கம்பன் Vs ஔவையார்

கம்பன் Vs ஔவையார்


தாசியும்பொன் காசுதந்து கம்பனைப் பாட்டுகேட்டாள்
காசாயிரம் பாட்டொன்றுக் கென்றதவன் ---காசுபாதி
திரட்டியும் தந்தாள் திறமையாய் கம்பன்
கிறுக்கினான் பாதிபாட் டை

(தண்ணீருங் காவிரியே தார்வேந்தும் சோழனே. (கம்பனின் பாதி வெண்பா)
மண்ணாவ துஞ்சோழ மண்ணாமே ) --- கண்டிப்பாய்
கம்பன் சுவரின்மேல் வம்பாய் நிறுத்திட
அம்புலியாய்த் தேய்ந்தாளாம் தாசி

நாள்கடந்து ஔவையுமோர் நாள்தாசித் திண்ணையில்
காலார உட்கார்ந்து மோர்கேட்டாள் --- தாள்திறந்த
தாசிமோர் இல்லையெனப் பேசிக்கூழ் தந்தாளாம்
தாசிபாடல் ஔவைகண்ட னள்

பெண்மயில் கூறஔவை தன்மன மென்மையில்
பின்மீதிப் பாடல் எழுதினாள்காண். ,,--- (பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி யாளனிந்தத் தாளணி
செம்பொற் சிலம்பே சிலம்பு.). ,( ஔவையின் மீதி வெண்பா)

அக்காலத்தில் தம்மீது புலவர் பாடப் பெற்றால் அது மிகவும் பெருமையென மனிதர்
நினைத்தனர். அவ்வாறே சோழநாட்டின் தாசி யொருத்தி கம்பன் தன்னை பாட நல்லது
நடக்கும் என்று நினைத்த தோடல்லாது செயலாக்க வும்துணிந் தாள். கம்பனிடம் சென்று
தன்னைப் பாடவேண்டும் என்று வேண்டினாள்.
கம்பனி தான் ஒரு பட்டிற்கு ஆயிரம் பொற்காசுகள் வாங்குவதாக சொன்னார். அவளிடம்
அவ்வளவு பணமில்லை. பலநாள் சேமித்தும் ஐந்நூர் பொன்காசுகளுக்கு மேல் திரட்ட
முடியாது போகவே அப்படியே ஐந்நூர் பொற்காசை கம்பனிடம் கொடுத்தாள். கம்பனோ
இதற்கு நான் பாதிப் பாடல்தான் எழுதுவேன் என்று பாதி பாட்டை தாசி வீட்டு சுவற்றில்
கிறுக்கி எழுதி விட்டுப்போய் விட்டாராம். (அந்தப் பாதி பாடல் பின் வருமாறு)
தண்ணீருங் காவிரியே தார்வேந்தும் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்ணாமே. என்று பாதிப்பாட்டை எழுதிவிட்டு கம்பன்
போய்விட்டார். இந்த முடியாத பாட்டில் தாசியின் புகழ் ஒன்றும் சொல்லப்படவில்லை.
இக்காரணத்தால் தாசி மிகவும் ஏழ்மை நிலையை அடைந்தாள். இப்படி இருக்கும் வேளையில்
ஒருநாள் தாசி வீட்டுத் தெருவிற்கு ஔவயார் களைத்துப் போய் வந்தார். வந்தவர் தாசி
வீட்டில் தாகத்திற்கு சிறிது மோர் கேட்டுள்ளார். தாசிவீட்டில் மோர் இல்லை. அதனால் கூழ்
கொடுக்கவா? என்று கேட்டு கூழை தாசி கொடுத்துள்ளார். ஔவயும் கூழைக் குடித்துப்பின்
அவள் வீட்டு சுவற்றில் கம்பன் எழுதியிருந்த பாடல் பற்றி தாசியிடம் கேட்டுள்ளார். தாசி
விவரத்தைச் சொல்ல. ஔவயார் மனம் நெகிழ்ந்து மீதிப்பாட்டை எழுதி நிறைவு
செய்தவுடன் தாசியின் காலில் பொற்சிலம்பணியும் நிலையாய் உயர்ந்ததாம். இதனால்
ஔவைக்கும் கூழுக்குப் பாடினி என்றபெயர் வந்த்தாம். விளக்கம் : விநோத மஞ்சரி எனும்
நூலில் காணலாம்..

எழுதியவர் : பழனிராஜன் (11-Sep-19, 8:16 pm)
பார்வை : 86

மேலே