பய நோய்

தளர்ந்த மனதிடம் தைரியம் சொல்லும் மனமே தளர்ந்துவிட்டால் தெய்வம் என்ன செய்யும்?
உடலாடவில்லையம்மா,
மனசாடுது, ஒவ்வொரு அடியிலும் தடுமாறி விழுந்திடுவோ என்ற பயத்தில் ஆடுது!

கடவுள் இல்லை,
நானே கடவுள் என்றவனையும் சக்கரநாற்காலியே தஞ்சமென்று ஆக்கிடும் இந்த பயம்.
கடவுள் உண்டென்பார், தினமும் கடவுளை வணங்கி நிற்பார்.
தன் பயத்தைக் கொல்லார்,
பயத்தால் எழும் கவலைகளைக் கொல்லார்,
மூப்பில் மூழ்கி நடவாது படுக்கையில் வீழ்ந்து பாடையில் போவாரே.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Sep-19, 9:06 am)
Tanglish : paya noy
பார்வை : 2785

மேலே