உழைப்பாளரின் ஒரு கேள்வி

கற்குன்று பாறைகளைக் கைகளால் தகர்த்துக்
கண்கண்டு பாராட்டும் கட்டடங்கள் தந்தோம் ;

பொற்குகைகள், கரிச்சுரங்கம் இவைகளுக்குள் புகுந்து புது உலகக் கட்டடத்தின் அடித் தளமாய் நின்றோம்;

சற்றேனும் ஓய்வின்றி சலிப்பில்லா உழைப்பால்
சகமெங்கும் உழைப்பாளர் முத்திரையைப் பதித்தோம் ;

வற்றாத வளம் தந்த எங்களுக்கு வீதி
வளாகத்தில் சிலை செய்தீர் ; வேறென்ன தந்தீர் ?

எழுதியவர் : முத்து நாடன் (9-Sep-11, 11:34 am)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 312

மேலே