கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 9

சுஜியின் தொனியில் கோபம் தெரிந்தது. நிமலனின் முகம் மாறியது. சொல்லி முடித்த சுஜி நேராய் மாடிப்படியில் ஏறி அவள் அறைக்குச் சென்றாள். நிமலன் கோவமாகி விட்டான். ஆத்திரத்தோடு படியில் நடுந்து செல்லும் சுஜியையே பார்த்துக் கொண்டிருந்தான் தன் இடுப்பில் கைவைத்தவாறே நின்றுக் கொண்டு கீழ் மாடியிலிருந்து.

நண்பர்கள் அமைந்தியாய் ஆளுக்குகோரு மூலைக்கு சென்றனர். கிரிஷ் மற்றும் ரகு நிமலன் வீட்டின் சமையலறையை நோக்கி சென்றனர். நிமலனும் சுஜியை வெறித்து பார்த்த பிறகு அங்கேயே சென்றான். அங்கே நண்பர்கள் அனைவரும் அருந்த ஏதுவாக மதுபானங்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர்.

கிரிஷ்: விடு மச்சான், நாளைக்கி பார்த்துப்போம். சொல்லிட்டே தானே, நாளைக்கி நாம போறத?

நிமலன்: செயின் போட்டு விட்டுட்டு .... செயின் போட்டு விட்டுட்டு, சந்தோசமா சொல்லலாம்னு நினைச்சேன்டா.

சுஜியின் அண்ணன் இவர்களின் பேச்சு வார்த்தைகளுக்கிடையே வந்தான்.

விமல்: உனக்கு தான் சுஜி பத்தி தெரியுமே மச்சான். கொஞ்சம் விட்டு பிடி. நான் ஏற்கனவே சொன்னே ஏன் தங்கச்சி தான் இருந்தாலும் உனக்கு செட் ஆகாதுன்னு, நீ கேட்கல. அவதான் வேணும்னு சொன்னே. இப்போ நல்லா படு. குத்துது குடையுதுனு சொல்லாத. அதே சமயம், என் தங்கச்சியையும் குறை சொல்லாத.

விமலை முறைத்து பார்த்தான் என்று சொல்ல முடியாது, இருந்தும் நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற பாரு என்பதை போல் ஒரு பார்வையை பார்த்தான் நிமலன்.

விமல்: நீ என்ன லுக்கு குடுத்தாலும் என் பதில் ஒன்னு தான். நீ பண்ண ஒரே ஒரு முட்டாள் தனமான காரியம், என் தங்கச்சிய கட்டனுதுதான்.

கீர்த்தி: என்னங்கடா நீங்க, சும்மா இருக்கறவன் கிட்ட அதையும் இதையும் சொல்லி இன்னும் நல்ல குழப்பி விடுங்க. தள்ளுங்க. நீ வாடா நிமலா...

நிமலனின் கையை பிடித்துக் கொண்டு அவனை தரதரவென மேல் மாடிக்கு அழைத்து சென்றாள் கீர்த்தி.

கீர்த்தி: நிமலா, உனக்கும் சுஜிக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்கவும் நான் விரும்பல.அது உங்க பர்சனல். ஆனா, உன்னால முடியாத பட்சத்துல, நீ இன்னோர் ஆள் உதவிய கண்டிப்பா தேடணும். ஆனா, சத்தியமா சொல்றேன், இவனுங்க பேச்ச கேட்டு கிட்டு ஏதாவது விதண்டாவாதம் பண்ணிறாத. புரியுதா...

நிமலன்: நான் தப்பு பண்ணிட்டேன். சோரி கேட்டாலும் இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிக்கறா, நான் என்னதான் பண்றது?

கீர்த்தி:தப்பு பண்ணாத...

நிமலன், கீர்த்தியை குழப்பமாக பார்த்தான்.

