வாசமில்லா ரோஜா

அடி! வாசமில்லா ரோஜா,
உனக்கு ஏதடி ராஜா,
பல வண்டுகள் உன்னை மொய்க்க வாசமிழந்த ரோஜா,
கழுத்தில் ஏறிய தாலிக்கு மதிப்பில்லை என்னும் போது வேலி எங்கே பயிரைக் காக்கும்?
பயிர் எங்கே வளமாயிருக்கும்?
வீதியில் நீ நிமிர்ந்து நடக்க தீச்சொல்லும்
உன்னை தீண்டாதோ நரகான கலாச்சாரத்தில்?

அடி! வாசமில்லா ரோஜா,
கொஞ்சம் யோசித்துதான் பாரெண்டி,
கண்ணே! மணியே! கற்கண்டே!
பொன்னே! ஒளியே! அழகு ஓவியமே!
என்று கொஞ்சுவோரெல்லாம் கொஞ்சக் காலம் தானடி!
தோல் சுருங்கி தொய்வான பின்னே கிழவி என்று கூறுவார்,
அருகில் நாடி வாறார்.

அடி! வாசமில்லா ரோஜா,
உனக்கு ஏதடி ராஜா,
காம உணர்ச்சியைத் தாண்டி உல்லாசமாய்
நீ வாழ,
உன் ஒழுக்கம் மூச்சுத்திணறி மூப்படைஞ்சு மாண்டு போக ஒழுக்கமில்லா நீ என்றுமே வாசமில்லா ரோஜாதான்.
உன்னை நாடிய வண்டுகள் எல்லாம் வலிய உன் விசமுண்டு சாகுகின்றன.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Sep-19, 1:11 pm)
பார்வை : 3328

மேலே