உன்னை உன்னிடம் கேட்பேன்

உன்னை உன்னிடம் கேட்பேன்
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்
கடவுளிடம் கூட அல்ல...

Insta Id : @tanishatashanta

எழுதியவர் : தீப்சந்தினி (26-Sep-19, 3:58 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 301

மேலே