கீர்த்தி:ஆமாடா... தப்பு பண்ணாத. அவளுக்கு என்ன பிடிக்கலையோ அத பண்ணாத. அவ்ளோதான்...

நிமலன்: அவளுக்கு என்ன பிடிக்கல. அதான் பிரச்னை.

கீர்த்தி:டேய், அப்படிலாம் இல்லடா. அவளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவளுக்கு உன் மேல செம்ம கடுப்பு அத எப்படி காட்டறதுனு தெரியலை, அதான் இப்படி உன்கிட்ட வெறுப்பா நடந்துக்கறா... அவ்ளோதான்..

நிமலன்:எதோ, சொல்றே..

கீர்த்தி:அவகிட்ட சோரி கேளு. போ... போ... போ...

அவனின் முதுகை தள்ளியவாறே நிமலனை அவனின் அறையில் தள்ளினாள் கீர்த்தி.

நிமலன் அறையில் நுழைந்தான். சுஜி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். நிமலன் வருவதை பார்த்தாள். நிமலன் அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் கைகளை பிடித்தான்.

நிமலன்: பாப்பா, எனக்கு கொஞ்சம் டைம் குடு. எடுத்த உடனே அப்படிலாம் பாதியிலே எல்லாத்தையும் விட்டுட்டு வர முடியாது. உனக்கே அது தெரியும் தானே.

சுஜி: இதே நான் ஏறக்குறைய ஆறு வருஷமா கேட்கறேன். எந்த மாற்றமும் இல்லை. காதல், நிச்சியம், பரிசம், கல்யாணம் எல்லாம் முடிஞ்சிருச்சி. ஆனா, நீ சொன்னது மட்டும் நடக்கலையே.

நிமலன் அமைதியாய் இருந்தான். தலை கவிழ்த்து.

சுஜி: உனக்கு நல்லாவே தெரியும், எனக்கு இந்த அடி தடிலாம் சுத்தமா பிடிக்காது. உன்ன நான் இஷ்டப்படும் போது எனக்கு இதெல்லாம் தெரியாது. நம்ப ரிலேஷன்சிப் நெருக்கமா ஆகும் போது எனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் கண்ணு தெரியாத குருடியாட்டம் ஆயிட்டேன்.

பேசிக் கொண்டிருந்தவளை மேலும் பேச விடாமல் இருக்கி அணைத்துக் கொண்டான் நிமலன்.

சுஜி: விடு நிமல்... விடு... நீ இப்படிலாம் பண்ண. ..

பேசியவளின் உதட்டை அவன் உதட்டோடு வைத்து முத்தமிட்டான்.

சுஜிக்கு அவனுடனான, ஆம்; அட்லசுடனான அவளின் முத்தம் கண் முன் வந்து நின்றது. அமைதியாக நிமலனின் முத்தத்தை வாங்கி கொண்டவள், அவன் அணைத்த போது அப்படியே அவன் அணைப்பில் சாய்ந்தாள். அவள் எண்ணமெல்லாம் அட்லஸ் மட்டுமே நிறைந்திருந்தான்.

அணைப்பிலிருந்தவளை வருடிக் கொடுத்துக் கொண்டே சொன்னான்,

நிமலன்: நாளைக்கி நாம எல்லாம் ஐஸ்லாந்து போக போறோம். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. அஞ்சி நாள் நல்ல ஜாலியா சுத்த போறோம். உனக்கும் வரிசையா எல்லாம் பப்லிக் ஹாலிடே தானே.

நிமலன் சொன்னதை கேட்டு விருட்டென அவன் நெஞ்சிலிருந்து தலையை தூக்கி அவனை பார்த்தாள் சுஜி.

சுஜி: அஞ்சி நாளைக்கா? எப்படி முடியும்?

நிமலன்: ஏன் முடியாது? உனக்கு ஏதாவது வேலை இருக்கா?

சுஜி: இல்ல... யோகா கிளாஸ்.. ஸும்பா கிளாஸ்..சும்மிங் கிளாஸ்..

