மகா கவியே மன்னித்து விடு
மகா கவியே மன்னித்து விடு
விடுதலை வேள்வியை விதைத்து
புரட்சியைப் போற்றி
பெண்மையை உயர்த்தி
ஆதிக்க மனப்பான்மையை அகற்றி
அடிமைத்தனம் அகல
அருந்தமிழ் கவிபாடி
தமிழ்த் தாயின் தவப்புதல்வனாய்
தமிழினத்தின் தலைமகனாய்
உதித்த உன்னை உயர்த்திப் பிடிக்க
நாங்கள் இன்று!
களிறு தாக்கி கடும் நோயுற்று
படுக்கையில் வீழ்ந்த உன்னை
மீட்டெடுத்து மீளுயிர் கொடுத்து
தமிழுக்கு புகழ்பாட தழைக்க வைக்க
தடுமாறிய தமிழர்யாம்
உமக்கு இறுதி யஞ்சலி
செலுத்தக் கூட மறந்து விட்டோம்
நாங்கள் அன்று! - மாபாவத்தை மன்னித்துவிடு மகா கவியே!
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
