பிரியத்தாரகையே
என் கேள்விகளை
என் குறுஞ்செய்திகளை
வேறார் கண்டுகொள்ளாமல் போனாலும்
அதனைக் கருத்தில் கொள்ளாத மனம்,
உன்னிடம் மட்டும்
மறுமொழி வேண்டி மயங்குகிறது.
நானுனைப் பெரிதும் பொருட்படுத்துவதின்
இணை விளைவுகள் இது,
வேறொன்றுமில்லை
என் பிரியத்தாரகையே!