நிமலன்: நீ எந்த கிளாஸ் பத்தியும் கவலைபட வேண்டாம். எல்லாம் நான் பேசிட்டேன்.

சுஜி: பேசிட்டியா?

நிமலன்: ஹ்ம்ம்... பேசிட்டேன். ஒரு பிரச்சனையும் இல்லே.

சுஜி: அதெல்லாம் சும்மா பேச்சு. உன் கிட்டத்தான். அப்பறம் நான் கிளாஸ்கு போனா ஏதாச்சம் சொல்வாங்க.

நிமலன்: அடியே, என் பொண்டாட்டி. நீ நிமிலன் குரூப் கம்பெனியோட டைரக்டர்டி. உனக்கு வேணும்னா ஆயிரம் கிளாஸ் நீயே நடத்தலாம். அத விட்டுட்டு இப்படி பத்துல பதினொன்னா இருக்கறேன்னு சொல்றியே...

கிரிஷ்: டேய் மச்சான், என்னடா பண்ற மேல? வாடா கீழே சீக்கிரம்.

கிரிஷ் குரல் நிமலனின் அறை வரை கேட்டது.

நிமலன்: வரேன்டா ... இரு. சுஜி, நான் முதல்ல போறேன்.

நிமலன் சென்ற உடன், சுஜி அறையின் கதவை தாழ்பாள் போட்டாள். அவளது போனை எடுத்து அட்லஸை அழைத்தாள். எவ்வளவு அழைத்தும் அவன் எடுக்கவில்லை. தூங்கி விட்டான் என தெரிந்துக் கொண்டாள்.

இருந்தும் அவளால் பொறுக்க முடியவில்லை. கட்டிலில் அமராமல் கீழே தரையில் அமர்ந்துக் கொண்டு சுவற்றோடு ஒட்டிக் கொண்டு அழுகையோடு தனக்குத் தானே பேசியவாறு மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

சுஜி: அட்லஸ், பிளீஸ் போன் எடுடா.. என்னால அஞ்சி நாளைக்கி உன்கூட பேச முடியாதுடா... போன் எடுடா பிளீஸ்...அட்லஸ் பிளீஸ்... எடுடா... போன் எடுடா...பிளீஸ்...

அவனுக்கு வைஸ் நோட்ஸ் அனுப்ப ஆரம்பித்தாள். வட்ஸ் ஆப்பில்.

சுஜி: அட்லஸ், நான், நிமலன் எங்க பிரண்ட்ஸ் எல்லாம் அஞ்சி நாளைக்கி ஐஸ்லாந்து போறோம். அங்கே போனா உன் கூட பேச முடியுமான்னு கூட எனக்கு தெரியல. அப்படி பேச முடியாட்டி எப்படித்தான் நான் இருக்க போறேன்னு தெரியல. என்னால நினைச்சி கூட பார்க்க முடியல.

ஐ லவ் யூ சோ மச் அக்கீர். ஐம் எம் கோயிங் டு மிஸ் யூ சோ மச். ஒழுங்கா சாப்புடு. ஜிம்முக்கு போ. நான் இல்லேன்னு அந்த கவிகிட்ட ரொம்ப தொங்காத. நான் கண்டு பிடிச்சேன், உன்னே சாகடிச்சிருவேன். மம்மிகிட்டே மறக்காம பேசு. வேணிக்கு கால் பண்ணி பேசு. ஐ லவ் யூ..கிருக் ..... கா....... ஐ லவ் யூ.

அவ்வளவு முத்தங்களை அந்த வைஸ் நோட்ஸில் பதிவு பண்ணி அத்தனையையும் அவனுக்காக அனுப்பி வைத்தாள்.

மறுநாள் விடிந்தது.

