காலத்தின் நீட்சியில் கரைந்த உன் நினைவுகள்

காலத்தின் நீட்சியில் கரைந்த உன் நினைவுகள்

உன் கள்ளமற்ற முகமும்
வெள்ளைநிற பெட்டி கோடும்
இன்னும் நினைவிருக்கிறது

அடை மழையின் மடை நீரில்
மாறி மாறி குளித்தோமே
மறந்து போனாயோ

நம் தோட்டத்து தொட்டியில்
நான் நீர் நிரப்ப
துள்ளும் மீனாய் நீயும்
கள்ளமின்றி ஆனந்த குளியலிட்டோமே

பசியோடு நான் பெஞ்சில் இருந்தபோது
என் கன்வழி காரணம் கண்டு
பன் கொடுத்து பசி தீர்த்தாயே

ஏற முடியா சுவற்றில் -நீ
எம்பி எம்பி குதித்தபோது
என் கரங்களில் கால் பதித்து
ஒரே தூக்கில் உன்னை
ஏற்றிவிட்டேனே

முயல் பொந்திற்குள் நீ
கை விட பயந்தபோது
உன் கரம்பிடித்து குழிக்குள் வைத்தேனே

உன் அண்ணனின் சண்டையால்
கண்ணே உன் விழியில் நீர் பார்த்தபோது
தனித்து அழுத்திருந்தேனே

ஒரு கயிற்றை உன் கரமும் என் கரமும்
இறுகப்பற்றி எதிரெதிரே நின்று
உந்தி தள்ளி ஆடிய ஊஞ்சலும்
கிண்டலடித்த சுவீட்டி அக்காவும்
அங்கேயே இருக்கிறார்கள்
உன்னையும் என்னையும் தவிர

கன்னாம்பூச்சி விளையாட்டில்
நீ ஒளிந்த இடம் தெரிந்தும்
மற்றவரை கண்டு பிடிப்பதை
பார்த்து மறைந்து நின்று சிரிப்பாயே

மட்டை பந்தால் மடாரென நான் அடிக்க
உன் முகம் சுருங்கையில்
மறைந்து நின்று சத்தம் வராமல்
அழ கற்றுக்கொண்டேனே

இவை அனைத்தும் இன்றும்
எனக்கு சொந்தம் ஆனால்
உன்னை தவிர

இன்றும் இதயத்தின் பிசையலில்
வரும் வலியில் ஒரு இசை
கேட்கிறது ஒருவேளை அது
அந்தநாள் காதலாக இருக்குமோ

எழுதியவர் : இளவல் (10-Sep-19, 2:43 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 85

மேலே