கந்தன் வசந்தன் சந்திப்பு

கந்தன்: இன்னிக்கி சித்திரை பௌர்ணமி. உப்பில்லாமல் சாப்பிட்டேன்
வசந்தன்: அப்படியா. நான் இன்று மதியம் கண்மூடாமலே உறங்கிவிட்டேன்.
கந்தன்: ???

கந்தன்: நாற்பது வயசு தோனி பளார் பளார் என்று அடிப்பதுபோல உன்னால் சிக்ஸர் அடிக்கமுடியுமா?
வசந்தன்: அறுபது வயசுலேயும் தினமும் துணிகளை சலவைக்கல்லில் பளார் பளார் என்று அடித்து தோய்ப்பதுபோல் தோனியால் அடிச்சு தோய்க்கமுடியுமா?
கந்தன்: ???

கந்தன்: இப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருக்கு. இதைப்பத்தி நீ என்ன நினைக்கிறே?
வசந்தன்: செமையாக அன்று வெயில் அடித்ததால் மீதி 30 சதவிகிதம் மக்கள் ஓட்டுப்போட வரவில்லை என்று நினைக்கிறன்.
கந்தன்: ???

கந்தன்: இன்று உலக புத்தக தினம். நீ இன்று புத்தகம் ஏதாவது வாசித்தாயா?
வசந்தன்: இன்னும் வாசிக்கவில்லை. யாரிடமிருந்து புத்தகம் இரவல் வாங்கலாம் என்று யோசித்தேன்.
கந்தன்: ???

கந்தன்: ஏம்பா, இப்போதெல்லாம் நீயும் உன் மனைவியும் ஆபிசிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் வரீங்க. வேலை ஜாஸ்தியா?
வசந்தன்: அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. ஆஃபீஸிலே இருந்தா பிரீயா ஏசியில் இருக்கலாம். வீட்டுக்கு இருந்தால் பிரீல ஏசி கிடைக்குமா?
கந்தன்: ???

கந்தன்: எப்ப பார்த்தாலும் எங்க பார்த்தாலும் இந்த வடிவேலு படத்தை போட்டுத்தான் சிரிப்பு துணுக்குகள் போடுறாங்க.
வசந்தன்: ஏன்னா, வடிவேலு முகத்தில சிரிப்பே இருக்காது.
கந்தன்: ???

கந்தன்: ஏண்டா கந்தா, உன் பக்கத்துக்கு வீட்டுக்காரன்மேல ஏண்டா இவ்வளவு கடுப்பா இருக்கே?
வசந்தன்: என் மனைவி ஊருக்கு போயிருந்தப்ப ஒரு முறை, அவன் அழைத்ததன் பேரில் ஒரு முறை அவன் வீட்டில் சாப்பிட்டேன். இப்போ அவன் மனைவி பிரசவத்திற்கு ஊருக்கு போயிருக்கா. இவன் தினமும் எங்க வீட்டிற்கு வந்து ரெண்டு வேளையும் சாப்பிட்டு போறான்.
கந்தன்: ???

கந்தன்: உன்கிட்ட நூறு ரூபாய்தானே கைமாத்தாக கேட்டேன். அதற்கு என்ன பத்தாயிரம் கேட்டது போல அலறுகிறாய்?
வசந்தன்: ரெண்டுமாசத்திற்கு முன்னால உனக்கு கடனாக கொடுத்த பத்தாயிரம் ரூபாவை இன்னும் நீ திருப்பி கொடுக்கவில்லை. அப்புறம் நான் எப்படி அலறுவது?.
கந்தன்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Apr-24, 12:39 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 13

மேலே