சிட்டு குருவி .......

தத்தி தத்தி ஓடுமடி
மின்சாரக் கம்பிகள் மேல்
தகிடு தாளம் போடுமடி.

மொட்டைமாடி
வெட்டவெளியினில்
வெள்ளம்போல ஆடுமடி ..

கிட்ட கிட்ட
நாம் செல்ல - அது
எட்ட தூரம் ஓடுமடி ...

மாலைவேளை
வந்துவிட்டால் - கண்டு
கூட்டம் கூடி பாடுமடி ....

திண்ணையில்
தானியங்களும் சிதறிவிட்டால்
ஒன்றுகூடி உண்ணுமடி.....

ஒற்றுமையை
ஒற்றுமையாய்
ஒருசேரக் காட்டுமடி......

இன்றுநானும்
தேடுகிறேன் - ஒற்றை
சிட்டை கூட காணுமடி.....

காரணம் அறிவியலின்
வளர்சியனால் -அதன்
இனவிருத்தி இல்லையடி.........

தண்ணீரும் இன்று இல்லை
ஒற்றை தானியமும்
அதற்க்கு கிடைப்பதில்லை,,,,,

கைப்பேசி கோபுரங்களால்
அதற்கு வந்திட்டதாம்
நோய் நொடி தொல்லை .......

கதிர்வீச்சு
அலைகளினால் - அதன்
கர்பப்பையும் கனிவதில்லை ,,,,,

நகரங்களில் மரங்கள் இல்லை
நவீன வீடுகளால் வந்தமர
பொந்தும் இல்லை ...........

இந்த நிலை
தொடர்ந்துவிட்டால்
சிட்டு குருவி நாட்டில் இல்லை ....

இன்னும் இன்னும்
செல்ல செல்ல நாளை
மனித இனமும் உலக ஏட்டில் இல்லை.......

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (10-Sep-11, 10:34 am)
பார்வை : 2109

மேலே