவைகள்

மேலே