என் முகமில்லாத உன் முகநூல்

ன் Facebook இல்
என் முகவரி இருக்காது!
உன் WhatsApp இல்
நான் வாஞ்சைக்குரியவனில்லை!
உன் Viber இல்
நான் சைபர்!
உன் வீட்டு விருந்துகளில்
நான் உறவில்லாதவன்!
கடத்தியில்லா கண்ணியம் (Wireless Fidelity)
என் காதலுக்கிருக்கிறது
என்ற எண்ணத்தில்
உன் மனசுக்குள் புகுந்தேன்
என்ற மாயையால்
வலிகளைத் தாராளமாய்
வாங்கிக்கொண்டிருக்கிறேன்!
Online ஆகவிருந்து
Offline ஆனது
நானா எனது காதலா?
- மீனாள்செல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (24-Sep-19, 1:14 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 67

மேலே