சுஜி இரவெல்லாம் தூங்காமல் மிகவும் கஷ்டப்பட்டாள். போனை எடுத்துக் பார்த்தாள். பயனில்லை. அட்லஸ் இன்னும் எழவில்லை. ஆயிரம் முறை அழைத்தாலும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தது. குளித்து முடித்து கிளம்பினாள். வீட்டின் வேலைக்காரி அம்புஜம் வந்தார்.

அம்புஜம்: அம்மா, துணிலாம் எடுத்து வெச்சாச்சு. தம்பி, சொல்லிட்டாரு. எதுக்கும் நீங்க ஒரு தடவ பார்க்கறீங்களா?

சாத்தியிருந்த சூட்கேஸை திறக்கப் போன அம்புஜத்தை வேண்டாம் என்று தடுத்தாள் சுஜி.

சுஜி: எல்லாரும் கிளம்பிட்டாங்களா? நிமல் எங்க?

அம்புஜம்: தம்பி போன்ல யார்கிட்டையோ பேசிகிட்டு இருக்கு. அஞ்சி நாளைக்கி போறிங்களே, அதான் எல்லார்கிட்டையும் வேல சொல்லுது போல. தம்பி இல்லனா இங்கதான் ஒன்னும் ஓடாதே.

சுஜி: காலையிலே உங்க தம்பி புராணமா? மத்தவங்க எங்க?

அம்புஜம் பதில் சொல்லும் முன் சுஜியின் அறை கதவை கீர்த்தி தட்டினாள். நேற்று இரவி அனைவரும் இங்கேயே தங்கி விட்டனர்.

அது ஒரு பெரிய வீடு. ஐந்தாறு அறைகள் கொண்ட மாளிகை அது. சாதாரண மாளிகை அல்ல. பிரமாண்ட வேலைப்பாடுகளுடன் வெளியூரின் தலைச் சிறந்த கட்டிட கலைஞர்களை கொண்டு கட்டப்பட்டது, திரு கஜேந்திர சூரனால். ஆம், நிமலனின் அப்பா கஜேந்திரனால் அவர் மகனுக்கும் அவரின் மருமகள் சுஜிக்கும் கல்யாண பரிசாக வழங்கப்பட்ட மாளிகைதான் அது.

வீட்டின் உள்ளே லிப்ட் வசதி. அனைவருக்கும் ஏதுவாக. பத்து வேலையாட்கள், சமையல் செய்ய, துணி துவைக்க, தோட்டத்தை பராமரிக்க, இப்படி எல்லா தேவைகளுக்கும் அடுக்கி கொண்டே போகலாம்.

கீர்த்தி வெளியே இருந்தப்படியே கேட்டாள்,

கீர்த்தி: சுஜி கிளம்பியாச்சா? நாங்க எல்லாம் ரெடி. நீ சீக்கிரம் வா. இல்லே, ஏர்போட் போக லெட் ஆகிடும். ஓகே வா.

சொல்லிவிட்டு அவள் நகர்ந்து விட்டாள். சுஜி விறுவிறு என்று தன் பொருட்களை சரி பார்த்துக் கொண்டே எதற்ச்சையாக முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் தன் முகத்தைப் பார்த்தாள். உதடு வெறுமென இருந்தது. அவசர அவசரமாக உதட்டு சாயத்தை எடுத்து உதட்டில் அடித்தாள். அட்லஸின் ஞாபகம் வந்தது அவளுக்கு.

ஒருமுறை, இப்படித்தான் அவன் வீட்டு கண்ணாடியின் முன் அவள் அமர்ந்து, தான் புதிதாய் வாங்கி அணிந்திருந்த பட்டுப் புடவையை கட்டி தன்னைத் தானே ரசித்துக் கொண்டிருந்தாள். அவளை புடவையில் பார்த்துக் கொண்டிருந்த அட்லஸ் அவளின் பின்புறமாய் வந்து நின்றான். இருவரின் நெருக்கத்திலும் ஒரு இடைவெளி.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 12:48 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 153

மேலே