பாரதி பற்றிய புதிர்கள்
1. பாரதியார் போன்று வீரம் பொங்கும் கவிதைகளை எழுதியவர் யார்?
பாரதி(யார்)
2. பாரதியாரின் தாசன் என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதி தாசன்
3. இப்போது பாரதியார் இருந்திருந்தால் அவரை ராஜாவைப்போல் வைத்திருப்பேன் என்றவர் யார்?
பாரதிராஜா
4. பாரதி பெயரை வைத்திருந்தாலும் அவரது பாடல்களை அறியாமல் இருந்த பழைய நடிகை யார்?
பாரதி
5. பாரதி அவர் மனைவியை கண்ணம்மா என்று கொஞ்சி எழுதிய பாடலின் பெயர் என்ன?
பாரதி கண்ணம்மா
6. பாரதம் ஆண் என்று வைத்துக்கொண்டால் அதன் மனைவியின் பெயர் என்ன?
பாரதி
7. பாரதியை ரதி திருமணம் செய்திருந்தால் அவள் பெயர் எப்படி எழுதப்படும்?
பா.ரதி
8. சுப்ரமணிய பாரதி , பாரதி என்றாகும் போது, ராமசுப்ரமணிய பாரதி என்னவாகும் ?
ராபாரதி
9. பாரதியார் தன் மனைவியை செல்லமாக எப்படி அழைத்தார்?
செல்லம்மா
10. பாரதியார் பத்திரிகைகளில் பணிபுரியாதிருந்திருந்தால் என்னவாக ஆகியிருப்பார்?
பாதிரியார்