உன்னுள் கலந்துவிட்டேன்

உன்னுள் கலந்துவிட்டேன்!

தடுக்க முடியவில்லை என்னால்
ஏனென்றால் என் பெண்மையை மறந்தேன் உன்னால் !

என் புருவங்களின் நெளிவுகளிருந்து
இதழ்களின் அசைவுகளிலுருந்து
கூந்தல் போர்வையிலுந்து
நீ கற்றுக்கொண்டாய் எனக்கான காதலை என்னிடம் தந்தாள்
தடுக்க முடியாது என் பெண்மையின் அழகை .

நட்சத்திரம் கூட கண் இமைக்கும் நேரத்தில்
மரங்களின் இலை கூட வெட்கப்பட்டு தலை குனியும் தருணத்தில்
நான் கலங்கமானேன்... என் கண் இமை தாண்டியும் எப்படியடா வந்துபோனாய்!

உன் கண்களுக்கு இறை ஆனேன் கண் இமைக்காமல்
நீ என்னை சுவைக்க இதழோரம் வரும் வெட்கம் போடும் என சொல்ல மறுத்த தருணத்தில்!

குழல் வசிக்கும் கவிஞனாய் நீ குழலில் உள்ள எல்லா துளைகளையும்
உன் இதழோடு ஒன்றி வாசிக்க பெருமை பட்டது இந்த குழல்
எத்துணை அதிஷ்டம் அடைந்தவள் என்று !

உன் தேக ஆன்ம என்னுளே கரையும் பொழுது என் ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு உன் மூச்சு காற்றும் ஆசையாக உலர்ந்து
சூடான உன் மூச்சால் என் தேகம் சில்லான மாறி
பிரியா விடை கொடுத்தது என் வெட்கம் !

வார்த்தைகளுக்கு கூட நேரம் இல்லை என்றாலும்
கண்களின் எமை கூட சொர்க்கத்தில் இருந்தாலும்
என் மூச்சுக்காற்று உன்னிடம் சொல்லும்
உன்னுள் கலந்துவிட்டேன் என்று !!!!!

எழுதியவர் : தாரணி ஸ்ரீ (27-Sep-19, 9:05 am)
சேர்த்தது : ஸ்ரீ
பார்வை : 80

மேலே